Monday, September 8, 2008

மீ..மீ...

உன்னை பத்தி நறுக்கு ன்னு 7 விஷயம் சொல்லு பார்போம் னு சவால் விட்ருக்காங்க இல்லத்தரசி யும் ,சுகன்யா வும்...விடுவோமா....நாங்கெல்லாம் யாரு....(ஆமாமா?! அப்டின்னு சலிச்சுகுறது காதுல கேட்குது.... :)))

இனி என்னை பத்தி 7 விவரங்கள்...

1)பிறந்தது என்னவோ சென்னை னாலும் வளர்ந்தது...படிச்சது எல்லாமே திருச்சிராபள்ளி ல தான்....அப்புறம் மறுபடி கொஞ்ச நாள் சென்னை வாசம்....எல்லாம் பொட்டி தட்றதுக்கு தான்...அப்புறம் "நீ சென்னை ல பொட்டி தட்னது போதும்...மைசூர் க்கு போ னு அனுப்பி வச்சுட்டாங்க...ம்ம்ம்..."

2)படிச்சது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்....

3)கிட்டத்தட்ட மூணு வருஷமா பொட்டி தட்டிட்டு இருக்கேன் ... :)))

4)பொழுது போக்கு...அது நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறும்...சில சமயம் புத்தகங்கள் படிக்கறது...பாடல்கள் கேட்குறது(முக்கால்வாசி இதான் செய்வேன்..),பதிவு எழுதுறது,வரையுறது (பிக்காசா அளவுக்கு இல்லேனாலும் ஏதோ சுமாரா வரைவேன்...),அப்பா-அம்மா கிட்ட போன்ல மொக்கை போடுறது...(மிக பெரிய பொறுமை சாலிகள்...)

5)பிடித்தவை : அம்மா மடியில படுத்து தூங்கறது,அப்பா கிட்ட நேரம் காலம் பார்க்காம உலகத்துல உள்ள எல்லா விஷயங்களையும் பத்தியும் பேசுறது ,மழை,என் பதிவுக்கு நீங்க போடுற பின்னுட்டங்களை படிக்கறது,குழந்தையின் புன்சிரிப்பு,வலைத்தளத்துல நேரம் காலம் தெரியாம எதப்பத்தியாவது படிக்கறது,அம்மாவோட சமையல்,அப்பாவோட செல்ல கோபம்,மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்,தான்தோன்றி கோயில் சிவா பெருமான்,எப்போதாவது போனில் கேட்கும் நண்பர்களின் குறள்:) ,அக்கா குழந்தைகளின் மழலை பேச்சு,திருச்சி வீடு,வீட்டு வாசலில் இருக்கும் துளசி மாடம்,மழைக்கு பின் வரும் மண் வாசம்,சிரிப்பவர்களின் கண்களின் ஓரத்தில் வரும் சுருக்கம்,நண்பர்களின் செல்ல அதட்டல்,மோதிரங்கள்,நீளமான காதணிகள்,மருதாணி,கரடி பொம்மைகள்,என் க்யுபுல இருக்கற சின்ன பிள்ளையார் பொம்மை.....இப்படி இந்த லிஸ்ட் ரொம்ப பெருசு......!!! (ஸ்ஸ்ஸ்ஸ்...கண்ணு கட்டுது...:))))

7)நான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது...என்னே பொறுத்த வரைக்கும் யாருக்கும் பெருசா உதவ முடியலைன்னாலும்,தொந்தரவு கொடுக்காம இருந்தா,அதுவே போதும்....மத்தப்படி ரொம்ப சுலபமா எல்லார்கிட்டயும் பழகுவேன்...முடிஞ்சா என்ன சுற்றி இருக்குறவங்கள சிரிக்க வச்சுட்டு இருப்பேன் (அப்போ தானே நானும் சிரிச்சுட்டே இருக்க முடியும்....)

சரி,இனி யார மாட்டி விடலாம்...?!

1)சத்யா அண்ணன்

2)ரம்யா ரமணி

3)ஜி

4)சரவணா குமார்

மக்கா,எல்லாரும் சீக்கிரமா வந்து எழுதுங்கப்பா.... :))))))

Monday, September 1, 2008

தமிழினிக்கு இன்றோடு ஒரு வயது......



வலை பூவில் எழுத தொடங்கி 1 வருடம் முடிந்து விட்டது...ஆதலால்,இன்றோடு என் வலை பூவுக்கு ஒரு வயது முடிந்து விட்டது..
சென்னையில் இருந்த போது எழுத தொடங்கினேன்..சத்யா அண்ணனை தவிர பதிவர்கள் யாரும் என் வலைப்பூவை படித்ததாக நினைவில்லை...ஆனால்,என் உடன் பணியாற்றிய நண்பர்கள் சிலர் எனக்கு அருகிலேயே உட்கார்ந்து கொண்டு என் வலைப்பூவை படித்து தங்கள் கருத்துக்களை கூறியதுண்டு.. :)

தொடக்கத்தில் எதை பற்றி எழுதுவது என்று நிறைய சந்தேகங்கள் வரும்..
எழுத ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திய பதிவுகள் நிறைய...!

இப்போதெல்லாம் சரளமாக எழுத வருகிறது...சந்தேகங்களையும் கடந்து... :)

எழுதுவது மிகவும் பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதவே விளைகிறேன்...எழுதுவேன்... :))))))

பதிவுகள் எழுதுவதை ஒரு பொழுது போக்காக கருதாமல்,விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் ஒரு தளமாக கருதுகிறேன்..எழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதில் எனக்கு என்றுமே மாற்று கருத்து இருந்ததில்லை..

சிந்தனை செய் மனமே-பதிவுகள் தாம் நான் எழுதியதில் எனக்கு பிடித்தது... :)

(நான் எழுதியதில் உங்களுக்கு பிடித்த பதிவுகள் என்னென்ன என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்...)

இந்த தருணத்தில் நான் சிலருக்கு நன்றி கூற கடமை பட்டுருக்கிறேன்...

என் வலைப்பூவின் முதல் ரசிகர்களான என் சென்னை நண்பர்கள்,தமிழ் மணத்தில் என் பதிவுகளை சேர்க்க எனக்கு உதவிய சத்யா அண்ணன்,என் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் என் பதிவர் நண்பர்கள்,நான் இந்த வலை பூவை ஆரம்பிக்க எனக்கு ஊக்கம் தந்த என் தோழிகள்,எப்போதும் என் பதிவுகளை முதலில் படிக்கும் என் பெற்றோர்,எனக்கு தமிழில் ஆர்வம் வர காரணமாயிருந்த என் தமிழ் ஆசிரியைகள் அனைவருக்கும் நான் நன்றி கூறி கொள்கிறேன்...

என்றும் என் எழுத்துக்களை படித்து உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்...இது போல இன்னும் பல வருடங்கள் கடந்தும் நான் எழுதுவதற்கு எனக்கு ஊக்கம் தாருங்கள்.... :)))))