Monday, September 8, 2008

மீ..மீ...

உன்னை பத்தி நறுக்கு ன்னு 7 விஷயம் சொல்லு பார்போம் னு சவால் விட்ருக்காங்க இல்லத்தரசி யும் ,சுகன்யா வும்...விடுவோமா....நாங்கெல்லாம் யாரு....(ஆமாமா?! அப்டின்னு சலிச்சுகுறது காதுல கேட்குது.... :)))

இனி என்னை பத்தி 7 விவரங்கள்...

1)பிறந்தது என்னவோ சென்னை னாலும் வளர்ந்தது...படிச்சது எல்லாமே திருச்சிராபள்ளி ல தான்....அப்புறம் மறுபடி கொஞ்ச நாள் சென்னை வாசம்....எல்லாம் பொட்டி தட்றதுக்கு தான்...அப்புறம் "நீ சென்னை ல பொட்டி தட்னது போதும்...மைசூர் க்கு போ னு அனுப்பி வச்சுட்டாங்க...ம்ம்ம்..."

2)படிச்சது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்....

3)கிட்டத்தட்ட மூணு வருஷமா பொட்டி தட்டிட்டு இருக்கேன் ... :)))

4)பொழுது போக்கு...அது நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறும்...சில சமயம் புத்தகங்கள் படிக்கறது...பாடல்கள் கேட்குறது(முக்கால்வாசி இதான் செய்வேன்..),பதிவு எழுதுறது,வரையுறது (பிக்காசா அளவுக்கு இல்லேனாலும் ஏதோ சுமாரா வரைவேன்...),அப்பா-அம்மா கிட்ட போன்ல மொக்கை போடுறது...(மிக பெரிய பொறுமை சாலிகள்...)

5)பிடித்தவை : அம்மா மடியில படுத்து தூங்கறது,அப்பா கிட்ட நேரம் காலம் பார்க்காம உலகத்துல உள்ள எல்லா விஷயங்களையும் பத்தியும் பேசுறது ,மழை,என் பதிவுக்கு நீங்க போடுற பின்னுட்டங்களை படிக்கறது,குழந்தையின் புன்சிரிப்பு,வலைத்தளத்துல நேரம் காலம் தெரியாம எதப்பத்தியாவது படிக்கறது,அம்மாவோட சமையல்,அப்பாவோட செல்ல கோபம்,மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்,தான்தோன்றி கோயில் சிவா பெருமான்,எப்போதாவது போனில் கேட்கும் நண்பர்களின் குறள்:) ,அக்கா குழந்தைகளின் மழலை பேச்சு,திருச்சி வீடு,வீட்டு வாசலில் இருக்கும் துளசி மாடம்,மழைக்கு பின் வரும் மண் வாசம்,சிரிப்பவர்களின் கண்களின் ஓரத்தில் வரும் சுருக்கம்,நண்பர்களின் செல்ல அதட்டல்,மோதிரங்கள்,நீளமான காதணிகள்,மருதாணி,கரடி பொம்மைகள்,என் க்யுபுல இருக்கற சின்ன பிள்ளையார் பொம்மை.....இப்படி இந்த லிஸ்ட் ரொம்ப பெருசு......!!! (ஸ்ஸ்ஸ்ஸ்...கண்ணு கட்டுது...:))))

7)நான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது...என்னே பொறுத்த வரைக்கும் யாருக்கும் பெருசா உதவ முடியலைன்னாலும்,தொந்தரவு கொடுக்காம இருந்தா,அதுவே போதும்....மத்தப்படி ரொம்ப சுலபமா எல்லார்கிட்டயும் பழகுவேன்...முடிஞ்சா என்ன சுற்றி இருக்குறவங்கள சிரிக்க வச்சுட்டு இருப்பேன் (அப்போ தானே நானும் சிரிச்சுட்டே இருக்க முடியும்....)

சரி,இனி யார மாட்டி விடலாம்...?!

1)சத்யா அண்ணன்

2)ரம்யா ரமணி

3)ஜி

4)சரவணா குமார்

மக்கா,எல்லாரும் சீக்கிரமா வந்து எழுதுங்கப்பா.... :))))))

35 comments:

Illatharasi said...

1, 2, 3, 4, 5, 7..... 6vathu point enge.... athuvum potta piragu, ennoda vimarsanam ;)

Saravana Kumar MSK said...

Me the first??

Saravana Kumar MSK said...

புடிச்சி போட்டுடீங்களே.. ??

Saravana Kumar MSK said...

இந்த தொடர்பதிவுக்கு நாலு பேர புடிச்சி போடனுமா???

Saravana Kumar MSK said...

ரொம்ப நல்லா நீங்க எழுதிட்டீங்க..
கலக்கல்..
:))

தமிழினி..... said...

//->இல்லத்தரசி
ஆகா...முக்கியமான விவரத்த விட்டுட்டேனே....
சரி,இப்போ எழுதிட்டா போச்சு! :)

6)எனக்கு நண்பர்கள் ரொம்ப அதிகம்.....எப்போதுமே நண்பர்கள் சூழ்ந்து இருக்குறது தான் என்னோட பெரிய பலம்...நண்பர்கள் இல்லாத ஒரு உலகத்த என்னால நெனச்சு கூட பார்க்க முடியாது....I love my friends.....i really cherish each and evry1 of them....CHEERS!!!!

தமிழினி..... said...

//->சரவணா குமார்
இல்ல...u the next...!! :)))))
இல்லத்தரசி முந்திகிட்டாங்க.. :))))

//ரொம்ப நல்லா நீங்க எழுதிட்டீங்க..
கலக்கல்..
:))

//
நன்றி சரவணா...நீங்களும் சீக்ரமா எழுதுங்க....

Sathiya said...

//வரையுறது//
ஒ! நீங்களும் வரைவீங்களா!

//சிரிப்பவர்களின் கண்களின் ஓரத்தில் வரும் சுருக்கம்//
ஆ ஹா! மத்தவங்க சிரிக்கும் போது இதை தான் கவனிப்பீங்களா;)

//ஸ்ஸ்ஸ்ஸ்...கண்ணு கட்டுது...:))))//
எங்களுக்கும் தான்;)

//நான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது//
இப்படி ஆரமிச்சிட்டு, எல்லாத்தையும் சொல்லிடீங்களே;)

//முடிஞ்சா என்ன சுற்றி இருக்குறவங்கள சிரிக்க வச்சுட்டு இருப்பேன் (அப்போ தானே நானும் சிரிச்சுட்டே இருக்க முடியும்....)//
இதே தான் நானும்!

மாட்டி விட்டதுக்கு நன்றி வித்யா! கூடிய சீக்கிரம் பதிவு போடறேன்!

Sri said...

அக்கா திருச்சியா நீங்க?? நானும் தான்..!! :)) இதுல நிறைய விஷயங்கள் உங்களுக்கும், எனக்கும் ஒத்து போகுது.. திருச்சி உட்பட. நல்லா எழுதீருக்கீங்க...!! :))

தமிழினி..... said...

//->ஸ்ரீ
அக்கா திருச்சியா நீங்க?? நானும் தான்..!! :)) இதுல நிறைய விஷயங்கள் உங்களுக்கும், எனக்கும் ஒத்து போகுது.. திருச்சி உட்பட. நல்லா எழுதீருக்கீங்க...!! :))
//
ஹ்ம்ம்....பொதுவா நான் தான் எல்லாரையும் அண்ணன்,அக்கா,அண்ணி னு பிட்ட போடுவேன்....நீ எனக்கே பிட்ட போடுற.....நீ நடத்து...
அப்புறம்,உன் வலை பூ ரொம்ப அழகா இருக்கு...
என் பேரு கூட உன்கூட ஒத்து போகுது...அத கவனிச்சியா நீ?!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

Sathiya said...

//ஹ்ம்ம்....பொதுவா நான் தான் எல்லாரையும் அண்ணன்,அக்கா,அண்ணி னு பிட்ட போடுவேன்....நீ எனக்கே பிட்ட போடுற.....நீ நடத்து...//

அப்படி போடு போடு போடு:)))

Have posted the MEME here;)
http://justicegopinath.blogspot.com

Saravana Kumar MSK said...

// தமிழினி..... said...
//->ஸ்ரீ
அக்கா திருச்சியா நீங்க?? நானும் தான்..!! :)) இதுல நிறைய விஷயங்கள் உங்களுக்கும், எனக்கும் ஒத்து போகுது.. திருச்சி உட்பட. நல்லா எழுதீருக்கீங்க...!! :))
//
ஹ்ம்ம்....பொதுவா நான் தான் எல்லாரையும் அண்ணன்,அக்கா,அண்ணி னு பிட்ட போடுவேன்....நீ எனக்கே பிட்ட போடுற.....நீ நடத்து...
அப்புறம்,உன் வலை பூ ரொம்ப அழகா இருக்கு...
என் பேரு கூட உன்கூட ஒத்து போகுது...அத கவனிச்சியா நீ?!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!//


சபாஷ்.. சரியான போட்டி.. :))

Ramya Ramani said...

அடடே தமிழினி ரொம்ப நாள் கழிச்சு பதிவிட்டிருக்கிங்களேன்னு வந்து பார்த்தா..இப்படி ஒரு டாக்!!

நல்லா இருக்கம்மா..நல்லா இருங்க..

Ramya Ramani said...

Point 5 - ரசனைகள் அருமை :)

Saravana Kumar MSK said...

உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என் வலைத்தளத்தில்.. வந்து இன்புறுங்கள்..
:))

Sri said...

//ஹ்ம்ம்....பொதுவா நான் தான் எல்லாரையும் அண்ணன்,அக்கா,அண்ணி னு பிட்ட போடுவேன்....நீ எனக்கே பிட்ட போடுற.....நீ நடத்து...//

யக்கா ச்சின்னப் பசங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யவங்கள அப்படித்தான் கூப்டனும்னு என் அம்மா சொல்லிருக்காங்க..!! ;))

//அப்புறம்,உன் வலை பூ ரொம்ப அழகா இருக்கு...//

அப்படியா நன்றிக்கா..!! :))

//என் பேரு கூட உன்கூட ஒத்து போகுது...அத கவனிச்சியா நீ?!//

ஆமாம்..!! :)) ஆனா உங்களுக்கு நாலெழுத்து எனக்கு மூனெழுத்து..!! :)

பிரபு said...

நான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது...என்னே பொறுத்த வரைக்கும் யாருக்கும் பெருசா உதவ முடியலைன்னாலும்,தொந்தரவு கொடுக்காம இருந்தா,அதுவே போதும்..../
/////////////////////////

என்ன மாதிரி

தமிழினி..... said...

////
->சத்யா
ஹ்ம்ம்....பொதுவா நான் தான் எல்லாரையும் அண்ணன்,அக்கா,அண்ணி னு பிட்ட போடுவேன்....நீ எனக்கே பிட்ட போடுற.....நீ நடத்து...//

அப்படி போடு போடு போடு:)))
//
பின்னூட்டத்துக்கே பின்னூட்டமா....சூப்பரப்பு....!! :))))
ஆனாலும் இவ்வளவு வில்லத்தனம் உடம்புக்கு ஆகாது....

தமிழினி..... said...

//->சரவணா குமார்
உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என் வலைத்தளத்தில்.. வந்து இன்புறுங்கள்..
:))

//
இன்னொரு தொடர் பதிவா.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தி தான் ப்ளாக ரணகளமாக்கி வச்சுருக்கங்கய்யா...!!

தமிழினி..... said...

//->பிரபு
நான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது...என்னே பொறுத்த வரைக்கும் யாருக்கும் பெருசா உதவ முடியலைன்னாலும்,தொந்தரவு கொடுக்காம இருந்தா,அதுவே போதும்..../
/////////////////////////

என்ன மாதிரி
//
யாருப்பா அது.......அடுத்த பிட்ட போடுறது....
முடியல...முடியல...(Just kidding!!) :)))

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி...

ஜி said...

//சிரிப்பவர்களின் கண்களின் ஓரத்தில் வரும் சுருக்கம்//

Sema cute.... :)))

//இன்னொரு தொடர் பதிவா.....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தி தான் ப்ளாக ரணகளமாக்கி வச்சுருக்கங்கய்யா...!!
//

Itha naanga sollanum :)))

Anonymous said...

hey..enna aachu no news?en blog pakkumum alyae kanom?

Saravana Kumar MSK said...

Hey vidya, Busy??

No new posts????????????

Sathish said...

7 visayam thaana kettanga... ivvalavu ezhudi torture pannariye.....

தமிழினி..... said...

->சதீஷ்
யாருப்பா நீயி?இந்த மாதிரி எக்கு தப்பா பின்னூட்டம் போடுற?!

ஆனா ஒன்னு......என்னதான் பேசினாலும் தவறாம வந்து படிச்சு பார்த்து பின்னூட்டம் போடுற பாரு....நீ ரொம்ப நல்லவன்....................................................!!!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!!!!!!!!!!!! :))))

Saravana Kumar MSK said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. வந்து பாருங்க தோழி..
:))

Sathish said...

nan yaara??? mmm... theyrinja udane... mudalla unkitta sollaren... sariya..

aaaaa.... kulir kaichal vandiduchi..... ivvalavu ice theyvai'ngara??

Sathiya said...

Hi Srividhya,

How are you? Still busy like me;)

Hope you had a great Diwali!!!

Regards,
Sathya.

Saravana Kumar MSK said...

ஹலோ.. இருக்கீங்களா.. கொஞ்சம் வந்து அட்டன்டென்ஸ் போடறது..

Saravana Kumar MSK said...

டொக்.. டொக்..

ஹலோ..

யாராவது அந்த பக்கம் இருக்கீங்களா..????????????

இத்யாதி said...

ப்ளாக்ல மொக்க போடதீங்க!!! :)

Saravana Kumar MSK said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி..

Sathish said...

tamizh, enna aachi'pa??!!!

uyiroda thaana iruukka??

சங்கீதன் said...

செம ரசனைங்க உங்களுக்கு!!

citizen of india said...

சுத்தி இருக்கிறவங்களை சிரிக்க வெச்சுகிட்டு இருப்பீங்களா? அப்ப எல்லாருக்கும் கடன் கொடுப்பீங்க போல தெரியுது.