
மைசூர் வந்த பின் ஆபிஸ் காண்டீனில் சாப்பிடுவது வாடிக்கை ஆகி விட்டது...பொதுவாக என் அலுவலகத்தில் சாப்பிட்டு முடித்தபின் நாம் சாப்பிட தட்டை நாம கொண்டு போய் ஒரு தனியான இடத்தில் போட வேண்டும்...அந்த இடத்தில் பொதுவாக ஒரு வாசக பலகை இருக்கும்...அதில் "Think of the thousands who struggle for a single square meal before you waste your food " என்று எழுத பட்டிருக்கும்..நான் தினமும் என் தட்டை கொண்டு போடும் போதும் அதை ஒரு முறை படித்து பார்ப்பேன்...
என்னிடமும் என் குடும்பத்தினரிடமும் ஒரு பழக்கம் உண்டு....அதை நல்ல பழக்கம் என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்...உணவு உண்ண தொடங்கும் முன் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணுவது...அதே போல் தட்டில் உங்களுக்கென வைக்க பட்டிருக்கும் உணவை வீணாக்காமல் உண்ணுவது...அதை நமக்கு பரிமாறும் பொழுதே நம்மால் எவ்வளவு உண்ண முடியுமோ அதை மட்டும் வாங்கி கொள்வது...
இந்த பதிவை நான் எழுத தூண்டுதலாக இருந்ததும் என் அலுவலகத்தில் இருந்த இன்னொரு அறிவிப்பு பலகை...இன்று தான் அந்த பலகையை கவனித்தேன்...அதில் ஒரு நாளைக்கு என் அலுவலக காண்டீனில் வீணாகும் உணவின் மொத்த மதிப்பு கணக்கிடப்பட்டிருந்தது .....இந்த மதிப்பு மொத்தம் 13000 ரூபாய்...எனக்கு தலை சுற்றி போனது....அட ஆண்டவா!!!! என்று என் உடன் வந்த தோழியிடம் புலம்பி கொண்டே வந்தேன்....
எனக்கு எல்லா சமயத்திலும் நண்பர்கள் உண்டு...நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் அல்லா நம் பெயரை எழுதியிருப்பார் என்று என் இஸ்லாமிய தோழி கூற கேட்டிருக்கிறேன்...அப்படியானால்,நமக்காக கடவுள் கொடுத்த ஒன்றை நாம் நிராகரிப்பதாக தானே பொருள்..அது இறைவனின் அன்பை நாம் நிராகரிப்பதற்கு சமம் தானே...
காந்திஜி தான் சாப்பிட உட்காரும் பொழுது ஒரு ஊசி,ஒரு டம்ளர் தண்ணி எடுத்து கொண்டு போய் வைத்து கொள்வாராம்...சாப்பிட்டு முடித்த பின் சிந்திய உணவை ஊசியில் எடுத்து டம்ளர் தண்ணீரில் கழுவி சாப்பிடுவாராம்...(அதுனால தான் அவர நாம மகாத்மா னு சொல்றோம்....என்ன சரிதானே??)
அதற்காக உங்கள நான் மகாத்மா ரேஞ்சுக்கு இருக்க சொல்லல.....உங்களுக்கு னு பரிமாறுகிற உணவை வீணாகாம பார்த்துக்குங்க...அது போதும்....
அடுத்த முறை உணவை வீணாக்கும் முன் நைஜிரியாவையோ,மங்கோலியா வையோ நினைத்து பார்த்து கொள்ளுங்கள்.....ஒரு நாடே பசியில வாடுறது உங்க நினைவுக்கு வரும்... கண்டிப்பா உணவை வீணாக்க மாட்டிங்க !!!!!!
33 comments:
Nigeria, Mongaliaயாவை நினைக்க வேண்டாம்.... நமக்கு சாப்பாடு தயாரித்தவரை நினைதாலே போதும்.... தூக்கம் வந்தாலும் கஷ்ட பட்டு எழுந்து, அன்போடு பாக்ஸ் கட்டி கொடுக்கும் அம்மாவை நினைதாலே போதும்..... ஒரு கை சாப்பாடு கூட வீணாக்க மாட்டோம்.... எனக்கும் சாப்பாடு veenakubavarai பார்த்தாலே கோபமாக வரும்..... ஆனால் என்ன செய்வது.... இப்படி பொலம்ப தான் முடியும்..... என்ன நான் சொல்லறது சரிதானே ;)
//சாப்பிட்டு முடித்த பின் சிந்திய உணவை ஊசியில் எடுத்து டம்ளர் தண்ணீரில் கழுவி சாப்பிடுவாராம்//
இந்த விஷயம் இப்போ தான் கேள்வி படறேன். சபாஷ்!
//வீணாகும் உணவின் மொத்த மதிப்பு கணக்கிடப்பட்டிருந்தது ... இந்த மதிப்பு மொத்தம் 13000 ரூபாய்//
இதனால தான் புஷ் விலை வாசி உயர்வுக்கு இந்தியர்களின் உணவு பழக்கம் தான் காரணம் என்று சொல்கிறாரோ?
நானும் முடிந்த வரை உணவை வீணடிக்காமல் இருக்க தான் முயற்சி செய்கிறேன். இது எல்லாம் தெரிந்திருந்தும் சில சமயம் அது முடியாமல் போகிறது. குறிப்பாக ஹோட்டலில் சாப்பிடும் பொழுது ஒரு அயிட்டத்தை பார்த்து நல்லா இருக்கும்னு வாங்கிட்டு, அது ரொம்ப கேவலமா இருந்துச்சுனா வீணாக்குவதை தவிர்க்க இயலாது.
இந்த ஹோட்டல் ல நல்லா இருக்கும் னு நெனச்சு அது நல்லா இல்லாம போகுறது எனக்கும் பல தடவை நடந்துருக்கு..இதெல்லாம் தவிர்க்க முடியாதது...ஆனா கல்யாண வீடுகள்ளயோ,அல்லது நம்ம வீட்டுலயோ சாப்பிடும் போது உணவை வீணாக்கம இருக்குறத பத்தி தான் நான் சொல்றேன்....
ஆமாம் இல்லத்தரசி...நானும் ஸ்கூல் படிக்கும் போது எங்க அம்மாவுக்காகவே உணவை விணாகாம பார்த்துப்பேன்....நீங்க சொல்றது ரொம்ப சரி....
ரொம்ப நல்ல பதிவு... எனக்கும் சாப்பாட்டை யாராவது வீணாக்கினா பயங்கரமா கோபம் வரும்...
நீங்க மைசூர் இன்ஃபோசிசா?
//நமக்கு சாப்பாடு தயாரித்தவரை நினைதாலே போதும்.... தூக்கம் வந்தாலும் கஷ்ட பட்டு எழுந்து, அன்போடு பாக்ஸ் கட்டி கொடுக்கும் அம்மாவை நினைதாலே போதும்//
இதுல உள் குத்து இருக்கு....இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்;)
I agree totally with u tamizh n vani!!!
I too don waste!!!
and same habit has been inculcated in us by our dad!!
simple sentence
"Before wastign Food,think twice of the people whao are struggling for atleast one meal a day..wherever they may be"
Nice post BTW!!!
//இதுல உள் குத்து இருக்கு....இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்;)//
அப்படினா நீங்க சாப்பாட்ட வீண் ஆக்குரீங்களா??
//Nice post BTW!!!//
Thanks Suhee....
//நீங்க மைசூர் இன்ஃபோசிசா?//
ஆமாம்.பாலாஜி ...மைசூர் இன்போசிஸ் தான்....பின்னூட்டம் போட்டதுக்கு ரொம்ப நன்றி....நீங்க என் வலைபூவுக்கு வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.....
// தமிழினி..... said...
//நீங்க மைசூர் இன்ஃபோசிசா?//
ஆமாம்.பாலாஜி ...மைசூர் இன்போசிஸ் தான்....பின்னூட்டம் போட்டதுக்கு ரொம்ப நன்றி....நீங்க என் வலைபூவுக்கு வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.....
//
ஆஹா... இன்ஃபோஸிஸ்ல இருந்து பெரிய கூட்டமே தமிழ் ப்ளாக்ஸ்ல இருக்கு. பகைச்சிக்க முடியுமா?
அவார்ட் எல்லாம் கொடுத்திருக்கீங்க. வராம இருப்போமா?
தொடர்ந்து எழுதவும் :-)
//அப்படினா நீங்க சாப்பாட்ட வீண் ஆக்குரீங்களா?//
அதெல்லாம் இல்லைங்க. சின்ன வயசுல அம்மா சோறு ஊட்டும் போது கடைசீ வாய் காக்காய்குன்னு வச்சு, அதை நம்ம தலைய சுத்தி காக்கைக்கு போடுவாங்க இல்ல, அந்த ஞாபகத்துல ஒரு நாள் ஒரு வாய் சோற வச்சுட்டு வந்துட்டேன். அதான்;)
சரி உங்க இன்ஃபோசிஸ்ல காண்டீன் கான்டிராக்ட் கிடைக்குமா? வீணாகும் உணவே 13000 ரூபாய்னா, வரவு எவ்வளோ இருக்கும்...just kidding;)
//ஆஹா... இன்ஃபோஸிஸ்ல இருந்து பெரிய கூட்டமே தமிழ் ப்ளாக்ஸ்ல இருக்கு. பகைச்சிக்க முடியுமா?
அவார்ட் எல்லாம் கொடுத்திருக்கீங்க. வராம இருப்போமா?
தொடர்ந்து எழுதவும் :-)//
ஒ..அப்டினா நீங்களும் இன்போசிஸ் தானா....ஓகே..ஓகே...
கண்டிப்பா தொடர்ந்து எழுதுறேன்...நீங்களே சொன்னப்புறம் எழுதாம இருப்பேனா??
//அப்படினா நீங்க சாப்பாட்ட வீண் ஆக்குரீங்களா?//
அதெல்லாம் இல்லைங்க. சின்ன வயசுல அம்மா சோறு ஊட்டும் போது கடைசீ வாய் காக்காய்குன்னு வச்சு, அதை நம்ம தலைய சுத்தி காக்கைக்கு போடுவாங்க இல்ல, அந்த ஞாபகத்துல ஒரு நாள் ஒரு வாய் சோற வச்சுட்டு வந்துட்டேன். அதான்;)
சரி உங்க இன்ஃபோசிஸ்ல காண்டீன் கான்டிராக்ட் கிடைக்குமா? வீணாகும் உணவே 13000 ரூபாய்னா, வரவு எவ்வளோ இருக்கும்...just kidding;)
//
நான் வாணி கிட்ட பேசிக்கிறேன்...ஹி..ஹி..ஹீ...
//இதுல உள் குத்து இருக்கு....இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்;)//
குத்தமுள்ள மனசு... அப்போ குறுகுறுன்னு தானே இருக்கும்... ஹீ ஹீ
//அப்படினா நீங்க சாப்பாட்ட வீண் ஆக்குரீங்களா?//
இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு;)
//அதெல்லாம் இல்லைங்க. சின்ன வயசுல அம்மா சோறு ஊட்டும் போது கடைசீ வாய் காக்காய்குன்னு வச்சு, அதை நம்ம தலைய சுத்தி காக்கைக்கு போடுவாங்க இல்ல, அந்த ஞாபகத்துல ஒரு நாள் ஒரு வாய் சோற வச்சுட்டு வந்துட்டேன். அதான்//
ஒரு நாளா.... ஒரு நாள் வெச்சுட்டு வரலைன்னு சொல்லலாம்...
//நான் வாணி கிட்ட பேசிக்கிறேன்...ஹி..ஹி..ஹீ...//
பேசிட்டோம்;) ... பெரிய அறிக்கை வருமுன்னு நெனைக்கிறேன் ;)
என்ன சத்யா...போங்க நீங்க...இப்படியா சாப்பாட்ட வீண் ஆக்குகிறது...பாருங்க,வாணி உங்க மேல குற்றச்சாட்டா சொல்றாங்க...எனக்கு வேற யார support பண்றதுனே தெரில?!ஒரே குழப்பமா இருக்கு....... :)))))))))))))))))
சத்திய சோதனை!
யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும்னு சொல்லுவாங்களே. அதற்கு உதாரணம் நான் தான் போல!
அதெல்லாம் சும்மா லொல்லலாயிக்கு! சும்மா, விலாட்டுக்கு! நம்பாதீங்க! என்னோட விலாடறதே அவங்களுக்கு பொழப்பா போச்சு! கட்டினவளுக்கு கட்டம் சரி இல்லைன்னு நினைக்கிறேன்!
இப்படி பகிரங்கமா ஒரு சிங்கத்தை சிதைச்சு சின்னா பின்னமா ஆக்கறீங்களே? அம்மா தாயே! இது ஞயாயமா? சரி இதோட நிறுத்திப்போம்! அடங்கப்பா! சாமி! ரீல் அந்து போச்சுடா!;)
//வேற யார support பண்றதுனே தெரில?!//
நீங்க மட்டும் எப்பவும் போல என் பக்கமே, I mean நேர்மையின் பக்கமே இருங்க!
:) :)..... of course, support to me only;)
//உங்க மேல குற்றச்சாட்டா சொல்றாங்க//
பிராது கொடுத்தவங்க, எனக்கு சொந்தம். அதனால அந்த குற்றச்சாட்டு "செல்லாது செல்லாது"னு அடிச்சு உங்க தீர்ப்பை சொல்லுங்க நாட்டாம!
(சிங்கப்பூர் வந்தா சாப்பாடு போடுறதா வாணி சொல்லிருக்காங்க)....ஸோ என் சப்போர்ட் வாணிக்கே....(echo)...நாட்டாம தீர்ப்ப சொல்லியாச்சு....சபை கலையலாம்......(சோறு சாமி...சோறு..சோறு....)..[:D]
//கட்டினவளுக்கு கட்டம் சரி இல்லைன்னு நினைக்கிறேன்!//
இப்படியெல்லாம் மிரட்ட கூடாது...தப்பு....!!!
//பிராது கொடுத்தவங்க, எனக்கு சொந்தம். அதனால அந்த குற்றச்சாட்டு "செல்லாது செல்லாது"னு அடிச்சு உங்க தீர்ப்பை சொல்லுங்க நாட்டாம!//
படம் ஓவரா பார்க்காதிங்கன்னா கேக்குறிங்களா??!!
//இப்படி பகிரங்கமா ஒரு சிங்கத்தை சிதைச்சு சின்னா பின்னமா ஆக்கறீங்களே? //
நம்மலாம் யாரு...சிங்கத்து தலையில சீப்ப வச்சு சீவுற பரம்பரை....!!!எவளவோ பண்ணிட்டோம்...இத பண்ண மாட்டோமா??!
I really enjoying this post especially the comments;)....
unga supportukku, romba nandri vidya:) Eppo singapore vareengannu sollunga:)
கூடிய சீக்கிரம் வரேன்...ஆனா என்ன வர்றதுக்கு முன்னாடி நிறைய யோசிக்கணும்..ஒரு பக்கம் நீங்க சூப்பரா சமைச்சு போடுவிங்க...இன்னொரு பக்கம் சத்யா உட்கார்ந்துகிட்டு திட்டிகிட்டு இருப்பாரு.....[:D]...
என்ன சத்யா நான் சொல்றது சரி தானே.. ;))))))
//சிங்கத்து தலையில சீப்ப வச்சு சீவுற பரம்பரை//
//இன்னொரு பக்கம் சத்யா உட்கார்ந்துகிட்டு திட்டிகிட்டு இருப்பாரு என்ன சத்யா நான் சொல்றது சரி தானே.. //
(நாய் சேகர்)சினம் கொண்ட சிங்கத்துக்கு தலை வாரி விட்டா, அது சீப்பையே சிதைச்சிடும்! பரால்லையா?
ரெண்டு பேறும் கூட்டு சேர்ந்துட்டீங்க! எனக்கு வேற பில்டிங், பேஸ்மென்ட் ரெண்டுமே வீக்! எங்க இருந்து திட்டறது;)
//(நாய் சேகர்)சினம் கொண்ட சிங்கத்துக்கு தலை வாரி விட்டா, அது சீப்பையே சிதைச்சிடும்! பரால்லையா?//
பரால்ல....நாங்க வேற சீப்பு வாங்கிக்கிறோம்...
//ரெண்டு பேறும் கூட்டு சேர்ந்துட்டீங்க! எனக்கு வேற பில்டிங், பேஸ்மென்ட் ரெண்டுமே வீக்! எங்க இருந்து திட்டறது;)//
நீங்க ரோம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவரு...சத்யா...
நானும் விவசாயக்குடும்பத்தில் பிறந்ததால் சாப்பாட்டை வீணாக்க மாட்டேன். நெல் விளைய எங்க அப்பா வயல்ல என்ன பாடுபடுறாருனு எனக்கு நல்லாத்தெரியும்ல.
சமூக அக்கறையோடு கூடிய உங்க பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் நண்பர்களிடம் சொல்லி உணவு வீணாவதை தடுக்க முயற்சி செய்யுங்கள்.
சாப்பிடும் போது ஊசியும்,கிண்ணத்தில் நீரும் வைத்துக்கொண்டு, சிந்தும் உணவை எடுத்து உண்பது திருவள்ளுவர் என்று எனது சிறுவயதில் கேட்டதாக ஞாபகம். அது மகாத்மா என்று நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.சரியாக தெரியவில்லை.
/
அடுத்த முறை உணவை வீணாக்கும் முன் நைஜிரியாவையோ,மங்கோலியா வையோ நினைத்து பார்த்து கொள்ளுங்கள்.....ஒரு நாடே பசியில வாடுறது உங்க நினைவுக்கு வரும்... கண்டிப்பா உணவை வீணாக்க மாட்டிங்க !!!!!!
/
nice thinking
nice post!
//@ மங்களூர் சிவா
//nice thinking
nice post!
//
வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றி ங்க...
//@ஜோசெப்
சமூக அக்கறையோடு கூடிய உங்க பதிவு என்னை மிகவும் கவர்ந்தது.//
தாங்க்ஸ்...
//சாப்பிடும் போது ஊசியும்,கிண்ணத்தில் நீரும் வைத்துக்கொண்டு, சிந்தும் உணவை எடுத்து உண்பது திருவள்ளுவர் என்று எனது சிறுவயதில் கேட்டதாக ஞாபகம். அது மகாத்மா என்று நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.சரியாக தெரியவில்லை//
இது என் தாத்தா சொல்லி கேள்விபட்டது...சரியான தகவல் என்றே நம்புகிறேன்...தவறிருந்தால் தெரிவிக்கவும்....
//மைசூர் வந்த பின் ஆபிஸ் காண்டீனில் //
One more?? ;))
Gud one.. Keep going...
//சாப்பிட்டு முடித்த பின் சிந்திய உணவை ஊசியில் எடுத்து டம்ளர் தண்ணீரில் கழுவி சாப்பிடுவாராம்//
அது காந்தி இல்லை. வள்ளுவர்
Post a Comment