Thursday, November 29, 2007

ஆனந்த விகடன்

தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு ஆனந்த விகடன் பற்றிய அறிமுகம் தேவைப்படாது...
எனக்கு தமிழ் படிக்க தெரிஞ்ச நாளா ஆனந்த விகடன் படிக்கிறேன்...படிக்க நேரமில்லை னா கூட சும்மா புரட்டி பக்கங்கள மட்டும் மாவது பார்த்துருவேன்...
முன்னெல்லாம் சுஜாதா வோட எழுத்துக்கள மட்டுமே ரசிக்க முடிஞ்சது ...ஆனா இப்போ அப்படி இல்ல...கொஞ்சம் ரசனை வளர்ந்திருக்கு னு தான் சொல்லணும்...
கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் பிரகாஷ் ராஜ் எழுதின "சொல்லாததும் உண்மை "..படிக்கறதுக்காகவே வாங்கினேன்...என்ன நல்லா எழுதுனாருங்க அவரு!!!அந்த மாதிரி தன் வாழ்க்கையில நடந்த உண்மையெல்லாம் சொல்றதுக்கும் தனி தைரியம் வேணும்..
ஞானி--ஆனந்த விகடன் மூலமா நான் படிக்க தொடங்குன இன்னொரு எழுத்தாளர்...
நல்லா தான் எழுதுறாங்க...அப்புறம் ஜக்கி வாசுதேவ்-வினுடைய article...
இப்படி ஒவ்வொரு விஷயமும்...என்னை ரொம்பவே கவர்ந்தவை தான் ..
இன்னும் சொல்ல போனா,நான் வலையுலகை பற்றி தெரிந்து கொண்டதே ஆனந்த விகடன் படிச்சு தான்...

2 comments:

Sathiya said...

நான் வலையுலகில் இருந்து தான், ஆனந்த விகடன் இதை பத்தி எல்லாம் பிரச்சுரம் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

தமிழினி..... said...

:)))