Tuesday, June 17, 2008

வீக் என்ட்

"so wats up for the weekend?"

நீங்க ஐ.டி துறையில வேலை பார்ப்பவராக இருந்தால் வெள்ளி கிழமைகளில் இந்த கேள்வியிலிருந்து நீங்க தப்பவே முடியாது...

போன வாரம் ஊருக்கு போகும்போது ரயிலில் என் உடன் பயணம் செய்த இரு பெரியவர்கள் பேசிகொண்டிருந்தது என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது...

நான் ஐ.டி யில் வேலை பார்ப்பவள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்...ஐ.டி யில் வேலை செய்யும் மக்கள் எல்லோரையும் சகட்டு மேனிக்கு வாரிகொண்டிருந்தார்கள்.....எனக்கே கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது....

வெள்ளி கிழமை கேளிக்கைகள் என்கிற பெயரில் நம்மில் சிலர் செய்யும் தவறால் இந்த துறையில் இருக்கும் அனைவர் மீதும் பொத்தாம் போக்காக குறை சொல்வது சரியல்ல....

உதாரணத்திற்கு,என் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள்...இந்தியாவில் பெரிதும் மதிக்க படும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம்....எங்கள் நிறுவனத்தில் சேவை மனம் கொண்டவர்களுக்காக ஒரு தனி இயக்கம் அமைக்க பட்டு நிறைய உதவிகள் செய்து வருகின்றனர்...அது மட்டுமல்லாது,பணியாளர்கள் ஆன நாங்களும் எங்களுக்குள் குழுக்கள் அமைத்து சேவை மனதுடன் செயல்பட்டு வருகிறோம் ... இது போன்ற நல்ல காரியங்களை செய்ய நாங்கள் எங்களது வார இறுதிகளை பயன்படுத்தி கொள்கிறோம்...போன வாரம் கூட ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று வந்தோம்....இந்த துறையிலும் சில நல்லெண்ணம் கொண்டவர்கள் இருக்கிறோம் என்பதை இவர்கள் அறிவார்களா??

மிகவும் சிறிய வயதிலேயே இவர்களுக்கு இவ்வளவு சம்பளம்!!ஆதலால் தான் கண்முன் தெரியாமல் ஆடுகிறார்கள் என்று கூறும் இவர்களால்,இந்த துறையில் இருப்பவர்களின் மன உளைச்சலை உணர முடியுமா என்பது ஒரு கேள்வி குறியே!!!

எங்களில் சிலர் செய்யும் தவறுக்காக எல்லாரையும் குறை கூறுவது தவறான விஷயம்....

சாப்ட்வேர் நிறுவனத்தில் இருக்கும் பலரும் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்கள் தான்...அப்படி இருக்கறப்போ வார இறுதிகளில் எல்லாம் ஊருக்கு போகவே விரும்புகிறோம்...அதுவும் என்னெல்லாம் பார்த்திங்கன்னா ஒரு நாளைக்கு 11 மணி நேரம் அலுவலகத்தில் இருக்கேன்...அப்படி இருக்குறப்போ வார இறுதி ல தான் நமக்காக கொஞ்ச நேரம் எடுத்துகிட்டு நமக்கு பிடிச்ச விஷயங்கள் செய்ய முடியும்...உதாரணத்துக்கு பிடித்த புத்தகங்கள் படிக்கிறது,பாடல்கள் கேட்குறது,கோவில்களுக்கு செல்வது மாதிரி ஏதாவது...மனசுக்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள்...

இதெல்லாம் மறந்துட்டு சும்மா அர்த்தமில்லாம எல்லாரையும் குறை கூறுவது சரியல்ல....

இனிமே, "ஐ.டி பசங்க ரொம்ப மோசம்ப்பா" னு சொல்றதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்றிங்க வார இறுதிகள்ள கொஞ்சம் யோசிச்சு பார்த்துக்குங்க.....!!

5 comments:

Illatharasi said...

நல்ல சிந்தனை.... நானும் இதை பற்றி யோசித்ததுண்டு.... யாரோ ஒருவர் செய்யும் செயலினால் எல்லோரையும் குறை கூறும் நல்லவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.... காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!!!!

Sathiya said...

பனை மரத்தடியில் நின்னு பாலை குடிச்சாலும் அது கல்லுன்னு சொல்லும் ஊர் நம்ம ஊர். இதையெல்லாம் பொருட்படுத்தவே கூடாது.
//இது போன்ற நல்ல காரியங்களை செய்ய நாங்கள் எங்களது வார இறுதிகளை பயன்படுத்தி கொள்கிறோம்...போன வாரம் கூட ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று வந்தோம்//
வார இறுதிகளை இது போல் மற்றவர்களுக்கு உபயோகமாக செலவிடும் உங்களை வாழ்த்துகிறேன். என்னால் முடிந்தது வெறும் பொருள் உதவியும், இரத்த தானமும் தான். இது போல் தங்கள் நேரத்தை செலவிடுவோர் மிகவும் சிலரே. இந்தியா வந்து தான் இதெல்லாம் செய்யணும்.

தமிழினி..... said...

ரத்த தானம் பண்றிங்களே....அதுவே ரொம்ப பெரிய விஷயம் சத்யா....இந்தியா வந்தும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....

ஜோசப் பால்ராஜ் said...

இது உலகளாவிய சாபம் போல இருக்கு.

சிங்கப்பூரில் வீட்டு வாடகை ஏறியதற்கு ஐ.டி தான் காரணம், இந்தியா அரிசி ஏற்றுமதியை தடை செய்ததால் இங்கு அரிசி விலை உயர்ந்தால்கூட அதுக்கும் காரணம் ஐ.டி தான்.
வாரக்கடைசியில் கூத்தடிப்பவர்கள் என்று வேறு ஒரு பழிச்சொல்.

அமெரிக்க நேரத்திலும், ஆசிய நேரத்திலும் மாறி மாறி வேலை செய்து வாரநாட்களில் ஒழுங்காக தூங்க முடியாமல் வாரக்கடைசியில்தான் நாங்கள் நன்றாக தூங்கவே முடியும். இதில் நாங்கள் எங்க கூத்தடிப்பது. சம்பளம் அதிகம் என்பது மட்டும்தான் அவர்களுக்கு படுகின்றதே தவிர, நாம் படும் பாடு இவர்களுக்கு எங்கே தெரியும்

Sathish said...

indha madiri mathavunga ninaicha ninaichitu pogatuum... avunga choice.. :) Avungala tirutura samayatu'la innum rendu peruku udavuradu uttamam.. :) (andha madiri seyyanum'nu thonichinna..)