Friday, December 21, 2007

I am Legend --கண்டிப்பா பாருங்க !!!


வில் ஸ்மித் நடித்திருக்கும் இன்னொரு அசத்தலான படம்..

நியுயார்க் போன்ற ஒரு மிக பெரிய மாகானத்துல உங்கள மட்டும் தனியா விட்ட என்ன பண்ணுவிங்க ??...அப்படி தான் மாட்டிக்குறார் வில் ஸ்மித்...

ஏதோ ஒரு கொடிய நோயினால் அந்த ஊர் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு விட,வில் ஸ்மித் மட்டும் அந்த நோயினில் இருந்து தப்பித்து விடுகிறார்...பின் அந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் இவரை தாக்க முயல,அவர்களது சதிகளை முறியடித்து உயிர் பிழைகிராரா???அல்லது அந்த நோயை குணப்படுத்துவதற்காக தன் உயிரை தியாகம் செய்கிறாரா என்று சொல்லி முடிகிறது இந்த திரைப்படம் ... தனிமை ஒரு மனுஷன எவ்வளவு துயர படுத்தும் னு ரொம்ப அழகாவே காட்றாங்க....

படத்தினுடைய முதல் ஆச்சர்யம் வில் ஸ்மித்....Independence Day,MIB 1 & 2 படங்களில் இருந்தே இவரை ரொம்பவே கவனிக்க ஆரம்பித்துவிட்டது,உலகம். இந்த திரைப்படத்தின் லாபம் 73.5 மில்லியன் டாலர் ஆக இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது...எல்லாம் வில் ஸ்மித் என்ற நடிகரின் கடின உழைப்புக்கு நாம் செலுத்தும் மரியாதை....சில காட்சிகளில் நம்மையும் சேர்த்து சிரிக்கவும்,அழுகவும் வைக்கிறார்....தன்னுடைய உணர்வுகளை ரசிகர்களுக்குள் செலுத்துபவனே நல்ல நடிகன்!!!

படத்தினுடைய இரண்டாவது ஆச்சரியம்....வில் ஸ்மித் உடன் முதல் பாதியில் நடித்திருக்கும் அந்த நாய்...ஒரு நாயிடம் இவ்வளவு உணர்வுகளை பரிமாறிக்கொள்ள முடியுமா என்று நமக்கு சந்தேகமே வந்து விடுகிறது....ஆனா அந்த நாய கொன்னுருக்க வேண்டாம்....பாவம்....!!!
படத்துல எல்லாமே ரொம்ப சரியா அமைந்திருந்தாலும்....குழந்தைகளை கவர தவறிட்டாறு வில் ஸ்மித்....MIB படங்கள போல இந்த படம் குழந்தைகளுக்கும் பிடிக்குமா னு கேட்டா இல்ல னுதான் சொல்ல வேண்டி இருக்கு ....(தயவு செய்து குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்!!!)

வில் ஸ்மித் , நீங்க உண்மையிலேயே ஒரு legend தான்.... :))))

Friday, November 30, 2007

இனி ஒரு விதி செய்வோம்....


இனி ஒரு விதி செய்வோம்....இவர்களையும் நம்முள் ஒருவராக ஏற்று கொள்வோம்!!!

Thursday, November 29, 2007

ஆனந்த விகடன்

தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு ஆனந்த விகடன் பற்றிய அறிமுகம் தேவைப்படாது...
எனக்கு தமிழ் படிக்க தெரிஞ்ச நாளா ஆனந்த விகடன் படிக்கிறேன்...படிக்க நேரமில்லை னா கூட சும்மா புரட்டி பக்கங்கள மட்டும் மாவது பார்த்துருவேன்...
முன்னெல்லாம் சுஜாதா வோட எழுத்துக்கள மட்டுமே ரசிக்க முடிஞ்சது ...ஆனா இப்போ அப்படி இல்ல...கொஞ்சம் ரசனை வளர்ந்திருக்கு னு தான் சொல்லணும்...
கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் பிரகாஷ் ராஜ் எழுதின "சொல்லாததும் உண்மை "..படிக்கறதுக்காகவே வாங்கினேன்...என்ன நல்லா எழுதுனாருங்க அவரு!!!அந்த மாதிரி தன் வாழ்க்கையில நடந்த உண்மையெல்லாம் சொல்றதுக்கும் தனி தைரியம் வேணும்..
ஞானி--ஆனந்த விகடன் மூலமா நான் படிக்க தொடங்குன இன்னொரு எழுத்தாளர்...
நல்லா தான் எழுதுறாங்க...அப்புறம் ஜக்கி வாசுதேவ்-வினுடைய article...
இப்படி ஒவ்வொரு விஷயமும்...என்னை ரொம்பவே கவர்ந்தவை தான் ..
இன்னும் சொல்ல போனா,நான் வலையுலகை பற்றி தெரிந்து கொண்டதே ஆனந்த விகடன் படிச்சு தான்...

Tuesday, November 13, 2007

பாடல்கள்...

ஸ்கூல் நாட்கள்ல,பாடல்கள் கேட்பது மட்டுமே என் முழுமுதற் பொழுது போக்கு...கல்லூரிக்கு வந்த பிறகு பாடல்கள் கேட்பதற்காகவே பொழுத ஏற்படுத்திக்க ஆரம்பிச்சுட்டேன்...

ஒரு பாடல் கேட்டா அந்த பாடல நம்ம மனநிலயோட சம்பந்த படுத்தி பாக்குறது என் பழக்கம்.....அதே போல அந்த பாடல முதல் தடவ கேட்கும்போது என்ன மனநிலையில இருந்தேனோ,அது ஒவ்வொரு முறை அந்த பாடல கேட்கும்போதும் reflect ஆகும் ...

அதே போல பாடல்கள்ல இந்த வகையான பாட்டு தான் பிடிக்கும் னு கிடையாது......மெலடி பாடல்கள் பிடிக்கும் னா,சில சமயம் சில கானா பாடல்கள் பிடிச்சு போவும்....உதாரணத்துக்கு ,சென்னை-28 ஜல்சா பாட்டும் பிடிக்கும் ,"உன் பார்வை மேலே பட்டால் " அப்படிங்கற பாட்டும் பிடிக்கும்...

சமீபத்துல தீபாவளி படங்களோட பாடல்கள் ல எனக்கு பிடிச்சுருந்தது, பொல்லாதவன் படத்துல்ல வர்ற "மின்னல்கள் கூத்தாடும் மழை காலம் "....பாம்பே ஜெயஸ்ரீ வழக்கம் போல ரொம்ப நல்லா பாடியிருந்தாங்க....அப்புறம் அழகிய தமிழ் மகன் படத்துல வர்ற "மதுரைக்கு போகாதேடி" பாடலும் நல்லா இருந்தது ...முக்கியமா இந்த வரி "சந்திரனில் ஒரு பாதி,இந்திரனில் ஒரு பாதி....சுந்தரரே என் ஜோடி ஆனதென்ன ..??!!..."...நல்லா தான் எழுதுறாங்க ....அந்த பாட்டோட காட்சியமைப்பும் நல்லா இருக்கு ...விஜயும் ,ஸ்ரேயாவும் நல்லா ஆடியிருந்தாங்க ...[பின்குறிப்பு :நான் விஜய் ரசிகை அல்ல.... :))]

அதே போல சில படங்கள்ல வர்ற ஹீரோ அல்லது ஹீரோயின் அறிமுக பாடல்கள்ளும் நல்லா இருக்கும் .....உனக்கும் எனக்கும் லே வர்ற "பூ பறிக்க நீயும் போகாதே" பாட்டு ,ரொம்ப பிரமாதமான பாட்டு...காக்க ,காக்க படத்துல்ல வர்ற "ஒரு ஊரில் அழகே உருவாய்" பாட்டு...செமத்தியான பாட்டு...ஒரு பொண்ண இத விட அழகா வர்ணிக்க முடியுமா னு தெரில ...."உதயா" படத்துல வர்ற "பூக்கும் மலரை" பாடல் ரொம்ப நல்லா பாட்டு ...

இப்போவெல்லாம் எந்த விஷயத்த கண்டிப்பா விட்டு கொடுக்க கூடாது னு பார்த்தா ,அந்த பட்டியல்ல முதல்ல நான் எழுதுறது "பாட்டு கேக்குறது "...அப்படிங்கறது தான். ... :)))

Thursday, November 1, 2007

ஒரு அழகான பதிவு

சில நாட்களுக்கு முன்னால் எனக்கு வந்த ஒரு mail forward இது..

Maybe we have to meet a few wrong people before meeting the right one so that when we finally meet the right person, we will know how to be grateful for that gift.
.oOo.
When the door of happiness closes, another opens, but often times we look so long at the closed door that we don't see the one which has been opened for us.
.oOo.
The best kind of friend is the kind you can sit on a porch and swing with, never say a word, and then walk away feeling like it was the best conversation you've ever had.
.oOo.
It's true that we don't know what we've got until we lose it, but it's also true that we don't know what we've been missing until it arrives.
.oOo.
Giving someone all your love is never an assurance that they'll love you back! Don't expect love in return; just wait for it to grow in their heart but if it doesn't, be content it grew in yours.
You are liked and loved by others, far more than you think.
.oOo.
It takes only a minute to get a crush on someone, an hour to like someone, and a day to love someone, but it takes a lifetime to forget someone.
.oOo.
Don't go for looks; they can deceive.
Don't go for wealth; even that fades away.
Go for someone who makes you smile because it takes only a smile to make a dark day seem bright.
Find the one that makes your heart smile...
.oOo.
There are moments in life when you miss someone so much that you just want to pick them from your dreams and hug them for real!
.oOo.
Dream what you want to dream; go where you want to go; be what you want to be, because you have only one life and one chance to do all the things you want to do.
.oOo.
May you have enough happiness to make you sweet, enough trials to make you strong, enough sorrow to keep you human, enough hope to make you happy.
.oOo.
Always put yourself in others' shoes. If you feel that it hurts you, it probably hurts the other person, too.
.oOo.
The happiest of people don't necessarily have the best of everything; they just make the most of everything that comes along their way.
.oOo.
Happiness lives for those who cry, those who hurt, those who have searched, and those who have tried, for only they can appreciate the importance of people who have touched their lives.
.oOo.
Love begins with a smile, grows with a kiss and ends with a tear.
.oOo.
The brightest future will always be based on a forgotten past, you can't go on well in life until you let go of your pastfailures and heartaches.
.oOo.
When you were born, you were crying and everyone around you was smiling. Live your life so that when you die, you're the one who is smiling and everyone around you is crying.
.oOo.

ஆங்கிலத்துல பதிவு போட்டதுக்காக மன்னிக்கணும்...இருந்தாலும் இந்த பதிவு உங்க எல்லாருக்கும் பிடிச்சுருக்கும் னு நினைக்கிறேன்... :)))

Monday, October 29, 2007

சென்னையில் ஓர் மழைக்காலம்

சென்னையில் ஓர் மழைக்காலம்
நானும் சென்னைக்கு வந்து கிட்டத்தட்ட 1 வருஷம் ஆக போகுது.எனக்கு தெரிஞ்சு நேத்து தான் நல்லா மழை பேஞ்சுது.அதுவும் நேத்து சண்டே வேறயா .....வீட்ல தானே இருந்தோம்...எவ்ளோ நேரம் தான் வீட்ல உட்கார்ந்து டிவி பாக்குறது...ரொம்ப போர்..சரி கொஞ்சம் பொழுது போக்கலாம் னு வீட்ல எல்லாரையும் வம்புக்கு இழுத்து கொஞ்சம் சண்டை போட்டு பொழுது போக்கலாம் னு நெனச்சா யாரும் சரியாவே respond பண்ணலே.....
சரி னு..மழை பத்தியே ப்ளாக் எழுதலாம் னு....

(*)மழையின் போது road எல்லாம் மட்டும் சேதம் ஆகாம இருந்தா நாம எல்லோருமே மழைய நேசிக்க ஆரம்பிச்சுடுவோம் .

இன்னும் மழை வரும்போது நீங்க எப்படி என்ஜாய் பண்ணலாம் னு கேட்டா
1)சூடா டீ போட்டு குடிங்க....கூடவே ஒரு melody பாட்டும் கேட்டிங்கனா...செமத்தியா இருக்கும்!!!!
2)அக்கம் பக்கத்துலே ஏதாவது குட்டி புள்ளைங்க இருந்தா அவங்களோட சேர்ந்து கப்பல் கூட விடலாம்....ஹி..ஹி..ஹி...
3)அதுக்கு அப்புறமும் உங்களுக்கு பொழுது போகல,அப்படின்னா இந்த மாதிரி மொக்கை யா ஒரு ப்ளாக் கூட எழுதலாம்.
இப்ப புரிஞ்சுருக்குமே...நான் எப்படி மழை பெய்யும் போது.....time pass பண்றேன் னு...ஹி..ஹி...

Sunday, September 9, 2007

சக் தே இந்தியா

சக் தே இந்தியா
ஹிந்தி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு.ஒரு நல்ல ஹிந்தி படம் பாக்கணும் போல இருந்த்து.அப்போ தான் முன்னாடி நாள் ச்க் தே இந்தியா பத்தி ப்ரண்ட் சொன்னது நியாபகம் வந்தது.
சரி என் ரூமி யோட சேர்ந்து இந்த படத்த பார்க்க ஆரம்பிச்சேன்.
பொதுவா யாஷ் சோப்ரா படம் னா ரொம்ப பிரம்மாண்டமா இருக்கும்.அது படி பார்த்தா இந்த படமும் ஒரு நல்ல கதையம்சத்தோட இருக்குறதால பிரம்மாண்டமா இருந்தது.
முதல்ல இப்படி ஒரு கதை ய choose பண்ணதுக்காக ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும் ந்ம்ம சோப்ரா க்கு.அப்புற்ம் அந்த பொண்ணுங்க....எல்லாருமே ரொம்ப நல்லா ந்டிச்சிருந்தாங்க.....சாரி....விளையாடி இருந்தாங்க......!!
இந்த படம் ஷாருக் கு நல்ல பேரு வாங்கி தந்திருக்கு.வயசானாலும் ந்டிப்புல "பர்தேஸ்" விட ந்ல்ல பண்ணிருக்கார்.அவர் பேசுற வசன்ங்களும் கூட ரொம்ப நல்லா இருக்கு.முக்கியமா போட்டி போகுறதுக்கு முன்னாடி அவர் பொண்ணுங்கள அட்ரஸ் பண்ற ஸீன் ரொம்ப பிரமாத்ம்.நான் கூட சரி ஒரு 5 நிமிஷத்துக்காச்சும் பேசி மொக்கை போடுவாரு நினைச்சேன்.ஆனா சுருக்கமா "இந்த 70 நிமிஷம் தான் உஙக வாழ்க்கையிலே முக்கியமான தருணம்" னு சொல்லி ரொம்ப சிம்பிளா முடிச்சிருந்தது நல்லாயிருந்தது.
அப்புறம் அந்த பொண்ணுங்க ஒவ்வொருத்தருடைய இன்ட்ரோ வுமே சூப்பர்.அதுலயும் அந்த ஆட்டோ காரரோட சண்டை போடுறது ரொம்ப ரியலா இருநதது.
அதே போல,"ஹாக்கி யெல்லாம் ஒரு விளையாட்டுனா நம்ம கல்யாண்த்த தள்ளி போட சொல்லற"...இந்தியன் கிரிக்கெட் கேப்டன் மாப்பிளை கேட்கிறது நம்ம நாட்டுல ஹாக்கிய எந்த அளவுக்கு மக்கள் மறக்குறாங்க கிறதே
ரொம்ப நல்லா காட்டுது.
உங்களுக்கு ஹிந்தி புரியும் னா கண்டிப்பா இந்த படத்த பாருங்க!!!!
(பின் குறிப்பு:
என்னடா இவ? தமிழினி னு பேரு வச்சுக்கிட்டு ஹிந்தி படம் பார்க்க சொல்றாளே யோசிக்கிறிங்களா???
நல்ல விஷயம் எங்க இருந்தாலும் பாராட்டுற்து தானே தமிழர் மரபு....(ஸ்ஸ்ஸபா.......என்னவெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு!!!!)...... :))) )

Sunday, September 2, 2007

அழகிய திருச்சி ந்கரினிலே....

நான் பிறந்தது சிங்கார சென்னை என்றாலும், என்னோட முன்றாவது வயசுலயே நாங்க குடும்பத்தோட திருச்சி போயிட்டோம்.
திருச்சி பத்தி ஒன்றுமே தெரியாதவங்களுக்காக தான் இந்த பதிவு :
1)திருச்சி னாலே முதல்ல நம் ஞாபகத்துக்கு வரது மலைக்கோட்டை தான்.
நான் முதல்ல தடவ போன போது,என்னை ரொம்ப கவர்ந்தது தாயுமானவர் சன்னதி தான்.அங்க நந்தி சிலைக்கு பின்னாலே ஒரு இடம் இருக்கும்.அங்க நின்னு சாமி பாக்குறது ஒரு தனி சந்தோஷம்.நான் அடிக்கடி போற கோயில் மலைக்கோட்டை தான்.அதே போல திருச்சி லே இருக்குற ஒவ்வொரு கோயிலுமே ரொம்ப ஸ்பெஷல் தான்.திருவரங்கம் ரங்கநாதர் கோயில்,சமயபுரம் மாரியம்மன் கோயில்,தென்னூர் நாச்சியார் கோயில்,வெக்காளி அம்மன் கோயில்,திருவானைக்காவல்,வயலூர் முருகன் கோயில்,கல்லுகுழி ஆஞ்சநேயர் கோயில் இன்னும் பல....
2)காவேரி தண்ணி.அதுவும் 24மணி நேரமும்.
3)கோயமுத்தூர் பிஸினஸ் சென்ட்டர் னா திருச்சி எஜுகேஷன் சென்டர்.நிறைய பள்ளி,கல்லூரிகள் இருக்கு.NIT (National Institute of Technology) யும்,கி.ஆ.பெ மருத்துவ கல்லூரி யும் கூட இருக்கு.
4)பேருந்து வசதி: சென்னை ல் இருக்குறதெல்லாம் பேருந்தா??திருச்சி ல போய் பாருஙக.........சும்மா சூப்பரா இருக்கும்.ட்ராபிக் குட கம்மி தான்.....சென்னை ல மழை பெய்யும் போது பேருந்து குள்ள இருந்தா தான் நனைந்து போறோம்.திருச்சி ப்ரைவேட் பஸ் களும் இருக்குற்தால போட்டி போட்டு வசதி பண்ணி வச்சிருப்பாங்க!!
5)தமிழ்நாட்டோட மத்தி ல இருக்குறதால தொழில் தொடங்க இது ஒரு நல்ல ஊர்.ரயில்வே ஜங்ஷன் இருக்கு.....அது தவிர 2 பெரிய பஸ் ஸ்டாண்ட் இருக்கு....!!!
6)திருவரங்கத்து அரவணை,அசோகா ஸ்வீட்- இனிப்புகள் இது ரெண்டு மே திருச்சி யோட ஸ்பெஷல் லான இனிப்பு வகைகள்.திருவரங்கன் கோயிலுக்குள்ள கிடைக்கும்.
எல்லாத்தையும் விட,எங்க மக்கள் அன்பானவங்க....................நாங்களெல்லாம் நல்லவங்க!!!!!!!

Tuesday, August 28, 2007

என் முதல் பதிவு

எல்லாருக்கும் வணக்கம்!!
என் பல நாள் கனவு இன்னிக்கு நிறைவேறி இருக்கு.
ஓரு வழியா ப்ளாக் தொடங்கிடடேன்.
அதுவும் தமிழ் லே.ரொம்ப சந்தோஷம்.
கூடிய சிக்கிரம் பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன்.