Tuesday, November 13, 2007

பாடல்கள்...

ஸ்கூல் நாட்கள்ல,பாடல்கள் கேட்பது மட்டுமே என் முழுமுதற் பொழுது போக்கு...கல்லூரிக்கு வந்த பிறகு பாடல்கள் கேட்பதற்காகவே பொழுத ஏற்படுத்திக்க ஆரம்பிச்சுட்டேன்...

ஒரு பாடல் கேட்டா அந்த பாடல நம்ம மனநிலயோட சம்பந்த படுத்தி பாக்குறது என் பழக்கம்.....அதே போல அந்த பாடல முதல் தடவ கேட்கும்போது என்ன மனநிலையில இருந்தேனோ,அது ஒவ்வொரு முறை அந்த பாடல கேட்கும்போதும் reflect ஆகும் ...

அதே போல பாடல்கள்ல இந்த வகையான பாட்டு தான் பிடிக்கும் னு கிடையாது......மெலடி பாடல்கள் பிடிக்கும் னா,சில சமயம் சில கானா பாடல்கள் பிடிச்சு போவும்....உதாரணத்துக்கு ,சென்னை-28 ஜல்சா பாட்டும் பிடிக்கும் ,"உன் பார்வை மேலே பட்டால் " அப்படிங்கற பாட்டும் பிடிக்கும்...

சமீபத்துல தீபாவளி படங்களோட பாடல்கள் ல எனக்கு பிடிச்சுருந்தது, பொல்லாதவன் படத்துல்ல வர்ற "மின்னல்கள் கூத்தாடும் மழை காலம் "....பாம்பே ஜெயஸ்ரீ வழக்கம் போல ரொம்ப நல்லா பாடியிருந்தாங்க....அப்புறம் அழகிய தமிழ் மகன் படத்துல வர்ற "மதுரைக்கு போகாதேடி" பாடலும் நல்லா இருந்தது ...முக்கியமா இந்த வரி "சந்திரனில் ஒரு பாதி,இந்திரனில் ஒரு பாதி....சுந்தரரே என் ஜோடி ஆனதென்ன ..??!!..."...நல்லா தான் எழுதுறாங்க ....அந்த பாட்டோட காட்சியமைப்பும் நல்லா இருக்கு ...விஜயும் ,ஸ்ரேயாவும் நல்லா ஆடியிருந்தாங்க ...[பின்குறிப்பு :நான் விஜய் ரசிகை அல்ல.... :))]

அதே போல சில படங்கள்ல வர்ற ஹீரோ அல்லது ஹீரோயின் அறிமுக பாடல்கள்ளும் நல்லா இருக்கும் .....உனக்கும் எனக்கும் லே வர்ற "பூ பறிக்க நீயும் போகாதே" பாட்டு ,ரொம்ப பிரமாதமான பாட்டு...காக்க ,காக்க படத்துல்ல வர்ற "ஒரு ஊரில் அழகே உருவாய்" பாட்டு...செமத்தியான பாட்டு...ஒரு பொண்ண இத விட அழகா வர்ணிக்க முடியுமா னு தெரில ...."உதயா" படத்துல வர்ற "பூக்கும் மலரை" பாடல் ரொம்ப நல்லா பாட்டு ...

இப்போவெல்லாம் எந்த விஷயத்த கண்டிப்பா விட்டு கொடுக்க கூடாது னு பார்த்தா ,அந்த பட்டியல்ல முதல்ல நான் எழுதுறது "பாட்டு கேக்குறது "...அப்படிங்கறது தான். ... :)))

5 comments:

Sathiya said...

"கல்லூரிக்கு வந்த பிறகு பாடல்கள் கேட்பதற்காகவே பொழுத ஏற்படுத்திக்க ஆரம்பிச்சுட்டேன்".....அப்ப படிப்பு?;)

தமிழினி..... said...

இல்லே சத்யா ....பாட்டு என் interest னா...படிப்பு என் கடமை ....(சப்ப்ப்பா என்னெவெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு....)

Anonymous said...

உலக திரை உலகில் முதல் முறையாக பார்க்கிற அனைவரையும் பொல்லாதவன் ஆக்கும் ஒரே படம். ஹீரோ ஹீரோஇன் என இரண்டு வேடங்களில் பல்சர் நடிக்கும் படம். எப்படி தான் எடுகுரான்களோ அதுல நடிக்கற அறிவு ஜீவிகளுக்கு
கொஞ்சம் கூட வெட்கமா இருக்காதா. என்ன கொடுமையடாசாமி அட்லீஸ்ட் ஹீரோஇன் சாரி அந்த கிழவி கொடுமையிலும் கொடுமை...

பொது நலன் கருதி வெளிஇடுவோர்
படம் பார்த்து (இநோக்ஸ் தெய்டேர் 150/- ) நொந்தவர்

தமிழினி..... said...

நல்ல வேலை அந்த படத்த பத்தி சொன்னிங்களே.....இருந்தாலும் உங்க அளவுக்கு எங்களுக்கெல்லாம் தைரியம் இல்ல........

Sathiya said...

ஹய்யோ ஹய்யோ!