Saturday, March 1, 2008

சுஜாதா என்கிற சகாப்த்தம்

28 ஆம் தேதி வழக்கம் போல காலைல பேப்பர் படிச்சுட்டு இருந்தேன் .....
"Prolific Writer Sujatha Passes away" னு இருந்தது...
கண்கள ஒருதடவ நல்லா தேச்சுட்டு திரும்ப படிச்சேன்.....
"Prolific Writer Sujatha Passes away" ......அட கடவுளே....இது என்ன...ஒரு அரைமணி நேரத்துக்கு எதுவுமே செய்ய முடியாம ஆயிடுச்சு....
எனக்கு எழுத்தார்வம் வந்ததுக்கும்,பத்திரிக்கைகள் படிக்க ஆரம்பிச்துக்கும் பிள்ளையார் சுழி போட்டதே ...அவருடைய எழுத்துக்கள் தாம்...

இனிமே அந்த மாதிரி ஒரு எழுத்தாளர் நமக்கு கிடைப்பாங்களா ங்கறது ரொம்ப பெரிய சந்தேகம் தான்....
சுஜாதா வ ஒரு முறை நேர்ல பார்த்துருக்கேன் ...ரொம்ப எளிமையா இருந்தாரு...வோடிங் மிஷன் கண்டு பிடித்த பெருமைக்கு உரியவர்...
இனிமே ஒவ்வொரு முறை ஆனந்த விகடன் படிக்கும் போதும்,அவரை ஒரு முறை நெனச்சு பார்த்துக்குவேன்....
சுஜாதா,நீங்கள் இல்லாத குறை தீர்க்க உங்களது படைப்புகளில் ஆறுதல் தேடுகிறேன் ....

கீழே இருப்பவை சுஜாதா இளம் தலைமுறையினருக்காக சொன்ன பத்து கட்டளைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

சுஜாதா, உங்கள ரொம்ப miss பண்றோம்.... :((

3 comments:

Sathiya said...

பத்து கட்டளைகளும் டாப்! சுஜாதா நம்மை விட்டு பிரிந்தது ரொம்ப வருத்தமான விஷயம். அவருடைய படைப்புகள் என்றென்றும் வாழ்த்து கொண்டிருக்கும். அவரின் ரோபோ படத்தை ஆவலாக எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

Nanda Nachimuthu said...

sujathavin maraivirku oru nalla anjali seluthi irukireerkal.oru padaipaaliyaga sujatha Eraalamaana ennangalai namaku vittu sendru irukkiraar.good post about sujatha.thanx.

தமிழினி..... said...

தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி..