
வலை பூவில் எழுத தொடங்கி 1 வருடம் முடிந்து விட்டது...ஆதலால்,இன்றோடு என் வலை பூவுக்கு ஒரு வயது முடிந்து விட்டது..
சென்னையில் இருந்த போது எழுத தொடங்கினேன்..சத்யா அண்ணனை தவிர பதிவர்கள் யாரும் என் வலைப்பூவை படித்ததாக நினைவில்லை...ஆனால்,என் உடன் பணியாற்றிய நண்பர்கள் சிலர் எனக்கு அருகிலேயே உட்கார்ந்து கொண்டு என் வலைப்பூவை படித்து தங்கள் கருத்துக்களை கூறியதுண்டு.. :)
தொடக்கத்தில் எதை பற்றி எழுதுவது என்று நிறைய சந்தேகங்கள் வரும்..
எழுத ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திய பதிவுகள் நிறைய...!
இப்போதெல்லாம் சரளமாக எழுத வருகிறது...சந்தேகங்களையும் கடந்து... :)
எழுதுவது மிகவும் பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதவே விளைகிறேன்...எழுதுவேன்... :))))))
பதிவுகள் எழுதுவதை ஒரு பொழுது போக்காக கருதாமல்,விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் ஒரு தளமாக கருதுகிறேன்..எழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதில் எனக்கு என்றுமே மாற்று கருத்து இருந்ததில்லை..
சிந்தனை செய் மனமே-பதிவுகள் தாம் நான் எழுதியதில் எனக்கு பிடித்தது... :)
(நான் எழுதியதில் உங்களுக்கு பிடித்த பதிவுகள் என்னென்ன என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்...)
இந்த தருணத்தில் நான் சிலருக்கு நன்றி கூற கடமை பட்டுருக்கிறேன்...
என் வலைப்பூவின் முதல் ரசிகர்களான என் சென்னை நண்பர்கள்,தமிழ் மணத்தில் என் பதிவுகளை சேர்க்க எனக்கு உதவிய சத்யா அண்ணன்,என் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் என் பதிவர் நண்பர்கள்,நான் இந்த வலை பூவை ஆரம்பிக்க எனக்கு ஊக்கம் தந்த என் தோழிகள்,எப்போதும் என் பதிவுகளை முதலில் படிக்கும் என் பெற்றோர்,எனக்கு தமிழில் ஆர்வம் வர காரணமாயிருந்த என் தமிழ் ஆசிரியைகள் அனைவருக்கும் நான் நன்றி கூறி கொள்கிறேன்...
என்றும் என் எழுத்துக்களை படித்து உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்...இது போல இன்னும் பல வருடங்கள் கடந்தும் நான் எழுதுவதற்கு எனக்கு ஊக்கம் தாருங்கள்.... :)))))
26 comments:
வாழ்த்துக்கள் தமிழினி..தொடர்ந்து எழுதுங்கள்
//"தமிழினிக்கு இன்றோடு ஒரு வயது......"//
இதெல்லாம் ஓவர்..
"தமிழினி யின் வலைபக்கதிற்கு ஒரு வயது" என்று குறிப்பிட வேண்டும்..
வாழ்த்துக்கள் தமிழினி..
//இப்போதெல்லாம் சரளமாக எழுத வருகிறது...சந்தேகங்களையும் கடந்து... :)
எழுதுவது மிகவும் பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதவே விளைகிறேன்...எழுதுவேன்... :))))))
//
சரி. சரி.. எழுதுங்க..
இடைவெளி விடாமல் எழுதுங்க..
//பதிவுகள் எழுதுவதை ஒரு பொழுது போக்காக கருதாமல்,விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் ஒரு தளமாக கருதுகிறேன்..எழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதில் எனக்கு என்றுமே மாற்று கருத்து இருந்ததில்லை..//
நிச்சயமாக..
தமிழினிக்கும் வித்யாவுக்கும் வாழ்த்துக்கள் ;)
எனக்கு உங்கள் தமிழ் நடை மிகவும் பிடிக்கும். உங்களோடு பேசுவது போல தோன்றும் எனக்கு, உங்க பதிவை படிக்கும்போது :)
முன்பு சொன்னதை திரும்ப சொல்கிறேன்... வாரம் ஒரு பதிவாவது எழுதுங்க.....
ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன்..... இந்த பதிவினால்... இங்கே ஒருவரை பிடிக்க முடியாது என்று நினைக்கிறேன்... உங்கள் சத்யா அண்ணா இன்னும் இதை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்..... பார்த்த பிறகு எத்தனை முறை இதை பற்றி சொல்ல போகீரர்களோ தெரியவில்லை ;)
வாழ்த்துக்கள் ஸ்ரீவித்யா! அப்போ வடக்குபட்டு ராமசாமிக்கும் ஒரு வயசு ஆயிடுச்சு;)
//பதிவுகள் எழுதுவதை ஒரு பொழுது போக்காக கருதாமல்,விழிப்புணர்வை ஏற்ர்ப்படுத்தும் ஒரு தளமாக கருதுகிறேன்//
நானும் இதை வழிமொழிகிறேன்!
உங்கள் எழுத்து ஆரம்பத்தில் இருந்ததை விட இப்பொழுது நல்ல முதிர்ச்சி அடைந்திருக்கிறது. தொடருங்கள் உங்கள் எழுத்துப் பணிகளை....
எனக்கு பிடித்த உங்கள் பதிவுகள்:
தடங்கலுக்கு வருந்துகிறேன் ...
உள்ளேன் அய்யா....
Just kidding;)
கீழே உள்ளவை தான் எனக்கு பிடித்த உங்கள் பதிவுகளில் சில:
வீக் என்ட்
நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில்...
சிந்தனை செய் மனமே
1 year complete senjathukku ethavathu seiyanumennu nenaichen.... Singapore pakkame varathilla pola iruku ;)
So... konjam vanthu ponga... unga awarda eduthukittu ponga ;)
Appadiye.... tagged u, so athukkum reply seiyunga ;)
உங்க பேரு ஸ்ரீ வித்யாவா??
//->ரம்யா
தமிழினி..தொடர்ந்து எழுதுங்கள்
//
நன்றி ரம்யா..
//->சரவணா குமார்
//"தமிழினிக்கு இன்றோடு ஒரு வயது......"//
இதெல்லாம் ஓவர்..
"தமிழினி யின் வலைபக்கதிற்கு ஒரு வயது" என்று குறிப்பிட வேண்டும்..
//
சாரிங்கண்ணா...மிஷ்டேக் ஆகி போச்சு...ஹி..ஹி..ஹி..
//->சரவணா குமார்
வாழ்த்துக்கள் தமிழினி..
//
இருக்கட்டும்..இருக்கட்டும்...(நன்றி!)
//->சரவணா குமார்
//இப்போதெல்லாம் சரளமாக எழுத வருகிறது...சந்தேகங்களையும் கடந்து... :)
எழுதுவது மிகவும் பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதவே விளைகிறேன்...எழுதுவேன்... :))))))
//
சரி. சரி.. எழுதுங்க..
இடைவெளி விடாமல் எழுதுங்க..
//
கண்டிப்பா.......
//சரவணா குமார்
உங்க பேரு ஸ்ரீ வித்யாவா??
//
ஆமாம்...தமிழினி என்பது வலைபூ எழுத நான் பயன்படுத்தி கொண்ட புனைப்பெயர்..
//->சத்யா அண்ணன்
ரொம்ப நன்றி...உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள்...
சாரிங்கண்ணா...
ஆஆஆஆஆ... தமிழினி..
GRRRRRRRRRRRRRRRRR..
அண்ணானு மட்டும் சொல்லாதீங்க.. கூப்டாதீங்க..
விடுங்க.. இந்த முறை.. இது ஒரு விஜய் டயலாக் என்று என் மனதை தேற்றி கொள்கிறேன்..
ஒரு நிமிஷம் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் போலிருந்தது..
//->இல்லத்தரசி.
ரொம்ப நன்றி வாணி..
அப்படியே நான் எழுதுனதுல உங்களுக்கு பிடிச்ச பதிவு எது னு சொல்லிடிங்க... :)
சத்யா அண்ணன் என்னே சொல்றாரு...?! :)))...அவரும் ஒரு வருஷம் முடிச்சுருக்காரே..அதான் கேட்டேன்.. :)...
அப்புறம்,அவார்ட் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்...சீக்கிறமா நானும் அவார்ட கை மாத்திடறேன்...
தப்பா எடுத்துக்காதீங்க..
எந்த பொண்ணுக்கும் சகோதரனாய் இருப்பதில்லை என்ற ஒரு உயரிய லட்சியத்தோடும் கொள்கையோடும் ஒரு கட்டுகோப்பாய் வாழ்ந்து வருகிறேன்..
அதனால்தான்.. :))
ஹி ஹி ஹி..
COngrats...Keep writing...
All the best!
எதையோ ஒன்று தேட உங்கள் தளம் என் பார்வைக்கு வந்தது. விருவிருபவும் அறிவுப்பூர்வமகவும் இருக்கு.சொற்களில் சமஸ்கிருத சொல் கலவாமை என்ற கொள்கையைவைத்து கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் என் பணிவான வேண்டுகோள். உங்கள் பக்கத்தையும் என் விருப்ப பக்கங்களில் சேர்த்துவிட்டேன் .
//எந்த பொண்ணுக்கும் சகோதரனாய் இருப்பதில்லை என்ற ஒரு உயரிய லட்சியத்தோடும் கொள்கையோடும் ஒரு கட்டுகோப்பாய் வாழ்ந்து வருகிறேன்..
அதனால்தான்.. :))
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
இதெல்லாம் ஓவரு....
//->சுகன்யா
COngrats...Keep writing...
All the best!
//
ரொம்ப நன்றி சுகன்யா.
//தமிழினி..... said...
//எந்த பொண்ணுக்கும் சகோதரனாய் இருப்பதில்லை என்ற ஒரு உயரிய லட்சியத்தோடும் கொள்கையோடும் ஒரு கட்டுகோப்பாய் வாழ்ந்து வருகிறேன்..
அதனால்தான்.. :))
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
இதெல்லாம் ஓவரு....//
இத விடவா??
"தமிழினிக்கு இன்றோடு ஒரு வயது......"
unga pathivula enakku pudichathu....
சிந்தனை செய் மனமே - all updates;)
நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில்...
சுஜாதா என்கிற சகாப்த்தம்
hey Tamizh..chk my blo..tagged n awarded u!!!
Number'ukkaga sandosama...
mmm... indha aandu mudiyira varaikumavadu irruma'nnu paappoom...
mmm... sandosapadraduku karanam thevai illa thaan... Enjoy :)
Post a Comment