Monday, October 10, 2011

சிந்தனை செய் மனமே - 3


பகல் பத்தரை மணியிருக்கும்...என் சென்னை தோழியிடமிருந்து ஒரு அழைப்பு..."இவ வேலை நேரத்துல கூப்பிட மாட்டாளே....என்னவாயிருக்கும்..."யோசித்து கொண்டே அவளை அழைத்தேன்..."சீக்கிரமா obituary மெயில் ல பாரு...உன் மைசூர் சிநேகிதர் இறந்துட்டார் ..."தூக்கி வாரி போட்டது எனக்கு...அவசரமாக மெயில் களில் தேடினேன்..."அய்யயோ...அவரே தான்..."..என் மைசூர் நண்பர்...சுமார் முப்பது வயதிருக்கும்...காதல் திருமணம் புரிந்து சமீபத்தில் தகப்பனும் ஆகிவிட்டார்...மைசூர் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டபோது அவர் புற்று நோயால் மரணம் அடைந்தார் என்றும் தெரிய வந்தது...அவர் புகைக்கும் பழக்கமுடையவர் என்பது எனக்கு தெரியும்..ஆனால் புற்று நோயால் பாதிக்க படும் அளவிற்கு புகைத்து இருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை.

என் தோழர்கள் பலரையும்,ஓரிரண்டு உறவினர்களையும் இந்த பழக்கத்திற்கு காவு கொடுத்துவிட்டேன்.இனியும் யாரையும் இந்த பழக்கத்திற்கு காவு கொடுக்க நான் தயாராய் இல்லை.புகைப்பதால் என்ன ஆகும் என பலமுறை புகைப்பவர்களிடம் கேட்டதுண்டு...எல்லாம் ஒரு கிக்கு தான்...என்று பதில் வரும்..."அப்போ அதுனால கேன்சர் வரும் போது"...."அதெல்லாம் வராது"...இப்படி தான் பதில் வரும்...அப்படியே மீறினால் "நீ எண்பது வயசு வரைக்கும் இருந்து என்ன சாதிக்க போற??."அதை பார்க்கவாவது நீ இருக்கணுமே" என்று சொல்லி இருக்கிறேன்...ஆனால் அதில் இருவர் இன்று இல்லை...

புகைக்க தொடங்கியதும் மூளைக்கு எடுத்து செல்ல படும் ரத்தத்தின் அளவு குறைகிறது...சிகரட்டின் மூல பொருளான நிகோடின் இந்த வேலையை செய்கிறது...இதனால் மூளையில் ஏற்படும் மந்த நிலையின் காரணம் அந்த "கிக்" ...போதை...நாளடைவில் போதையின் தேவை அதிகரித்து போவதால் எடுத்துகொள்ளும் புகையின் அளவும் அதிகரித்து....இதனால் நுரையிரலில் தார் படிவது தொடங்கி பற்களில் காரை ஏற்படுவது வரை ஏராளமான உபாதைகள் இலவசம்..புற்றுநோய் வரும் அளவிற்கு உடல்நிலை பாதிக்க படுகிறது...
அதுமட்டுமில்லாமல் மறதியில் தொடங்கி குழந்தை பேறின்மை வரை புகையினால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.

ஸ்டைலுக்காகவும்,என்னதான் இது என்று பார்க்கவும் ஆரம்பிக்கும் பழக்கமானது உயிரையே குடித்துவிடும் அபாயத்திற்கு கொண்டுசென்று விடுகிறது...சமீபத்தில் பெண்களும் புகைக்க தொடங்கியதும் ஒரு பெரும் அதிர்ச்சி...இதுலுமா 33%.....?!...வேண்டாம் தாயே...

ஒரு வேளை இந்த பதிவை படிக்கும் தாங்கள் புகைப்பவரெனில்,இந்த பதிவை படித்து விட்டு அடுத்த முறை சிகரெட்டை கையில் எடுக்கும் போது உங்கள் அன்புக்குரியவர்களை எண்ணி பார்த்து..."ஐயோ...வேண்டாம்"..என்று தோன்றினால்....அதுவே எனக்கு கிடைத்த வெற்றி.

புகை பழக்கத்தினால் புற்றுநோய் இரையாகி உயிர் துறந்த என் இரு நண்பர்கள் மஞ்சுநாத் மற்றும் எழிலரசன் அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..

Friday, April 22, 2011

நான் வந்துட்டேன்..

எல்லாருக்கும் வணக்கம்...
எல்லாரும் நல்ல இருப்பிங்க னு நினைக்குறேன் ...
திரும்பவும் ப்ளாக் எழுத விரும்புறேன்...கூடிய சீக்கிரம் ஒரு அர்த்தமுள்ள பதிவோட உங்கள சந்திக்கிறேன்...
இடையில கொஞ்சம் எழுதாம விட்டுட்டேன்...இனி தொடர்ந்து எழுதுவேன்...

Thursday, August 27, 2009

இனிய புதிரின் இனிப்பான விடை...

ரொம்ப சரியா சொன்னிங்க சத்யா அண்ணே....

செல்வி தமிழினி,திருமதி தமிழினி யாக போறேன் வருகிற ஞாயிற்று கிழமை லருந்து...அதாவது .ஆகஸ்ட் 30 ம் தேதி...

திருமணத்திற்கு பின் பெங்களூர் ல இருப்பேன்...

அப்படியே தொடர்ந்து எழுதவும் முயற்சிக்கிறேன் :))))))))))))))

இப்படிக்கு தங்கள் அனைவரின் வாழ்த்துக்களை வேண்டும்....தங்கள் இனிய தமிழினி....

Wednesday, August 26, 2009

ஒரு இனிய புதிர்?????

எல்லாருக்கும் வணக்கம்.....

எப்போதும் கருத்து சொல்லுவேன்...அல்லது விமர்சனம் பண்ணுவேன்....இல்லேனா மொக்கை போடுவேன்....

ஆனால் இந்த முறை கொஞ்சம் புதுசா உங்கள் வாழ்த்துக்களை வேண்டிகிறேன்...எதுக்காக னு எதாவது யூகிக்க முடியுதா?????
யோசிங்க..................

இன்னும் நல்லா...........................

உங்கள் யுகங்களை சொல்லுங்க.....அதுக்கப்புறம் நான் என்ன விவரம் னு சொல்றேன்....

Sunday, March 8, 2009

நண்பர்களே நலமா???

எல்லாருக்கும் வணக்கம்...எல்லாரும் நல்லா இருக்கீங்க னு நினைக்குறேன்...

எல்லாரும் என்னை மன்னிக்கணும்....சரியா 6 மாசத்துக்கு பிறகு பதிவு போடுறேன்...கையில கணினி இல்லாத காரணத்துனால எழுத முடியல....
இந்த 6 மாசத்துல வேலை பளுவும் அதிகம்...

இந்த 6 மாசத்துல நடந்த சில முக்கியமான விஷயங்கள இங்க பகிர்ந்துக்க போறேன்...
1)சரியா அக்டோபர் மாசம்....திடீர் னு ஆபீஸ் ஐடி ல ஒரு மெயில்....பார்த்தா நம்ம வெட்டி அண்ணே...ரொம்ப சந்தோசமா பதில் எழுதுன எனக்கு காத்திருந்தது அடுத்த இன்ப அதிர்ச்சி....வெட்டி அண்ணே என்கிட்டே போன் ல பேசினாங்க....எனக்கு ரெண்டு கையிலயும் ஆஸ்கார் கிடைச்ச சந்தோஷம்...:)))))ரொம்ப நன்றி வெட்டி அண்ணே.... :)))))

2)டிசம்பர் மாசம் ரொம்ப கடினமான மாதமாக இருந்தது....அதிகம் வீட்டுக்கு போக முடியாமல்,வார இறுதிகள் கூட ஆபீஸ் வர வேண்டியதா போச்சு...ஆனா,ஜனவரி லருந்து கொஞ்சம் பரவா இல்லே.. :)

3)ஆறு மாதங்கள்ல நிறைய படம் பார்த்தேன்...நினைவுல நின்ன சில படங்கள் னா "அபியும்,நானும்","செவென் பவுண்ட்ஸ்" மட்டும் தான்...

4)பிப்ரவரி இந்தியா வே கொண்டாட வேண்டிய மாதம்...இசைப்புயலுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்த மாதம்....எனக்கு என்னவோ நானே விருது வாங்குன மாதிரி அவ்வளவு சந்தோஷம்...அவருக்கு விருது கிடைத்த போது நான் அலுவலகத்தில் இருந்தேன்...அலுவலகத்தில் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்....இந்திய திறமைக்கு உலக அங்கீகாரம்...செம சந்தோஷம்...

சரி....மற்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்....அது வரை...டேக் கேர்....

Monday, September 8, 2008

மீ..மீ...

உன்னை பத்தி நறுக்கு ன்னு 7 விஷயம் சொல்லு பார்போம் னு சவால் விட்ருக்காங்க இல்லத்தரசி யும் ,சுகன்யா வும்...விடுவோமா....நாங்கெல்லாம் யாரு....(ஆமாமா?! அப்டின்னு சலிச்சுகுறது காதுல கேட்குது.... :)))

இனி என்னை பத்தி 7 விவரங்கள்...

1)பிறந்தது என்னவோ சென்னை னாலும் வளர்ந்தது...படிச்சது எல்லாமே திருச்சிராபள்ளி ல தான்....அப்புறம் மறுபடி கொஞ்ச நாள் சென்னை வாசம்....எல்லாம் பொட்டி தட்றதுக்கு தான்...அப்புறம் "நீ சென்னை ல பொட்டி தட்னது போதும்...மைசூர் க்கு போ னு அனுப்பி வச்சுட்டாங்க...ம்ம்ம்..."

2)படிச்சது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்....

3)கிட்டத்தட்ட மூணு வருஷமா பொட்டி தட்டிட்டு இருக்கேன் ... :)))

4)பொழுது போக்கு...அது நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறும்...சில சமயம் புத்தகங்கள் படிக்கறது...பாடல்கள் கேட்குறது(முக்கால்வாசி இதான் செய்வேன்..),பதிவு எழுதுறது,வரையுறது (பிக்காசா அளவுக்கு இல்லேனாலும் ஏதோ சுமாரா வரைவேன்...),அப்பா-அம்மா கிட்ட போன்ல மொக்கை போடுறது...(மிக பெரிய பொறுமை சாலிகள்...)

5)பிடித்தவை : அம்மா மடியில படுத்து தூங்கறது,அப்பா கிட்ட நேரம் காலம் பார்க்காம உலகத்துல உள்ள எல்லா விஷயங்களையும் பத்தியும் பேசுறது ,மழை,என் பதிவுக்கு நீங்க போடுற பின்னுட்டங்களை படிக்கறது,குழந்தையின் புன்சிரிப்பு,வலைத்தளத்துல நேரம் காலம் தெரியாம எதப்பத்தியாவது படிக்கறது,அம்மாவோட சமையல்,அப்பாவோட செல்ல கோபம்,மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்,தான்தோன்றி கோயில் சிவா பெருமான்,எப்போதாவது போனில் கேட்கும் நண்பர்களின் குறள்:) ,அக்கா குழந்தைகளின் மழலை பேச்சு,திருச்சி வீடு,வீட்டு வாசலில் இருக்கும் துளசி மாடம்,மழைக்கு பின் வரும் மண் வாசம்,சிரிப்பவர்களின் கண்களின் ஓரத்தில் வரும் சுருக்கம்,நண்பர்களின் செல்ல அதட்டல்,மோதிரங்கள்,நீளமான காதணிகள்,மருதாணி,கரடி பொம்மைகள்,என் க்யுபுல இருக்கற சின்ன பிள்ளையார் பொம்மை.....இப்படி இந்த லிஸ்ட் ரொம்ப பெருசு......!!! (ஸ்ஸ்ஸ்ஸ்...கண்ணு கட்டுது...:))))

7)நான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது...என்னே பொறுத்த வரைக்கும் யாருக்கும் பெருசா உதவ முடியலைன்னாலும்,தொந்தரவு கொடுக்காம இருந்தா,அதுவே போதும்....மத்தப்படி ரொம்ப சுலபமா எல்லார்கிட்டயும் பழகுவேன்...முடிஞ்சா என்ன சுற்றி இருக்குறவங்கள சிரிக்க வச்சுட்டு இருப்பேன் (அப்போ தானே நானும் சிரிச்சுட்டே இருக்க முடியும்....)

சரி,இனி யார மாட்டி விடலாம்...?!

1)சத்யா அண்ணன்

2)ரம்யா ரமணி

3)ஜி

4)சரவணா குமார்

மக்கா,எல்லாரும் சீக்கிரமா வந்து எழுதுங்கப்பா.... :))))))

Monday, September 1, 2008

தமிழினிக்கு இன்றோடு ஒரு வயது......வலை பூவில் எழுத தொடங்கி 1 வருடம் முடிந்து விட்டது...ஆதலால்,இன்றோடு என் வலை பூவுக்கு ஒரு வயது முடிந்து விட்டது..
சென்னையில் இருந்த போது எழுத தொடங்கினேன்..சத்யா அண்ணனை தவிர பதிவர்கள் யாரும் என் வலைப்பூவை படித்ததாக நினைவில்லை...ஆனால்,என் உடன் பணியாற்றிய நண்பர்கள் சிலர் எனக்கு அருகிலேயே உட்கார்ந்து கொண்டு என் வலைப்பூவை படித்து தங்கள் கருத்துக்களை கூறியதுண்டு.. :)

தொடக்கத்தில் எதை பற்றி எழுதுவது என்று நிறைய சந்தேகங்கள் வரும்..
எழுத ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திய பதிவுகள் நிறைய...!

இப்போதெல்லாம் சரளமாக எழுத வருகிறது...சந்தேகங்களையும் கடந்து... :)

எழுதுவது மிகவும் பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதவே விளைகிறேன்...எழுதுவேன்... :))))))

பதிவுகள் எழுதுவதை ஒரு பொழுது போக்காக கருதாமல்,விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் ஒரு தளமாக கருதுகிறேன்..எழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதில் எனக்கு என்றுமே மாற்று கருத்து இருந்ததில்லை..

சிந்தனை செய் மனமே-பதிவுகள் தாம் நான் எழுதியதில் எனக்கு பிடித்தது... :)

(நான் எழுதியதில் உங்களுக்கு பிடித்த பதிவுகள் என்னென்ன என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்...)

இந்த தருணத்தில் நான் சிலருக்கு நன்றி கூற கடமை பட்டுருக்கிறேன்...

என் வலைப்பூவின் முதல் ரசிகர்களான என் சென்னை நண்பர்கள்,தமிழ் மணத்தில் என் பதிவுகளை சேர்க்க எனக்கு உதவிய சத்யா அண்ணன்,என் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் என் பதிவர் நண்பர்கள்,நான் இந்த வலை பூவை ஆரம்பிக்க எனக்கு ஊக்கம் தந்த என் தோழிகள்,எப்போதும் என் பதிவுகளை முதலில் படிக்கும் என் பெற்றோர்,எனக்கு தமிழில் ஆர்வம் வர காரணமாயிருந்த என் தமிழ் ஆசிரியைகள் அனைவருக்கும் நான் நன்றி கூறி கொள்கிறேன்...

என்றும் என் எழுத்துக்களை படித்து உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்...இது போல இன்னும் பல வருடங்கள் கடந்தும் நான் எழுதுவதற்கு எனக்கு ஊக்கம் தாருங்கள்.... :)))))