Monday, October 10, 2011

சிந்தனை செய் மனமே - 3


பகல் பத்தரை மணியிருக்கும்...என் சென்னை தோழியிடமிருந்து ஒரு அழைப்பு..."இவ வேலை நேரத்துல கூப்பிட மாட்டாளே....என்னவாயிருக்கும்..."யோசித்து கொண்டே அவளை அழைத்தேன்..."சீக்கிரமா obituary மெயில் ல பாரு...உன் மைசூர் சிநேகிதர் இறந்துட்டார் ..."தூக்கி வாரி போட்டது எனக்கு...அவசரமாக மெயில் களில் தேடினேன்..."அய்யயோ...அவரே தான்..."..என் மைசூர் நண்பர்...சுமார் முப்பது வயதிருக்கும்...காதல் திருமணம் புரிந்து சமீபத்தில் தகப்பனும் ஆகிவிட்டார்...மைசூர் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டபோது அவர் புற்று நோயால் மரணம் அடைந்தார் என்றும் தெரிய வந்தது...அவர் புகைக்கும் பழக்கமுடையவர் என்பது எனக்கு தெரியும்..ஆனால் புற்று நோயால் பாதிக்க படும் அளவிற்கு புகைத்து இருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை.

என் தோழர்கள் பலரையும்,ஓரிரண்டு உறவினர்களையும் இந்த பழக்கத்திற்கு காவு கொடுத்துவிட்டேன்.இனியும் யாரையும் இந்த பழக்கத்திற்கு காவு கொடுக்க நான் தயாராய் இல்லை.



புகைப்பதால் என்ன ஆகும் என பலமுறை புகைப்பவர்களிடம் கேட்டதுண்டு...எல்லாம் ஒரு கிக்கு தான்...என்று பதில் வரும்..."அப்போ அதுனால கேன்சர் வரும் போது"...."அதெல்லாம் வராது"...இப்படி தான் பதில் வரும்...அப்படியே மீறினால் "நீ எண்பது வயசு வரைக்கும் இருந்து என்ன சாதிக்க போற??."அதை பார்க்கவாவது நீ இருக்கணுமே" என்று சொல்லி இருக்கிறேன்...ஆனால் அதில் இருவர் இன்று இல்லை...

புகைக்க தொடங்கியதும் மூளைக்கு எடுத்து செல்ல படும் ரத்தத்தின் அளவு குறைகிறது...சிகரட்டின் மூல பொருளான நிகோடின் இந்த வேலையை செய்கிறது...இதனால் மூளையில் ஏற்படும் மந்த நிலையின் காரணம் அந்த "கிக்" ...போதை...நாளடைவில் போதையின் தேவை அதிகரித்து போவதால் எடுத்துகொள்ளும் புகையின் அளவும் அதிகரித்து....இதனால் நுரையிரலில் தார் படிவது தொடங்கி பற்களில் காரை ஏற்படுவது வரை ஏராளமான உபாதைகள் இலவசம்..புற்றுநோய் வரும் அளவிற்கு உடல்நிலை பாதிக்க படுகிறது...
அதுமட்டுமில்லாமல் மறதியில் தொடங்கி குழந்தை பேறின்மை வரை புகையினால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.

ஸ்டைலுக்காகவும்,என்னதான் இது என்று பார்க்கவும் ஆரம்பிக்கும் பழக்கமானது உயிரையே குடித்துவிடும் அபாயத்திற்கு கொண்டுசென்று விடுகிறது...சமீபத்தில் பெண்களும் புகைக்க தொடங்கியதும் ஒரு பெரும் அதிர்ச்சி...இதுலுமா 33%.....?!...வேண்டாம் தாயே...

ஒரு வேளை இந்த பதிவை படிக்கும் தாங்கள் புகைப்பவரெனில்,இந்த பதிவை படித்து விட்டு அடுத்த முறை சிகரெட்டை கையில் எடுக்கும் போது உங்கள் அன்புக்குரியவர்களை எண்ணி பார்த்து..."ஐயோ...வேண்டாம்"..என்று தோன்றினால்....அதுவே எனக்கு கிடைத்த வெற்றி.

புகை பழக்கத்தினால் புற்றுநோய் இரையாகி உயிர் துறந்த என் இரு நண்பர்கள் மஞ்சுநாத் மற்றும் எழிலரசன் அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..

3 comments:

Sathiya said...

நல்ல பதிவு! உங்கள் நண்பர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!

//...இதுலுமா 33%.....?!...வேண்டாம் தாயே//
:)))

Suhanya said...

I am moved!

manju said...

hi, luckily i c yr blog it is very interesting.