
எல்லாருக்கும் கோபம் ங்கறது தவிர்க்க முடியாதது...ஆனா அது அர்த்தமுள்ளதா இருக்குறது அவசியம்..அது யாருமேல,எப்போ,எதுக்காக வருதுங்க்றதும் முக்கியம்...
சரி,முதல்ல நாம ஏன் கொபிச்சுகுறோம் னு யோசிங்க?!கோபம் என்பது முக்கால்வாசி நேரம் நாம் எதிர்பார்த்தது,எதிர்பார்த்த விதத்தில் நடைபெறாமல் போவதால் ஏற்படுவது....ஒரு சின்ன மாறுதலுக்கு எதிர்பார்ப்பே இல்லாமல் இருந்து பாருங்களேன்..அதே போல ஒரு காரியமோ,விஷயமோ 100 சதவிகிதம் சரியாக இருக்கணும் னு நினைக்குறதும்,கோபத்தை ஏற்படுத்தும்...இது போன்றவர்களை ஆங்கிலத்தில் "Perfectionist" என்று சொல்லுவோம்...இவர்கள் எப்போதும் ஒரு பரபரப்புடன் இருப்பதை நம்மால் உணர முடியும்...இது அவர்களை மட்டுமல்லாது அவர்களை சுற்றி இருப்பவர்களையும் வெகுவாக பாதிக்கிறது..
சரி,கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகள்...
சரி,முதல்ல நாம ஏன் கொபிச்சுகுறோம் னு யோசிங்க?!கோபம் என்பது முக்கால்வாசி நேரம் நாம் எதிர்பார்த்தது,எதிர்பார்த்த விதத்தில் நடைபெறாமல் போவதால் ஏற்படுவது....ஒரு சின்ன மாறுதலுக்கு எதிர்பார்ப்பே இல்லாமல் இருந்து பாருங்களேன்..அதே போல ஒரு காரியமோ,விஷயமோ 100 சதவிகிதம் சரியாக இருக்கணும் னு நினைக்குறதும்,கோபத்தை ஏற்படுத்தும்...இது போன்றவர்களை ஆங்கிலத்தில் "Perfectionist" என்று சொல்லுவோம்...இவர்கள் எப்போதும் ஒரு பரபரப்புடன் இருப்பதை நம்மால் உணர முடியும்...இது அவர்களை மட்டுமல்லாது அவர்களை சுற்றி இருப்பவர்களையும் வெகுவாக பாதிக்கிறது..
சரி,கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகள்...
1) மிகவும் கோபமாக இருக்கும் போது,சுற்றி இருப்பவர்களிடம் பேசாமலிருப்பது உத்தமம்..மிறி பேசினால் வம்பு தான்...
2)கோபமாக இருக்கும்போது தனிமையில் இருப்பதை தவிர்க்கவும்...
3)உங்களுக்கு பிடித்த நல்ல இசை கேட்கலாம்....அவை மெல்லிசையாக இருத்தல் நலம்!!
4)புகைபிடிப்பதோ,மது அருந்துவதோ கோபத்தை தீர்க்காது.....
5)கோபம் சற்று குறைந்த வுடன்,பிடித்தமானவர்களுக்கோ,நெருக்கமானவர்களுக்கோ போன் போட்டு பேசலாம்...அவர்களிடம் உங்களுக்கு செவி சாய்க்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா என்பதை முதலில் யோசித்து கொள்ளுங்கள்...
6)எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் முழு மனதுடன் உவந்து செய்தாலே போதும்...இது கண்டிப்பா நடந்து விட வேண்டும் என்று எண்ணுவது தவறல்ல...ஆனால் அதுவே உங்கள் நிம்மதியை குலைத்துவிட கூடாது!!
7)பொதுவாகவே உணவில் அதிக காரம்,உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்...
8)நிறைய பழங்கள் சாப்பிடுவதை வாடிக்கை ஆக்கி கொள்ளுங்கள்..
9)எப்போதும் ஆரோக்கியமான சிந்தனைகளை வைத்து கொள்ளுங்கள்...
10)தியானம் செய்ய பழகுங்கள்!!
()
15 comments:
எதிர்பார்ப்பே இல்லாமல் வாழ முடியுமா.... மிகவும் கடினம்:(
ஆனால் யோசித்து பார்த்தால், அது தான் 90% கோபத்திற்கு காரணம்.
நல்ல கருத்துக்கள்!!!
எதிர்பார்ப்பே இல்லாமல் வாழவேண்டாம் இல்லத்தரசி...ஆனால்,அவை நியாயமான எதிர்பார்ப்புகளாக இருத்தல் நலம்...
இன்னொன்னு விட்டுட்டீங்களே:
வைதேகி காத்திருந்தாள் படத்துல ரேவதி 'அழகு மலர் ஆட' என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருப்பாங்களே அதுவும் கோவத்தில் ஆடியதுதான். அதே போல் அழகன் படத்துலயும் பானுப்ரியா கோவத்துல பேசிகிட்டே நடனம் ஆடுவாங்க. நடனமும் கோவத்தை குறைக்க இன்னொரு வழி. நீங்க குத்து பாட்டுக்கு கூட ஆடலாம்;)
அந்த முதல் பாயிண்ட்டும், இரண்டாவதும் இடிக்குதே. தனியாவும் இருக்க கூடாது, சுற்றி இருக்கறவங்கலோடவும் பேச கூடாதுன்னா அது எப்படி முடியும்?
நீங்க எழுதின கமெண்ட் படிச்சுட்டு மூணு மெலடி பாடு கேட்க வேண்டி வந்துருச்சு ...ரேவதி,பானு பிரியா லாம் ஆடினா எல்லாரும் பார்ப்பாங்க...நம்ம ஆடுனா யாரவது பார்ப்பாங்களா...கோவத்த குறைக்க வழி சொன்னா,நீங்க என் சத்யா மத்தவங்க கோப படுத்துரதுக்கு ஐடியா தரிங்க ??!! :)
தனிமையில் இருந்தா கோணங்கி மாதிரி ஏதாவது யோசிக்க தோணும்...அதே போல பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட பேசுனா அது முக்கால்வாசி பொலம்பல் ஆகா தான் இருக்கும்....என் தேவையில்லாம கூட இருக்குறவங்கள மொக்கை போடணும் னு ஒரு ரோசனை ???!! :)))
Tamizhini, just wanted to let you know that I have added your blog to my blogroll:)
Waiting for your next post ;)
hey illatharasi,
Thanks for tat....drafting my next blog!!!...Will release it soon ;)
//நீங்க எழுதின கமெண்ட் படிச்சுட்டு மூணு மெலடி பாடு கேட்க வேண்டி வந்துருச்சு//
//3)உங்களுக்கு பிடித்த நல்ல இசை கேட்கலாம்....அவை மெல்லிசையாக இருத்தல் நலம்!!//
பார்த்தீங்களா நீங்க இப்படி ஒரு சின்ன விஷயத்துக்கு போய் கோவ பட்டிருக்கீங்க;) நீங்க ரூமுக்குள்ள போயி கதவ சாத்திட்டு ஆடுனா யாரும் பார்க்க மாட்டாங்களே!
Hey Tamizhini..
First..Very good name...
I'm bombed by u'r blog..
U reflect me in a lot of ways..
I'm rt away adding u in my blog roll..
Thanks to Vani thru whom's blog i did reach u!!!
Keep going!
உங்களுக்கு ஒரு Surprise...... எனது வலைக்கு வந்து பாருங்க!!!!
மிக்க நன்றி இல்லத்தரசி....அவார்ட் எல்லாம் கொடுத்து அசத்திட்டிங்க....ரொம்ப தேங்க்ஸ்...
//மிகவும் கோபமாக இருக்கும் போது,சுற்றி இருப்பவர்களிடம் பேசாமலிருப்பது உத்தமம்..//
//உங்களுக்கு செவி சாய்க்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா என்பதை முதலில் யோசித்து கொள்ளுங்கள்...//
அருமையான பதிவு..
idellam life'la sagajam'ga...
kobam vandu namma choice'nga.... namma choice mattume...
solla marandutten... kobam yarai affect pannudho illayo... kobap paduravar mattum kandippa affect aavaru.. so yochichikunga.. unga choice...
Good guidance.
Post a Comment