
இந்த சென்னை விமான நிலையம் இருக்கே...அதுக்கு ஓய்வே கிடையாது...
எப்போதும் ரொம்ப பிசியா இருக்கும்...
நம்ம விமான நிலையங்கள் எப்போதும் ஒரு உணர்ச்சி குவியலாதான் இருக்கும்...
சந்தோஷம்,பிரிவின் சோகம்,பொறாமை,கூச்சம்,பயம் இப்படி சகல உணர்ச்சிகளையும் மாறி மாறி நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும் இந்த விமான நிலையங்கள்...போன முறை போனபோது நான் கண்ட சில காட்சிகளை இங்கே பதியலாம் என உத்தேசம்...
1)நான் சென்ற உடனே கவனித்தது இந்த பெண்ணை தான்..இளைய 20 களில் இருக்கும் அந்த பெண் onsite செல்கிறார் போல...அவரது மொத்த குடும்பமே வந்திருந்தது....எங்கிருந்தோ கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்த அவருடைய மாமா அவள் கையில் ஒரு தாயத்தை கட்டி விட்டார்....அந்த பெண் அதை மறுக்காமல் சிரித்த முகத்துடன் அதை கட்டி கொண்டது,எனக்கு மிகவும் பிடித்திருந்தது..."பசியோட இருக்காதம்மா ...காப்பி தண்ணி வாங்கி குடிச்சுக்கணும்....தெரியுதா புள்ளை"....என்று சொல்லி கொண்டிருந்த தன் தாயை ஆனந்த கண்ணீரோடு அவர் பார்த்து கொண்டிருந்ததை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை..... :))
2)இந்த குடும்பம் எனக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தனர்...அவர்களது மகள் தன் 2 வயது குழந்தையை விட்டுவிட்டு செல்ல போகிறார் என்பதை அந்த அம்மா என் அம்மாவிடம் சொல்லி கொண்டிருந்தார்....அதற்குள் அவர்களது மகள் bag checkin முடித்துவிட்டு வந்திருந்தார்...பின் அந்த மகள் தன் குழந்தையை விட்டு பிரிந்துபோக முடியாமல் வெடித்து அழுதார்...பின் அவரை ஒருவாரி தேற்றி அனுப்பிவைக்க என் அம்மாவும் உதவி செய்தார்கள்...
3)ஏர்போர்ட் ல் நடந்து கொண்டிருந்த இந்த எல்லா நிகழ்ச்சிகளையும் என் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு பெண் வீடியோ எடுத்துகொண்டிருந்தார்...
4)புதிதாக திருமணமான இந்த ஜோடியை அங்கிருந்த அனைவருமே கவனித்து கொண்டிருந்தார்கள்....இதிலும் அந்த பெண் தான் செல்ல போகிறார் போல...அங்கிருந்த கூட்டத்தையும் பொருட் படுத்தாமல்....இவர்கள் இருவரும் அவ்வப்போது கட்டியணைத்து முத்தமிட்டு கொண்டிருந்தனர்....இதை பார்த்த இரண்டு வானரங்கள்...."டேய் ...அங்க பார்த்தியா...technology has improved very much" என்று காமெடி செய்துகொண்டிருந்தனர்... :)))
இது எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த நான் எனக்குள்ளே சொல்லி கொண்டது இதுதான்....
"தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை .......பிரிவு தான்....."
ஆனா,என்ன தான் சொல்லுங்க....நம்ம மக்களோட பாசத்துக்கு அளவே கிடையாது....இதை நான் விமான நிலையத்தில் பார்த்த ஒவ்வொரு காட்சியும் நினைவு படுத்தி கொண்டிருந்தது... :))))))))
9 comments:
ஒக்காந்து யோசிச்சீங்க போல, பதிவு போட;) நல்ல டாபிக்!
//"தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை .......பிரிவு தான்....." //
பிரிவு தாங்க அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும். பல பேருக்கு அவங்க ஒருவரிடத்தில் வைத்திருக்கும் காதலையும், அன்பையும், நட்பையும் உணர்த்துவதே இந்த பிரிவுதான்!
/
technology has improved very much
/
எவ்ளோ வேகமா பதிவா வந்திருச்சில்ல
:)))))))))
உருக்கமா எழுதறீங்க .... உங்களோட ஒவ்வொரு பதிவும் என்னை உணர்ச்சிவச படுத்துகிறது :) நான் ஒவ்வொரு முறையும் சென்னையில் இருந்து கிளம்பும்போது நடக்குமிது.... ;) முதல் தடவை சிங்கப்பூர் வரும்போது பெரிய கூட்டமே வந்தது airportக்கு .... இப்போ நெனைச்ச ரொம்ப பெருமைய இருக்கு... எத்தனை அன்பு உள்ளங்கள் என்று.... ரொம்ப உ.வசபடுறேன்.... so முடிச்சிக்கிறேன்.... தொடரட்டும் உங்கள் பதிவுகள்... ஆன வாரத்திற்கு ஒன்றாவது எழுதுங்க.... ;)
//ஆன வாரத்திற்கு ஒன்றாவது எழுதுங்க.... ;)//
கண்டிப்பா எழுதுறேன் இல்லத்தரசி...உங்க அன்புக்கு நன்றி.....
//எவ்ளோ வேகமா பதிவா வந்திருச்சில்ல
:)))))))))
//
ஆமாம் சிவா...Technology has improved very much... :)))))))))))
//பல பேருக்கு அவங்க ஒருவரிடத்தில் வைத்திருக்கும் காதலையும், அன்பையும், நட்பையும் உணர்த்துவதே இந்த பிரிவுதான்!
//
ஆமாம் சத்யா...இது என்னெவோ உண்மைதான்...
நள்ளிரவு விமான நிலையம் வாசித்தேன்.
நீங்கள் பார்த்தகாட்சி அவர்கள் எல்லோரும் முதல் முறை வெளிநாடு செல்லும் காலமாக இருக்கலாம்.இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு விடு முறையில் வந்து திரும்புபவர்களை கவனித்தால் ,"பிரிவு "என்பது தமிழில் உங்களுக்குப் பிடித்த விஷயமாகி விடும்.
இந்த சூழ்நிலைக்கும்,"technology has improved very much"பொருந்தும்
//இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு விடு முறையில் வந்து திரும்புபவர்களை கவனித்தால் ,"பிரிவு "என்பது தமிழில் உங்களுக்குப் பிடித்த விஷயமாகி விடும்.
இந்த சூழ்நிலைக்கும்,"technology has improved very much"பொருந்தும்
//
காலம் பதில் சொல்லும்...வந்ததுக்கும்,பின்னூட்டம் போட்டதுக்கும் தாங்க்ஸ் ங்க நட்டி...உங்க பேரு நல்லா இருக்கு... :)))
//இதை பார்த்த இரண்டு வானரங்கள்...//
மௌனம் பேசியதே படம் பாத்திருக்கீங்களா?? :)))
நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைங்க... இது மாதிரி பிரிவு நிலையங்களில்தான் பிரிவின் குவியல்கள் அதிகமா இருக்கும்..
Post a Comment