Showing posts with label சிந்தனை செய் மனமே. Show all posts
Showing posts with label சிந்தனை செய் மனமே. Show all posts

Monday, October 10, 2011

சிந்தனை செய் மனமே - 3


பகல் பத்தரை மணியிருக்கும்...என் சென்னை தோழியிடமிருந்து ஒரு அழைப்பு..."இவ வேலை நேரத்துல கூப்பிட மாட்டாளே....என்னவாயிருக்கும்..."யோசித்து கொண்டே அவளை அழைத்தேன்..."சீக்கிரமா obituary மெயில் ல பாரு...உன் மைசூர் சிநேகிதர் இறந்துட்டார் ..."தூக்கி வாரி போட்டது எனக்கு...அவசரமாக மெயில் களில் தேடினேன்..."அய்யயோ...அவரே தான்..."..என் மைசூர் நண்பர்...சுமார் முப்பது வயதிருக்கும்...காதல் திருமணம் புரிந்து சமீபத்தில் தகப்பனும் ஆகிவிட்டார்...மைசூர் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டபோது அவர் புற்று நோயால் மரணம் அடைந்தார் என்றும் தெரிய வந்தது...அவர் புகைக்கும் பழக்கமுடையவர் என்பது எனக்கு தெரியும்..ஆனால் புற்று நோயால் பாதிக்க படும் அளவிற்கு புகைத்து இருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை.

என் தோழர்கள் பலரையும்,ஓரிரண்டு உறவினர்களையும் இந்த பழக்கத்திற்கு காவு கொடுத்துவிட்டேன்.இனியும் யாரையும் இந்த பழக்கத்திற்கு காவு கொடுக்க நான் தயாராய் இல்லை.



புகைப்பதால் என்ன ஆகும் என பலமுறை புகைப்பவர்களிடம் கேட்டதுண்டு...எல்லாம் ஒரு கிக்கு தான்...என்று பதில் வரும்..."அப்போ அதுனால கேன்சர் வரும் போது"...."அதெல்லாம் வராது"...இப்படி தான் பதில் வரும்...அப்படியே மீறினால் "நீ எண்பது வயசு வரைக்கும் இருந்து என்ன சாதிக்க போற??."அதை பார்க்கவாவது நீ இருக்கணுமே" என்று சொல்லி இருக்கிறேன்...ஆனால் அதில் இருவர் இன்று இல்லை...

புகைக்க தொடங்கியதும் மூளைக்கு எடுத்து செல்ல படும் ரத்தத்தின் அளவு குறைகிறது...சிகரட்டின் மூல பொருளான நிகோடின் இந்த வேலையை செய்கிறது...இதனால் மூளையில் ஏற்படும் மந்த நிலையின் காரணம் அந்த "கிக்" ...போதை...நாளடைவில் போதையின் தேவை அதிகரித்து போவதால் எடுத்துகொள்ளும் புகையின் அளவும் அதிகரித்து....இதனால் நுரையிரலில் தார் படிவது தொடங்கி பற்களில் காரை ஏற்படுவது வரை ஏராளமான உபாதைகள் இலவசம்..புற்றுநோய் வரும் அளவிற்கு உடல்நிலை பாதிக்க படுகிறது...
அதுமட்டுமில்லாமல் மறதியில் தொடங்கி குழந்தை பேறின்மை வரை புகையினால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.

ஸ்டைலுக்காகவும்,என்னதான் இது என்று பார்க்கவும் ஆரம்பிக்கும் பழக்கமானது உயிரையே குடித்துவிடும் அபாயத்திற்கு கொண்டுசென்று விடுகிறது...சமீபத்தில் பெண்களும் புகைக்க தொடங்கியதும் ஒரு பெரும் அதிர்ச்சி...இதுலுமா 33%.....?!...வேண்டாம் தாயே...

ஒரு வேளை இந்த பதிவை படிக்கும் தாங்கள் புகைப்பவரெனில்,இந்த பதிவை படித்து விட்டு அடுத்த முறை சிகரெட்டை கையில் எடுக்கும் போது உங்கள் அன்புக்குரியவர்களை எண்ணி பார்த்து..."ஐயோ...வேண்டாம்"..என்று தோன்றினால்....அதுவே எனக்கு கிடைத்த வெற்றி.

புகை பழக்கத்தினால் புற்றுநோய் இரையாகி உயிர் துறந்த என் இரு நண்பர்கள் மஞ்சுநாத் மற்றும் எழிலரசன் அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..

Friday, July 25, 2008

சிந்தனை செய் மனமே-2 : அப்டேட்

என் தோழி அவளது வீட்டில் பேசியிருக்கிறாள்.அவளது பெற்றோரும் அவளுக்கு இந்த வரனில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்டு,மாப்பிள்ளை வீட்டில் எடுத்து சொல்லிவிட்டனராம்...

இதற்கிடையில்,அந்த தோழிக்கு வந்த வேறொரு வரனின் ஜாதகம் ஒத்து போக அந்த வரனையே அவளுக்கு பேசி முடித்து விட்டனர்...ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்,இந்த முறை வரதட்சணையை பற்றியே பேச்சே வரவில்லையாம்....என் தோழியும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்...

என் உயிர் தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......

Friday, July 18, 2008

சிந்தனை செய் மனமே -2


பர பர னு வேலை பார்த்துகிட்டு இருந்த ஒரு செவ்வாய் கிழமை காலையில் அந்த கல்லூரி தோழியிடமிருந்து போன் வந்தது...பேசி கொஞ்ச காலம் ஆகியிருந்த காரணத்தால்,க்யுபை விட்டு வெளியே சென்று மீண்டும் அவளது செல்லுக்கு போன் செய்தேன்...



"ஹே....சொல்லு ....எப்படி இருக்க...??"..இது நான்..



"நல்லா இருக்கேன்...போன எடுக்கலனதும் பிசியா இருக்க னு நெனச்சேன்....என்னடி டிஸ்டப் பண்ணிடனோ??.."...வழக்கமா அவ கேட்குற கேள்வி தான் இது...



"ஏய்..அதெல்லாம் பரவா இல்லே...சொல்லு..."...பிசியா இருக்குறதா பொதுவா யார்கிட்டயும் சொல்றதில்லே....



"ஹ்ம்ம்...ஏய் எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்காங்க வீட்டுல..."...சொல்லும் போது கூட குரலில் சந்தோஷமே இல்லாமலிருந்தது,எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது ....



"ஏய்...காங்கிராட்ஸ்"...நம்ம கடமையை ஒழுங்கா செய்வோமே....



"அட நீ வேற டி..."..ரொம்பவே அலுத்துகிட்டா..



"......." எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில...



"எனக்கு என்ன கொறச்சல் னு நீ நினைக்குற.."....கொஞ்சம் உணர்ச்சிவச பட்டு பேசுறா னு மட்டும் தெளிவா புரிஞ்சது...



"ஏய்...என்னாச்சு..ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு இப்படி என்னைய போட்டு குழப்புற...என்ன தான்னு கொஞ்சம் தெளிவா சொல்லுடி..."...செய்து கொண்டிருந்த scripting மெல்ல மெல்ல submind க்கு transfer வாங்கிக்கொண்டு போனது...இப்போது என் தோழி மட்டுமே என் நினைவில் இருந்தாள்...இவள எப்படி சமாதான படுத்தறது னு மட்டுமே மூளைக்குள் யோசனை ஓடிகொண்டிருந்தது...



"மாப்பிள்ளை வீட்டில் 200 பவுன் நகையும்,5 லகரம் ரொக்கமும் வாங்கிகிட்டு தான் என்னைய ஒத்துக்கிட்டாங்க..."...சொல்லும் போது குரலில் அத்தனை கோபம்...



"இது தான் உங்க caste ல சகஜம் ஆன விஷயமாச்சே...நீ தான் காலேஜ் டேஸ் லையே சொல்லுவியே..." ...பழசை அசைப்போட்டு அவளை சமாதான படுத்த விளைந்தேன்....



"இருந்தாலும் 5 லட்சம் ரொம்ப அதிகம் தான டி..."...இந்த கேள்விக்கு நான் என்ன சொல்லுறது..



"அதிகம் மாதிரி தான் டி தெரியுது..."..அந்நியன் பட சொக்கன் மாதிரி பதில் சொன்னேன்...


"....இதுல நான் வாழ்க்கை பூரா வேலைக்கு போய்க்கிட்டே வேற இருக்கனுமாம்..."...


அவள் சொல்ல சொல்ல எனக்கே கோபம் வந்தது...


"நிச்சயம் முடிஞ்சுருச்சா..???" கொஞ்சம் கடுப்பாக தான் கேட்டேன்...


"இல்ல ...இல்ல...நிறுத்திடவா???"...பொண்ணு செம சீரியஸா என்கிட்டே கேட்டா....



"இல்ல...இல்ல..கொஞ்சம் பொறுமையா இரு...உங்க அப்பா,அம்மா கிட்ட பேசு...அவங்க கிட்ட உன் மனசுல தோணுறத சொல்லி...புரிய வைக்க ட்ரை பண்ணு..."..நான் அவளுடைய நிலையில் இருந்தால் என்ன செய்வேனோ,அதையே அவளுக்கு அறிவுறுத்தி...உடனே ஊருக்கு போக சொன்னேன்...



அவளும் அப்படியே செய்வதாக சொல்லி...போனை வைத்தாள்....
இப்படி எத்தன பேர் என்கிட்டே பொலம்பி இருக்காங்க னு நான் சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்...

நான் எல்லாரையும் குறை சொல்லல....நல்லவங்களும் இருக்காங்க..ஆனா,மெஜாரிட்டி ஆளுங்க நான் சொல்ற மன நிலையோட தான் இருக்காங்க....



இதெல்லாம் கூட பரவா இல்லே...எங்க குழந்தை பெத்துகிட்டா மனைவி வேலைக்கு போக மாட்டாளோ னு பயப்படுற ஆளுகளும் இருக்காங்க னு நான் சொன்னா நீங்க நம்புவீங்களா???ஆனா இது உண்மை......எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில இப்ப இதான் நடந்துக்கிட்டு இருக்கு...



இத தட்டி கேட்க பெண்ணுடைய பெற்றோர் போனாங்கன்னா,"பொண்ண பெத்தவங்க தானே...பொறுமையா இருக்க வேண்டியதானே..."...னு சொல்ல வேண்டியது...இந்த மாதிரி பேசுறவங்கள நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புறேன்...."உங்க பையன விட அந்த பொண்ணு எந்த விதத்துல குறைச்சல்???...."...சொல்ல போனா நீங்க பையன வளர்க்க என்ன கஷ்ட பட்டிங்களோ,அது போல பத்து மடங்கு கஷ்ட பட்டவங்க ஒரு பொண்ண பெத்தவங்க.....தயவு செஞ்சு இனிமே பொண்ண பெத்தவங்க தானே னு ஏளனமா நினைக்காதிங்க...அவங்க நினைச்சா உங்க குடும்பத்தையே புரட்டி போட முடியும்...



வரதட்சணை வாங்கிகிட்டு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா,அந்த பொண்ணு உங்களை எப்படி மதிப்பா???...ஒரு விலை கொடுத்து உங்களை வாங்கிட்ட மாதிரி தான நினைப்பா???



"நான் வாங்கல வரதட்சணை...என் அப்பா,அம்மா கேட்குறதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" னு கேட்குறாங்க....கல்யாணம் நீங்க தான செஞ்சுக்க போறீங்க??அப்படின்னா வரதட்சணை வாங்காதிங்க னும் நீங்க தான சொல்லணும்...



கரும்பு தின்ன கூலி மாதிரி,கல்யாணம் பண்ணி உங்க கூட கூட்டிட்டு வர்ற பொண்ணுக்கிட்ட வரதட்சணை ன்ற பேருல உங்களுக்கு நீங்களே ஒரு விலை போட்டு வாங்கிட்டு, தயவு செஞ்சு அந்த பொண்ணு உங்களை மதிக்கணும் னு மட்டும் எதிர்பார்க்காதிங்க....!!!


"தன்மானம் உள்ள எந்த ஆண் மகனும் வரதட்சணை வாங்க மாட்டான்" என்பது என் கருத்து....

Wednesday, July 2, 2008

சிந்தனை செய் மனமே - 1

மைசூர் வந்த பின் ஆபிஸ் காண்டீனில் சாப்பிடுவது வாடிக்கை ஆகி விட்டது...பொதுவாக என் அலுவலகத்தில் சாப்பிட்டு முடித்தபின் நாம் சாப்பிட தட்டை நாம கொண்டு போய் ஒரு தனியான இடத்தில் போட வேண்டும்...அந்த இடத்தில் பொதுவாக ஒரு வாசக பலகை இருக்கும்...அதில் "Think of the thousands who struggle for a single square meal before you waste your food " என்று எழுத பட்டிருக்கும்..நான் தினமும் என் தட்டை கொண்டு போடும் போதும் அதை ஒரு முறை படித்து பார்ப்பேன்...


என்னிடமும் என் குடும்பத்தினரிடமும் ஒரு பழக்கம் உண்டு....அதை நல்ல பழக்கம் என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்...உணவு உண்ண தொடங்கும் முன் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணுவது...அதே போல் தட்டில் உங்களுக்கென வைக்க பட்டிருக்கும் உணவை வீணாக்காமல் உண்ணுவது...அதை நமக்கு பரிமாறும் பொழுதே நம்மால் எவ்வளவு உண்ண முடியுமோ அதை மட்டும் வாங்கி கொள்வது...


இந்த பதிவை நான் எழுத தூண்டுதலாக இருந்ததும் என் அலுவலகத்தில் இருந்த இன்னொரு அறிவிப்பு பலகை...இன்று தான் அந்த பலகையை கவனித்தேன்...அதில் ஒரு நாளைக்கு என் அலுவலக காண்டீனில் வீணாகும் உணவின் மொத்த மதிப்பு கணக்கிடப்பட்டிருந்தது .....இந்த மதிப்பு மொத்தம் 13000 ரூபாய்...எனக்கு தலை சுற்றி போனது....அட ஆண்டவா!!!! என்று என் உடன் வந்த தோழியிடம் புலம்பி கொண்டே வந்தேன்....



எனக்கு எல்லா சமயத்திலும் நண்பர்கள் உண்டு...நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் அல்லா நம் பெயரை எழுதியிருப்பார் என்று என் இஸ்லாமிய தோழி கூற கேட்டிருக்கிறேன்...அப்படியானால்,நமக்காக கடவுள் கொடுத்த ஒன்றை நாம் நிராகரிப்பதாக தானே பொருள்..அது இறைவனின் அன்பை நாம் நிராகரிப்பதற்கு சமம் தானே...



காந்திஜி தான் சாப்பிட உட்காரும் பொழுது ஒரு ஊசி,ஒரு டம்ளர் தண்ணி எடுத்து கொண்டு போய் வைத்து கொள்வாராம்...சாப்பிட்டு முடித்த பின் சிந்திய உணவை ஊசியில் எடுத்து டம்ளர் தண்ணீரில் கழுவி சாப்பிடுவாராம்...(அதுனால தான் அவர நாம மகாத்மா னு சொல்றோம்....என்ன சரிதானே??)
அதற்காக உங்கள நான் மகாத்மா ரேஞ்சுக்கு இருக்க சொல்லல.....உங்களுக்கு னு பரிமாறுகிற உணவை வீணாகாம பார்த்துக்குங்க...அது போதும்....


அடுத்த முறை உணவை வீணாக்கும் முன் நைஜிரியாவையோ,மங்கோலியா வையோ நினைத்து பார்த்து கொள்ளுங்கள்.....ஒரு நாடே பசியில வாடுறது உங்க நினைவுக்கு வரும்... கண்டிப்பா உணவை வீணாக்க மாட்டிங்க !!!!!!