Tuesday, July 29, 2008

அவார்ட்ஸ்-2

இல்லத்தரசியிடமிருந்து இன்னொரு அவார்ட்...இந்த முறை "Blogging Friends Forever Award"....மிக்க நன்றி இல்லத்தரசி....உங்க அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன் னு தெரியல....ரொம்ப,ரொம்ப நன்றி வாணி.....


அடுத்து இன்னொரு பொறுப்பையும் என்னிடம் கொடுத்துருக்காங்க,விதிமுறைகளோட...அந்த விதிமுறைகள் என்னென்ன...அப்படின்னா..

1)நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்.

2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்...ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்...

3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்......


இப்போ என் turn....சரி,யார்யாருக்கெல்லாம் இந்த அவார்ட் னு பாருங்க...





மற்றும்

5)சரவண குமார்(கவிதைகள் எனப்படும்...)(இவர் என் பதிவுகளை புதிதாக படிக்க தொடங்கி இருக்கிறார்...)



உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....


இந்த அவார்ட் எனக்கு கொடுத்த இல்லத்தரசிக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி கொள்கிறேன்...

Friday, July 25, 2008

சிந்தனை செய் மனமே-2 : அப்டேட்

என் தோழி அவளது வீட்டில் பேசியிருக்கிறாள்.அவளது பெற்றோரும் அவளுக்கு இந்த வரனில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்டு,மாப்பிள்ளை வீட்டில் எடுத்து சொல்லிவிட்டனராம்...

இதற்கிடையில்,அந்த தோழிக்கு வந்த வேறொரு வரனின் ஜாதகம் ஒத்து போக அந்த வரனையே அவளுக்கு பேசி முடித்து விட்டனர்...ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்,இந்த முறை வரதட்சணையை பற்றியே பேச்சே வரவில்லையாம்....என் தோழியும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்...

என் உயிர் தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......

Friday, July 18, 2008

சிந்தனை செய் மனமே -2


பர பர னு வேலை பார்த்துகிட்டு இருந்த ஒரு செவ்வாய் கிழமை காலையில் அந்த கல்லூரி தோழியிடமிருந்து போன் வந்தது...பேசி கொஞ்ச காலம் ஆகியிருந்த காரணத்தால்,க்யுபை விட்டு வெளியே சென்று மீண்டும் அவளது செல்லுக்கு போன் செய்தேன்...



"ஹே....சொல்லு ....எப்படி இருக்க...??"..இது நான்..



"நல்லா இருக்கேன்...போன எடுக்கலனதும் பிசியா இருக்க னு நெனச்சேன்....என்னடி டிஸ்டப் பண்ணிடனோ??.."...வழக்கமா அவ கேட்குற கேள்வி தான் இது...



"ஏய்..அதெல்லாம் பரவா இல்லே...சொல்லு..."...பிசியா இருக்குறதா பொதுவா யார்கிட்டயும் சொல்றதில்லே....



"ஹ்ம்ம்...ஏய் எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்காங்க வீட்டுல..."...சொல்லும் போது கூட குரலில் சந்தோஷமே இல்லாமலிருந்தது,எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது ....



"ஏய்...காங்கிராட்ஸ்"...நம்ம கடமையை ஒழுங்கா செய்வோமே....



"அட நீ வேற டி..."..ரொம்பவே அலுத்துகிட்டா..



"......." எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில...



"எனக்கு என்ன கொறச்சல் னு நீ நினைக்குற.."....கொஞ்சம் உணர்ச்சிவச பட்டு பேசுறா னு மட்டும் தெளிவா புரிஞ்சது...



"ஏய்...என்னாச்சு..ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு இப்படி என்னைய போட்டு குழப்புற...என்ன தான்னு கொஞ்சம் தெளிவா சொல்லுடி..."...செய்து கொண்டிருந்த scripting மெல்ல மெல்ல submind க்கு transfer வாங்கிக்கொண்டு போனது...இப்போது என் தோழி மட்டுமே என் நினைவில் இருந்தாள்...இவள எப்படி சமாதான படுத்தறது னு மட்டுமே மூளைக்குள் யோசனை ஓடிகொண்டிருந்தது...



"மாப்பிள்ளை வீட்டில் 200 பவுன் நகையும்,5 லகரம் ரொக்கமும் வாங்கிகிட்டு தான் என்னைய ஒத்துக்கிட்டாங்க..."...சொல்லும் போது குரலில் அத்தனை கோபம்...



"இது தான் உங்க caste ல சகஜம் ஆன விஷயமாச்சே...நீ தான் காலேஜ் டேஸ் லையே சொல்லுவியே..." ...பழசை அசைப்போட்டு அவளை சமாதான படுத்த விளைந்தேன்....



"இருந்தாலும் 5 லட்சம் ரொம்ப அதிகம் தான டி..."...இந்த கேள்விக்கு நான் என்ன சொல்லுறது..



"அதிகம் மாதிரி தான் டி தெரியுது..."..அந்நியன் பட சொக்கன் மாதிரி பதில் சொன்னேன்...


"....இதுல நான் வாழ்க்கை பூரா வேலைக்கு போய்க்கிட்டே வேற இருக்கனுமாம்..."...


அவள் சொல்ல சொல்ல எனக்கே கோபம் வந்தது...


"நிச்சயம் முடிஞ்சுருச்சா..???" கொஞ்சம் கடுப்பாக தான் கேட்டேன்...


"இல்ல ...இல்ல...நிறுத்திடவா???"...பொண்ணு செம சீரியஸா என்கிட்டே கேட்டா....



"இல்ல...இல்ல..கொஞ்சம் பொறுமையா இரு...உங்க அப்பா,அம்மா கிட்ட பேசு...அவங்க கிட்ட உன் மனசுல தோணுறத சொல்லி...புரிய வைக்க ட்ரை பண்ணு..."..நான் அவளுடைய நிலையில் இருந்தால் என்ன செய்வேனோ,அதையே அவளுக்கு அறிவுறுத்தி...உடனே ஊருக்கு போக சொன்னேன்...



அவளும் அப்படியே செய்வதாக சொல்லி...போனை வைத்தாள்....
இப்படி எத்தன பேர் என்கிட்டே பொலம்பி இருக்காங்க னு நான் சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்...

நான் எல்லாரையும் குறை சொல்லல....நல்லவங்களும் இருக்காங்க..ஆனா,மெஜாரிட்டி ஆளுங்க நான் சொல்ற மன நிலையோட தான் இருக்காங்க....



இதெல்லாம் கூட பரவா இல்லே...எங்க குழந்தை பெத்துகிட்டா மனைவி வேலைக்கு போக மாட்டாளோ னு பயப்படுற ஆளுகளும் இருக்காங்க னு நான் சொன்னா நீங்க நம்புவீங்களா???ஆனா இது உண்மை......எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில இப்ப இதான் நடந்துக்கிட்டு இருக்கு...



இத தட்டி கேட்க பெண்ணுடைய பெற்றோர் போனாங்கன்னா,"பொண்ண பெத்தவங்க தானே...பொறுமையா இருக்க வேண்டியதானே..."...னு சொல்ல வேண்டியது...இந்த மாதிரி பேசுறவங்கள நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புறேன்...."உங்க பையன விட அந்த பொண்ணு எந்த விதத்துல குறைச்சல்???...."...சொல்ல போனா நீங்க பையன வளர்க்க என்ன கஷ்ட பட்டிங்களோ,அது போல பத்து மடங்கு கஷ்ட பட்டவங்க ஒரு பொண்ண பெத்தவங்க.....தயவு செஞ்சு இனிமே பொண்ண பெத்தவங்க தானே னு ஏளனமா நினைக்காதிங்க...அவங்க நினைச்சா உங்க குடும்பத்தையே புரட்டி போட முடியும்...



வரதட்சணை வாங்கிகிட்டு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா,அந்த பொண்ணு உங்களை எப்படி மதிப்பா???...ஒரு விலை கொடுத்து உங்களை வாங்கிட்ட மாதிரி தான நினைப்பா???



"நான் வாங்கல வரதட்சணை...என் அப்பா,அம்மா கேட்குறதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" னு கேட்குறாங்க....கல்யாணம் நீங்க தான செஞ்சுக்க போறீங்க??அப்படின்னா வரதட்சணை வாங்காதிங்க னும் நீங்க தான சொல்லணும்...



கரும்பு தின்ன கூலி மாதிரி,கல்யாணம் பண்ணி உங்க கூட கூட்டிட்டு வர்ற பொண்ணுக்கிட்ட வரதட்சணை ன்ற பேருல உங்களுக்கு நீங்களே ஒரு விலை போட்டு வாங்கிட்டு, தயவு செஞ்சு அந்த பொண்ணு உங்களை மதிக்கணும் னு மட்டும் எதிர்பார்க்காதிங்க....!!!


"தன்மானம் உள்ள எந்த ஆண் மகனும் வரதட்சணை வாங்க மாட்டான்" என்பது என் கருத்து....

Tuesday, July 15, 2008

நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில்...



இந்த சென்னை விமான நிலையம் இருக்கே...அதுக்கு ஓய்வே கிடையாது...

எப்போதும் ரொம்ப பிசியா இருக்கும்...

நம்ம விமான நிலையங்கள் எப்போதும் ஒரு உணர்ச்சி குவியலாதான் இருக்கும்...

சந்தோஷம்,பிரிவின் சோகம்,பொறாமை,கூச்சம்,பயம் இப்படி சகல உணர்ச்சிகளையும் மாறி மாறி நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும் இந்த விமான நிலையங்கள்...போன முறை போனபோது நான் கண்ட சில காட்சிகளை இங்கே பதியலாம் என உத்தேசம்...


1)நான் சென்ற உடனே கவனித்தது இந்த பெண்ணை தான்..இளைய 20 களில் இருக்கும் அந்த பெண் onsite செல்கிறார் போல...அவரது மொத்த குடும்பமே வந்திருந்தது....எங்கிருந்தோ கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்த அவருடைய மாமா அவள் கையில் ஒரு தாயத்தை கட்டி விட்டார்....அந்த பெண் அதை மறுக்காமல் சிரித்த முகத்துடன் அதை கட்டி கொண்டது,எனக்கு மிகவும் பிடித்திருந்தது..."பசியோட இருக்காதம்மா ...காப்பி தண்ணி வாங்கி குடிச்சுக்கணும்....தெரியுதா புள்ளை"....என்று சொல்லி கொண்டிருந்த தன் தாயை ஆனந்த கண்ணீரோடு அவர் பார்த்து கொண்டிருந்ததை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை..... :))


2)இந்த குடும்பம் எனக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தனர்...அவர்களது மகள் தன் 2 வயது குழந்தையை விட்டுவிட்டு செல்ல போகிறார் என்பதை அந்த அம்மா என் அம்மாவிடம் சொல்லி கொண்டிருந்தார்....அதற்குள் அவர்களது மகள் bag checkin முடித்துவிட்டு வந்திருந்தார்...பின் அந்த மகள் தன் குழந்தையை விட்டு பிரிந்துபோக முடியாமல் வெடித்து அழுதார்...பின் அவரை ஒருவாரி தேற்றி அனுப்பிவைக்க என் அம்மாவும் உதவி செய்தார்கள்...


3)ஏர்போர்ட் ல் நடந்து கொண்டிருந்த இந்த எல்லா நிகழ்ச்சிகளையும் என் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு பெண் வீடியோ எடுத்துகொண்டிருந்தார்...


4)புதிதாக திருமணமான இந்த ஜோடியை அங்கிருந்த அனைவருமே கவனித்து கொண்டிருந்தார்கள்....இதிலும் அந்த பெண் தான் செல்ல போகிறார் போல...அங்கிருந்த கூட்டத்தையும் பொருட் படுத்தாமல்....இவர்கள் இருவரும் அவ்வப்போது கட்டியணைத்து முத்தமிட்டு கொண்டிருந்தனர்....இதை பார்த்த இரண்டு வானரங்கள்...."டேய் ...அங்க பார்த்தியா...technology has improved very much" என்று காமெடி செய்துகொண்டிருந்தனர்... :)))


இது எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த நான் எனக்குள்ளே சொல்லி கொண்டது இதுதான்....


"தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை .......பிரிவு தான்....."


ஆனா,என்ன தான் சொல்லுங்க....நம்ம மக்களோட பாசத்துக்கு அளவே கிடையாது....இதை நான் விமான நிலையத்தில் பார்த்த ஒவ்வொரு காட்சியும் நினைவு படுத்தி கொண்டிருந்தது... :))))))))

Thursday, July 3, 2008

அவார்ட்ஸ்

நேற்று சாயுங்காலம் ஆறரை மணிபோல,ஆபீஸ் ல புடுங்குனது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான் னு onsite கு மெயில் பண்ணிட்டு,வலைப்புவ திறந்தா சுகன்யா அவார்ட்கொடுத்துருந்தாங்க..Friendship award....


மிக்க நன்றி சுகன்யா....இதோட எனக்கு நீங்க எனக்கு ரெண்டு அவார்ட் கொடுத்துடிங்க......ரொம்ப தேங்க்ஸ்....இதே அவார்ட் இல்லத்தரசியும் எனக்கு கொடுத்துருக்காங்க....அவங்களுக்கும் பெரிய தேங்க்ஸ்....எல்லாத்தையும் விட ஒரு paragraph போட்டு பாராட்டிடிங்க.....ரொம்ப தாங்க்ஸ்...

சரி,நம்ம இப்ப இத யாருக்கு கொடுக்கலாம் னு ரொம்ப யோசிச்சதுல,என் நினைவுக்கு வந்த முதல் பதிவர்.....வேற யாரு....நம்ம சத்யா தான்...வடக்குபட்டு ராமசாமி க்கு தான் முதல்ல இந்த Friendship award....


இந்த அவார்ட்க்கு அடுத்த நோமினீ யாரு னு பார்த்திங்கன்னா......இல்லத்தரசி....ரொம்ப creative ஆ இருக்காங்க....ரொம்ப நல்ல சமைப்பாங்க னு நினைக்குறேன்...(சத்யா அண்ணன்தான் பதில் சொல்லணும்....)


சரி,ரெண்டு பெரும் ஜோடி போட்டு வந்து அவார்ட் எடுத்துட்டு போங்க.........வாங்க...வாங்க....


அடுத்த அவார்ட் Blogging With a Purpose award...இத எனக்கு கொடுத்தவங்க,இல்லத்தரசி....ரொம்ப தேங்க்ஸ் வாணி...

முதல்ல இந்த அவார்ட் யாருக்கு கொடுக்கலாம் னு யோசிச்சதுல என் நியாபகத்துக்கு வந்தது மூன்று பேரு.....இல்லத்தரசி யும்,வெட்டிபயலும்,சுகன்யாவும் ...


இல்லத்தரசி யோட இன்னொரு ப்ளாக் creationsss.அழகான பொம்மைகள் எப்படி செய்யறது னு ரொம்ப நல்ல காட்டியிருந்தாங்க....அந்த creativity கு தான் இந்த அவார்ட்....


நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சதே...வெட்டிப்பயல் ப்ளாக் பார்த்து தான்....நிறைய உபயோகமான பதிவுகள் இருக்கும் அவரோட வலை தளத்துல....software Engineer ஆகலாம் வாங்க னு அவர் எழுதுன பதிவு எனக்கு ரொம்ப உபயோகமா இருந்தது....ஆதலால் அவருக்கும் மரியாதை நிமித்தமாக இந்த அவார்ட்....


மூன்றாவத நம்ம சுகன்யா....அவங்க ப்ளாகோட அமைப்பே ரொம்ப நல்லா இருக்கும்...அவங்களோட முதல் எழுத்துலயே அவளவு நிறைய அன்னோன்யம்... ரொம்ப நாள் பழகுன தோழி போல உணர்ந்தேன்....அதுனால அவங்களுக்கும் இந்த அவார்ட் தர விரும்புறேன்....


இந்தாங்க உங்க அவார்ட்......


லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்..என் அன்பு அண்ணன் வடக்குபட்டு ராமசாமி...எனக்கு வலையுலகத்துல கிடைத்த முதல் நண்பர்....அவருக்கும் இந்த blogging with a Purpose award அன்புடன் சமர்ப்பணம்...

Wednesday, July 2, 2008

சிந்தனை செய் மனமே - 1

மைசூர் வந்த பின் ஆபிஸ் காண்டீனில் சாப்பிடுவது வாடிக்கை ஆகி விட்டது...பொதுவாக என் அலுவலகத்தில் சாப்பிட்டு முடித்தபின் நாம் சாப்பிட தட்டை நாம கொண்டு போய் ஒரு தனியான இடத்தில் போட வேண்டும்...அந்த இடத்தில் பொதுவாக ஒரு வாசக பலகை இருக்கும்...அதில் "Think of the thousands who struggle for a single square meal before you waste your food " என்று எழுத பட்டிருக்கும்..நான் தினமும் என் தட்டை கொண்டு போடும் போதும் அதை ஒரு முறை படித்து பார்ப்பேன்...


என்னிடமும் என் குடும்பத்தினரிடமும் ஒரு பழக்கம் உண்டு....அதை நல்ல பழக்கம் என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்...உணவு உண்ண தொடங்கும் முன் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணுவது...அதே போல் தட்டில் உங்களுக்கென வைக்க பட்டிருக்கும் உணவை வீணாக்காமல் உண்ணுவது...அதை நமக்கு பரிமாறும் பொழுதே நம்மால் எவ்வளவு உண்ண முடியுமோ அதை மட்டும் வாங்கி கொள்வது...


இந்த பதிவை நான் எழுத தூண்டுதலாக இருந்ததும் என் அலுவலகத்தில் இருந்த இன்னொரு அறிவிப்பு பலகை...இன்று தான் அந்த பலகையை கவனித்தேன்...அதில் ஒரு நாளைக்கு என் அலுவலக காண்டீனில் வீணாகும் உணவின் மொத்த மதிப்பு கணக்கிடப்பட்டிருந்தது .....இந்த மதிப்பு மொத்தம் 13000 ரூபாய்...எனக்கு தலை சுற்றி போனது....அட ஆண்டவா!!!! என்று என் உடன் வந்த தோழியிடம் புலம்பி கொண்டே வந்தேன்....



எனக்கு எல்லா சமயத்திலும் நண்பர்கள் உண்டு...நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் அல்லா நம் பெயரை எழுதியிருப்பார் என்று என் இஸ்லாமிய தோழி கூற கேட்டிருக்கிறேன்...அப்படியானால்,நமக்காக கடவுள் கொடுத்த ஒன்றை நாம் நிராகரிப்பதாக தானே பொருள்..அது இறைவனின் அன்பை நாம் நிராகரிப்பதற்கு சமம் தானே...



காந்திஜி தான் சாப்பிட உட்காரும் பொழுது ஒரு ஊசி,ஒரு டம்ளர் தண்ணி எடுத்து கொண்டு போய் வைத்து கொள்வாராம்...சாப்பிட்டு முடித்த பின் சிந்திய உணவை ஊசியில் எடுத்து டம்ளர் தண்ணீரில் கழுவி சாப்பிடுவாராம்...(அதுனால தான் அவர நாம மகாத்மா னு சொல்றோம்....என்ன சரிதானே??)
அதற்காக உங்கள நான் மகாத்மா ரேஞ்சுக்கு இருக்க சொல்லல.....உங்களுக்கு னு பரிமாறுகிற உணவை வீணாகாம பார்த்துக்குங்க...அது போதும்....


அடுத்த முறை உணவை வீணாக்கும் முன் நைஜிரியாவையோ,மங்கோலியா வையோ நினைத்து பார்த்து கொள்ளுங்கள்.....ஒரு நாடே பசியில வாடுறது உங்க நினைவுக்கு வரும்... கண்டிப்பா உணவை வீணாக்க மாட்டிங்க !!!!!!