Showing posts with label ரசித்தவை. Show all posts
Showing posts with label ரசித்தவை. Show all posts

Tuesday, July 15, 2008

நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில்...



இந்த சென்னை விமான நிலையம் இருக்கே...அதுக்கு ஓய்வே கிடையாது...

எப்போதும் ரொம்ப பிசியா இருக்கும்...

நம்ம விமான நிலையங்கள் எப்போதும் ஒரு உணர்ச்சி குவியலாதான் இருக்கும்...

சந்தோஷம்,பிரிவின் சோகம்,பொறாமை,கூச்சம்,பயம் இப்படி சகல உணர்ச்சிகளையும் மாறி மாறி நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும் இந்த விமான நிலையங்கள்...போன முறை போனபோது நான் கண்ட சில காட்சிகளை இங்கே பதியலாம் என உத்தேசம்...


1)நான் சென்ற உடனே கவனித்தது இந்த பெண்ணை தான்..இளைய 20 களில் இருக்கும் அந்த பெண் onsite செல்கிறார் போல...அவரது மொத்த குடும்பமே வந்திருந்தது....எங்கிருந்தோ கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்த அவருடைய மாமா அவள் கையில் ஒரு தாயத்தை கட்டி விட்டார்....அந்த பெண் அதை மறுக்காமல் சிரித்த முகத்துடன் அதை கட்டி கொண்டது,எனக்கு மிகவும் பிடித்திருந்தது..."பசியோட இருக்காதம்மா ...காப்பி தண்ணி வாங்கி குடிச்சுக்கணும்....தெரியுதா புள்ளை"....என்று சொல்லி கொண்டிருந்த தன் தாயை ஆனந்த கண்ணீரோடு அவர் பார்த்து கொண்டிருந்ததை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை..... :))


2)இந்த குடும்பம் எனக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தனர்...அவர்களது மகள் தன் 2 வயது குழந்தையை விட்டுவிட்டு செல்ல போகிறார் என்பதை அந்த அம்மா என் அம்மாவிடம் சொல்லி கொண்டிருந்தார்....அதற்குள் அவர்களது மகள் bag checkin முடித்துவிட்டு வந்திருந்தார்...பின் அந்த மகள் தன் குழந்தையை விட்டு பிரிந்துபோக முடியாமல் வெடித்து அழுதார்...பின் அவரை ஒருவாரி தேற்றி அனுப்பிவைக்க என் அம்மாவும் உதவி செய்தார்கள்...


3)ஏர்போர்ட் ல் நடந்து கொண்டிருந்த இந்த எல்லா நிகழ்ச்சிகளையும் என் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வெளிநாட்டு பெண் வீடியோ எடுத்துகொண்டிருந்தார்...


4)புதிதாக திருமணமான இந்த ஜோடியை அங்கிருந்த அனைவருமே கவனித்து கொண்டிருந்தார்கள்....இதிலும் அந்த பெண் தான் செல்ல போகிறார் போல...அங்கிருந்த கூட்டத்தையும் பொருட் படுத்தாமல்....இவர்கள் இருவரும் அவ்வப்போது கட்டியணைத்து முத்தமிட்டு கொண்டிருந்தனர்....இதை பார்த்த இரண்டு வானரங்கள்...."டேய் ...அங்க பார்த்தியா...technology has improved very much" என்று காமெடி செய்துகொண்டிருந்தனர்... :)))


இது எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த நான் எனக்குள்ளே சொல்லி கொண்டது இதுதான்....


"தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை .......பிரிவு தான்....."


ஆனா,என்ன தான் சொல்லுங்க....நம்ம மக்களோட பாசத்துக்கு அளவே கிடையாது....இதை நான் விமான நிலையத்தில் பார்த்த ஒவ்வொரு காட்சியும் நினைவு படுத்தி கொண்டிருந்தது... :))))))))

Sunday, June 22, 2008

FAQS ஆன் தசாவதாரம்

ஒரு வழியா தசாவதாரம் பார்த்தாச்சு.........

ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து படம் பார்த்துட்டேன் னு சொன்ன எல்லார்கிட்டயும் நான் கேட்டு கொண்டிருந்த கேள்விகள் சிலவற்றிற்கு இதோ பதில்கள் :

1) படத்துல உண்மையிலேயே 10 வேடங்களா?
ஆமாம்.படத்தில் 10 வேடங்கள் தான்.ஆனால் நம்பி மற்றும் கோவிந்த் வேடங்களுக்கு மேக்கப் அவ்வளவாக தேவைப்படவில்லை...

2) படத்தின் ஹீரோயின் கள் பற்றி...?
மல்லிகா - வில்லனின் மனைவியாக வருகிறார்...அநியாயத்திற்கு கெட்டவராக இருக்கிறார்...
அசின் - வழக்கம் போல துறுதுறு வென்று அசத்துகிறார்...முகுந்தா பாடல் தவிர வேறு பாடல்கள் இல்லை...முக்கியமாக டூயட் இல்லை...தமிழ் சினிமா விதிமுறைகள் உடைக்க பட்டு விட்டன...!!!
3)படத்தின் பாடல்கள்???
ஒ சனம் பாடல் துள்ளலாகவும்,அசத்தலாகவும் இருக்கிறது...
கல்லை மட்டும் பாடல் நிறைய சிந்திக்க வைக்கின்றது...
முகுந்தா பாடல் மோர் ஆப் எ சாமி பாட்டு...ஆனால் மற்ற பாடல்களை விட எனக்கு இந்த பாடல் பிடித்தது....லிரிக்ஸ் வாலி அன்றோ!!!
உலக நாயகன் பாடல் உண்மையாகவே உலக நாயகனுக்கு ஓர் அர்ப்பணம்....

4)படத்தில் வரும் வேடங்கள் பற்றி???
படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...ஜப்பானீ வேடம் தான்...அழகான கமலை அசிங்கமாக காட்டியிருந்த பூவராகன் வேடமும் அருமை...கிருஷ்ணவேணி பாட்டி வேடமும் கமல் என்று நம்ப முடியவில்லை...பிலேட்சேர் கண்களை வைத்து கமல் என்று கண்டுகொள்ள முடிந்தது...புஷ் நடை சூப்பர்....அந்த முஸ்லீம் வாலிபனாக வரும் கமலுக்கு உயரத்தை எப்படி அதிகமாகினார்கள் என்று சொன்னால் நல்ல இருக்கும்...பலராம் வேடம் பாலைய்யாவை நினைவு படுத்தியது...ரெங்கராஜ நம்பி வேடம் கம்பிரமாக இருந்தது...அவதார் சிங் வேடத்தில் கலக்கலாக சிங் போலவே இருக்கிறார்...கோவிந்த் வேடத்திற்கு தான் அதிகமாக கஷ்ட பட்டிருக்க வேண்டும்!!..அனைத்து கேரக்டேர் களும் அருமை.....படத்தை கமலுக்காகவே ரெண்டு மூணு தடவை பார்க்கலாம்...

5)படம் புரியுதா???
ஒ...நல்லாவே புரியுதே...chaos theory,butterfly effect எல்லாம் சொல்லியிருக்கார்...ஆனாலும்..படம் புரியுது....

6)so,படம் சூப்பர் ஹிட் தானா??? :)))))))))))))
ஹிம்ம்ம்ம்ம்...கண்டிப்பா....சுப்பர்ரோ சூப்பர் ஹிட்.....சந்தேகமே வேண்டாம்....

இதனால் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துகொள்வது என்னெவென்றால்.....தயவு செஞ்சு இந்த படத்த பாத்துருங்க.....ப்ளீஸ்....
:))))))))))

Wednesday, June 18, 2008

குட் சாட்அவார்ட் ...


ஆபீஸ் வந்ததும் ப்ளாக் ஐ பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது....

இல்லதரசியிடமிருந்தது ஒரு அவார்ட் வந்திருந்தது...

குட் சாட்அவார்ட் ...

மிக்க நன்றி இல்லத்தரசி...

இனி நான் இந்த அவார்டை வேறு முன்று பிளாக்கர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்...

சரி,கொடுத்துடுவோம்!!!!

முதல் அவார்ட் கோஸ் டு இல்லத்தரசி....நல்ல சமையல் மேனுகளை ப்ளாகில் போட்டோவுடன் போட்டு அசத்திவருவதால் என் போன்ற பலரும் அதை பார்த்தே பசி மறக்க உதவுவதால் இந்த அவார்ட்!!!

செகண்ட் அவார்ட் கோஸ் டு சு ஹிஸ் ப்ரைன்வவேஸ்...தன் மகனை பற்றி அழகாகவும்,சுவாரஸ்யமாகவும் எழுதி வருவதால் இந்த அவார்ட்!!!

மூன்றாவது அவார்ட்....நான் ப்ளாக் தொடங்கிய நாள் முதலே என் ப்ளாக் குகளை தவறாமல் படிக்கும் அன்பு அண்ணன் வடக்குபட்டு ராமசாமிக்கு....(என்ன சத்யா ....ஓகே தான??)...

இந்தாங்க உங்க அவார்ட்...எடுத்துக்குங்க.. :))))))))))))))))





Friday, December 21, 2007

I am Legend --கண்டிப்பா பாருங்க !!!


வில் ஸ்மித் நடித்திருக்கும் இன்னொரு அசத்தலான படம்..

நியுயார்க் போன்ற ஒரு மிக பெரிய மாகானத்துல உங்கள மட்டும் தனியா விட்ட என்ன பண்ணுவிங்க ??...அப்படி தான் மாட்டிக்குறார் வில் ஸ்மித்...

ஏதோ ஒரு கொடிய நோயினால் அந்த ஊர் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு விட,வில் ஸ்மித் மட்டும் அந்த நோயினில் இருந்து தப்பித்து விடுகிறார்...பின் அந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் இவரை தாக்க முயல,அவர்களது சதிகளை முறியடித்து உயிர் பிழைகிராரா???அல்லது அந்த நோயை குணப்படுத்துவதற்காக தன் உயிரை தியாகம் செய்கிறாரா என்று சொல்லி முடிகிறது இந்த திரைப்படம் ... தனிமை ஒரு மனுஷன எவ்வளவு துயர படுத்தும் னு ரொம்ப அழகாவே காட்றாங்க....

படத்தினுடைய முதல் ஆச்சர்யம் வில் ஸ்மித்....Independence Day,MIB 1 & 2 படங்களில் இருந்தே இவரை ரொம்பவே கவனிக்க ஆரம்பித்துவிட்டது,உலகம். இந்த திரைப்படத்தின் லாபம் 73.5 மில்லியன் டாலர் ஆக இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது...எல்லாம் வில் ஸ்மித் என்ற நடிகரின் கடின உழைப்புக்கு நாம் செலுத்தும் மரியாதை....சில காட்சிகளில் நம்மையும் சேர்த்து சிரிக்கவும்,அழுகவும் வைக்கிறார்....தன்னுடைய உணர்வுகளை ரசிகர்களுக்குள் செலுத்துபவனே நல்ல நடிகன்!!!

படத்தினுடைய இரண்டாவது ஆச்சரியம்....வில் ஸ்மித் உடன் முதல் பாதியில் நடித்திருக்கும் அந்த நாய்...ஒரு நாயிடம் இவ்வளவு உணர்வுகளை பரிமாறிக்கொள்ள முடியுமா என்று நமக்கு சந்தேகமே வந்து விடுகிறது....ஆனா அந்த நாய கொன்னுருக்க வேண்டாம்....பாவம்....!!!
படத்துல எல்லாமே ரொம்ப சரியா அமைந்திருந்தாலும்....குழந்தைகளை கவர தவறிட்டாறு வில் ஸ்மித்....MIB படங்கள போல இந்த படம் குழந்தைகளுக்கும் பிடிக்குமா னு கேட்டா இல்ல னுதான் சொல்ல வேண்டி இருக்கு ....(தயவு செய்து குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்!!!)

வில் ஸ்மித் , நீங்க உண்மையிலேயே ஒரு legend தான்.... :))))

Thursday, November 29, 2007

ஆனந்த விகடன்

தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு ஆனந்த விகடன் பற்றிய அறிமுகம் தேவைப்படாது...
எனக்கு தமிழ் படிக்க தெரிஞ்ச நாளா ஆனந்த விகடன் படிக்கிறேன்...படிக்க நேரமில்லை னா கூட சும்மா புரட்டி பக்கங்கள மட்டும் மாவது பார்த்துருவேன்...
முன்னெல்லாம் சுஜாதா வோட எழுத்துக்கள மட்டுமே ரசிக்க முடிஞ்சது ...ஆனா இப்போ அப்படி இல்ல...கொஞ்சம் ரசனை வளர்ந்திருக்கு னு தான் சொல்லணும்...
கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் பிரகாஷ் ராஜ் எழுதின "சொல்லாததும் உண்மை "..படிக்கறதுக்காகவே வாங்கினேன்...என்ன நல்லா எழுதுனாருங்க அவரு!!!அந்த மாதிரி தன் வாழ்க்கையில நடந்த உண்மையெல்லாம் சொல்றதுக்கும் தனி தைரியம் வேணும்..
ஞானி--ஆனந்த விகடன் மூலமா நான் படிக்க தொடங்குன இன்னொரு எழுத்தாளர்...
நல்லா தான் எழுதுறாங்க...அப்புறம் ஜக்கி வாசுதேவ்-வினுடைய article...
இப்படி ஒவ்வொரு விஷயமும்...என்னை ரொம்பவே கவர்ந்தவை தான் ..
இன்னும் சொல்ல போனா,நான் வலையுலகை பற்றி தெரிந்து கொண்டதே ஆனந்த விகடன் படிச்சு தான்...