Thursday, July 3, 2008

அவார்ட்ஸ்

நேற்று சாயுங்காலம் ஆறரை மணிபோல,ஆபீஸ் ல புடுங்குனது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான் னு onsite கு மெயில் பண்ணிட்டு,வலைப்புவ திறந்தா சுகன்யா அவார்ட்கொடுத்துருந்தாங்க..Friendship award....


மிக்க நன்றி சுகன்யா....இதோட எனக்கு நீங்க எனக்கு ரெண்டு அவார்ட் கொடுத்துடிங்க......ரொம்ப தேங்க்ஸ்....இதே அவார்ட் இல்லத்தரசியும் எனக்கு கொடுத்துருக்காங்க....அவங்களுக்கும் பெரிய தேங்க்ஸ்....எல்லாத்தையும் விட ஒரு paragraph போட்டு பாராட்டிடிங்க.....ரொம்ப தாங்க்ஸ்...

சரி,நம்ம இப்ப இத யாருக்கு கொடுக்கலாம் னு ரொம்ப யோசிச்சதுல,என் நினைவுக்கு வந்த முதல் பதிவர்.....வேற யாரு....நம்ம சத்யா தான்...வடக்குபட்டு ராமசாமி க்கு தான் முதல்ல இந்த Friendship award....


இந்த அவார்ட்க்கு அடுத்த நோமினீ யாரு னு பார்த்திங்கன்னா......இல்லத்தரசி....ரொம்ப creative ஆ இருக்காங்க....ரொம்ப நல்ல சமைப்பாங்க னு நினைக்குறேன்...(சத்யா அண்ணன்தான் பதில் சொல்லணும்....)


சரி,ரெண்டு பெரும் ஜோடி போட்டு வந்து அவார்ட் எடுத்துட்டு போங்க.........வாங்க...வாங்க....


அடுத்த அவார்ட் Blogging With a Purpose award...இத எனக்கு கொடுத்தவங்க,இல்லத்தரசி....ரொம்ப தேங்க்ஸ் வாணி...

முதல்ல இந்த அவார்ட் யாருக்கு கொடுக்கலாம் னு யோசிச்சதுல என் நியாபகத்துக்கு வந்தது மூன்று பேரு.....இல்லத்தரசி யும்,வெட்டிபயலும்,சுகன்யாவும் ...


இல்லத்தரசி யோட இன்னொரு ப்ளாக் creationsss.அழகான பொம்மைகள் எப்படி செய்யறது னு ரொம்ப நல்ல காட்டியிருந்தாங்க....அந்த creativity கு தான் இந்த அவார்ட்....


நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சதே...வெட்டிப்பயல் ப்ளாக் பார்த்து தான்....நிறைய உபயோகமான பதிவுகள் இருக்கும் அவரோட வலை தளத்துல....software Engineer ஆகலாம் வாங்க னு அவர் எழுதுன பதிவு எனக்கு ரொம்ப உபயோகமா இருந்தது....ஆதலால் அவருக்கும் மரியாதை நிமித்தமாக இந்த அவார்ட்....


மூன்றாவத நம்ம சுகன்யா....அவங்க ப்ளாகோட அமைப்பே ரொம்ப நல்லா இருக்கும்...அவங்களோட முதல் எழுத்துலயே அவளவு நிறைய அன்னோன்யம்... ரொம்ப நாள் பழகுன தோழி போல உணர்ந்தேன்....அதுனால அவங்களுக்கும் இந்த அவார்ட் தர விரும்புறேன்....


இந்தாங்க உங்க அவார்ட்......


லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்..என் அன்பு அண்ணன் வடக்குபட்டு ராமசாமி...எனக்கு வலையுலகத்துல கிடைத்த முதல் நண்பர்....அவருக்கும் இந்த blogging with a Purpose award அன்புடன் சமர்ப்பணம்...

7 comments:

Illatharasi said...

நல்ல எழுதி இருக்கீங்க. படிக்க படிக்க இனிமையா இருக்கு......
தமிழோட இனிமையா இல்ல தமிழினியோட இனிமையா தெரியல;)

கண்டிப்பா வாங்க வீட்டுக்கு...... வரவேற்க தயாரா இருக்கேன் :-)

வெட்டிப்பயல் said...

ஆஹா... அவார்ட் எல்லாம் கொடுத்துருக்கீங்க.. ரொம்ப நன்றிங்க...

Sathiya said...

//சரி,ரெண்டு பெரும் ஜோடி போட்டு வந்து அவார்ட் எடுத்துட்டு போங்க//
இப்படி குட்ட போட்டு ஒடச்சிட்டீங்களே;)
//ரொம்ப நல்ல சமைப்பாங்கனு நினைக்குறேன்...(சத்யா அண்ணன்தான் பதில் சொல்லணும்....)//
நானும் அப்படி தான் நினைக்கிறேன்;)
//நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சதே...வெட்டிப்பயல் ப்ளாக் பார்த்து தான்//
நீங்களுமா? திரையுலகில் சிவாஜி கணேசனை பார்த்து நிறைய பேர் நடிக்க வர மாதிரி வலையுலகில் பாலாஜி(வெட்டிபையல்) போல;)
//என் அன்பு அண்ணன் வடக்குபட்டு ராமசாமி//
இரண்டு அவார்டுக்கும் ரொம்ப நன்றி அன்பு தங்கச்சி வித்யா!!!
(சூரியன் பட கௌண்டமணி தோரணையில்)
எத்தனை அவார்ட்ஸ்? ச்சே ச்சே ச்சே ச்சே! நான் ரொம்ப பிஸி! என் வலைப்பூல இதெல்லாம் போட இடம் இல்லையே பா...ஈவிநிங் கலெக்டரை மீட் பண்றேன்...நாளைக்கு ஈவிநிங் ஹோம் மினிஸ்டர் கிட்ட இத பத்தி நான் பேசறேன்! அப்புறம் இன்னைக்கு நைட்டே நான் முக்கியமான ஒரு பதிவு போட துபாய் போயாகனும். அட இது பரவா இல்லைங்க! அரசியல் அவார்ட் எல்லாம் என் கிட்ட வருது. நான் என்ன அரசியல் வாதியா? ;)

Anonymous said...

thanks so much Tamizh!!!

(((( Hugzzz)))

How better can I express myself?

Anonymous said...

Thanks Tamizh a ton n visit my blog!!got soemthing again fro u!

தமிழினி..... said...

//இரண்டு அவார்டுக்கும் ரொம்ப நன்றி அன்பு தங்கச்சி வித்யா!!!
(சூரியன் பட கௌண்டமணி தோரணையில்)
எத்தனை அவார்ட்ஸ்? ச்சே ச்சே ச்சே ச்சே! நான் ரொம்ப பிஸி! என் வலைப்பூல இதெல்லாம் போட இடம் இல்லையே பா...ஈவிநிங் கலெக்டரை மீட் பண்றேன்...நாளைக்கு ஈவிநிங் ஹோம் மினிஸ்டர் கிட்ட இத பத்தி நான் பேசறேன்! அப்புறம் இன்னைக்கு நைட்டே நான் முக்கியமான ஒரு பதிவு போட துபாய் போயாகனும். அட இது பரவா இல்லைங்க! அரசியல் அவார்ட் எல்லாம் என் கிட்ட வருது. நான் என்ன அரசியல் வாதியா? ;)//

(போக்கிரி பட அசின் தோரணையில்...)இது உங்களுக்கே கொஞ்சம் ஓவர் ஆ தெரில....

தமிழினி..... said...

//Thanks Tamizh a ton n visit my blog!!got soemthing again fro u!//

Thanks Suhee....am very happy....u r too gud... :)))))))