Sunday, September 9, 2007

சக் தே இந்தியா

சக் தே இந்தியா
ஹிந்தி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.ஒரு நல்ல ஹிந்தி படம் பாக்கணும் போல இருந்த்து.அப்போ தான் முன்னாடி நாள் ச்க் தே இந்தியா பத்தி ப்ரண்ட் சொன்னது நியாபகம் வந்தது.
சரி என் ரூமி யோட சேர்ந்து இந்த படத்த பார்க்க ஆரம்பிச்சேன்.
பொதுவா யாஷ் சோப்ரா படம் னா ரொம்ப பிரம்மாண்டமா இருக்கும்.அது படி பார்த்தா இந்த படமும் ஒரு நல்ல கதையம்சத்தோட இருக்குறதால பிரம்மாண்டமா இருந்தது.
முதல்ல இப்படி ஒரு கதை ய choose பண்ணதுக்காக ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும் ந்ம்ம சோப்ரா க்கு.அப்புற்ம் அந்த பொண்ணுங்க....எல்லாருமே ரொம்ப நல்லா ந்டிச்சிருந்தாங்க.....சாரி....விளையாடி இருந்தாங்க......!!
இந்த படம் ஷாருக் கு நல்ல பேரு வாங்கி தந்திருக்கு.வயசானாலும் ந்டிப்புல "பர்தேஸ்" விட ந்ல்ல பண்ணிருக்கார்.அவர் பேசுற வசன்ங்களும் கூட ரொம்ப நல்லா இருக்கு.முக்கியமா போட்டி போகுறதுக்கு முன்னாடி அவர் பொண்ணுங்கள அட்ரஸ் பண்ற ஸீன் ரொம்ப பிரமாத்ம்.நான் கூட சரி ஒரு 5 நிமிஷத்துக்காச்சும் பேசி மொக்கை போடுவாரு நினைச்சேன்.ஆனா சுருக்கமா "இந்த 70 நிமிஷம் தான் உஙக வாழ்க்கையிலே முக்கியமான தருணம்" னு சொல்லி ரொம்ப சிம்பிளா முடிச்சிருந்தது நல்லாயிருந்தது.
அப்புறம் அந்த பொண்ணுங்க ஒவ்வொருத்தருடைய இன்ட்ரோ வுமே சூப்பர்.அதுலயும் அந்த ஆட்டோ காரரோட சண்டை போடுறது ரொம்ப ரியலா இருநதது.
அதே போல,"ஹாக்கி யெல்லாம் ஒரு விளையாட்டுனா நம்ம கல்யாண்த்த தள்ளி போட சொல்லற"...இந்தியன் கிரிக்கெட் கேப்டன் மாப்பிளை கேட்கிறது நம்ம நாட்டுல ஹாக்கிய எந்த அளவுக்கு மக்கள் மறக்குறாங்க கிறதே
ரொம்ப நல்லா காட்டுது.
உங்களுக்கு ஹிந்தி புரியும் னா கண்டிப்பா இந்த படத்த பாருங்க!!!!
(பின் குறிப்பு:
என்னடா இவ? தமிழினி னு பேரு வச்சுக்கிட்டு ஹிந்தி படம் பார்க்க சொல்றாளே யோசிக்கிறிங்களா???
நல்ல விஷயம் எங்க இருந்தாலும் பாராட்டுற்து தானே தமிழர் மரபு....(ஸ்ஸ்ஸபா.......என்னவெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு!!!!)...... :))) )

Sunday, September 2, 2007

அழகிய திருச்சி ந்கரினிலே....

நான் பிறந்தது சிங்கார சென்னை என்றாலும், என்னோட முன்றாவது வயசுலயே நாங்க குடும்பத்தோட திருச்சி போயிட்டோம்.
திருச்சி பத்தி ஒன்றுமே தெரியாதவங்களுக்காக தான் இந்த பதிவு :
1)திருச்சி னாலே முதல்ல நம் ஞாபகத்துக்கு வரது மலைக்கோட்டை தான்.
நான் முதல்ல தடவ போன போது,என்னை ரொம்ப கவர்ந்தது தாயுமானவர் சன்னதி தான்.அங்க நந்தி சிலைக்கு பின்னாலே ஒரு இடம் இருக்கும்.அங்க நின்னு சாமி பாக்குறது ஒரு தனி சந்தோஷம்.நான் அடிக்கடி போற கோயில் மலைக்கோட்டை தான்.அதே போல திருச்சி லே இருக்குற ஒவ்வொரு கோயிலுமே ரொம்ப ஸ்பெஷல் தான்.திருவரங்கம் ரங்கநாதர் கோயில்,சமயபுரம் மாரியம்மன் கோயில்,தென்னூர் நாச்சியார் கோயில்,வெக்காளி அம்மன் கோயில்,திருவானைக்காவல்,வயலூர் முருகன் கோயில்,கல்லுகுழி ஆஞ்சநேயர் கோயில் இன்னும் பல....
2)காவேரி தண்ணி.அதுவும் 24மணி நேரமும்.
3)கோயமுத்தூர் பிஸினஸ் சென்ட்டர் னா திருச்சி எஜுகேஷன் சென்டர்.நிறைய பள்ளி,கல்லூரிகள் இருக்கு.NIT (National Institute of Technology) யும்,கி.ஆ.பெ மருத்துவ கல்லூரி யும் கூட இருக்கு.
4)பேருந்து வசதி: சென்னை ல் இருக்குறதெல்லாம் பேருந்தா??திருச்சி ல போய் பாருஙக.........சும்மா சூப்பரா இருக்கும்.ட்ராபிக் குட கம்மி தான்.....சென்னை ல மழை பெய்யும் போது பேருந்து குள்ள இருந்தா தான் நனைந்து போறோம்.திருச்சி ப்ரைவேட் பஸ் களும் இருக்குற்தால போட்டி போட்டு வசதி பண்ணி வச்சிருப்பாங்க!!
5)தமிழ்நாட்டோட மத்தி ல இருக்குறதால தொழில் தொடங்க இது ஒரு நல்ல ஊர்.ரயில்வே ஜங்ஷன் இருக்கு.....அது தவிர 2 பெரிய பஸ் ஸ்டாண்ட் இருக்கு....!!!
6)திருவரங்கத்து அரவணை,அசோகா ஸ்வீட்- இனிப்புகள் இது ரெண்டு மே திருச்சி யோட ஸ்பெஷல் லான இனிப்பு வகைகள்.திருவரங்கன் கோயிலுக்குள்ள கிடைக்கும்.
எல்லாத்தையும் விட,எங்க மக்கள் அன்பானவங்க....................நாங்களெல்லாம் நல்லவங்க!!!!!!!