
பர பர னு வேலை பார்த்துகிட்டு இருந்த ஒரு செவ்வாய் கிழமை காலையில் அந்த கல்லூரி தோழியிடமிருந்து போன் வந்தது...பேசி கொஞ்ச காலம் ஆகியிருந்த காரணத்தால்,க்யுபை விட்டு வெளியே சென்று மீண்டும் அவளது செல்லுக்கு போன் செய்தேன்...
"ஹே....சொல்லு ....எப்படி இருக்க...??"..இது நான்..
"நல்லா இருக்கேன்...போன எடுக்கலனதும் பிசியா இருக்க னு நெனச்சேன்....என்னடி டிஸ்டப் பண்ணிடனோ??.."...வழக்கமா அவ கேட்குற கேள்வி தான் இது...
"ஏய்..அதெல்லாம் பரவா இல்லே...சொல்லு..."...பிசியா இருக்குறதா பொதுவா யார்கிட்டயும் சொல்றதில்லே....
"ஹ்ம்ம்...ஏய் எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்காங்க வீட்டுல..."...சொல்லும் போது கூட குரலில் சந்தோஷமே இல்லாமலிருந்தது,எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது ....
"ஏய்...காங்கிராட்ஸ்"...நம்ம கடமையை ஒழுங்கா செய்வோமே....
"அட நீ வேற டி..."..ரொம்பவே அலுத்துகிட்டா..
"......." எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில...
"எனக்கு என்ன கொறச்சல் னு நீ நினைக்குற.."....கொஞ்சம் உணர்ச்சிவச பட்டு பேசுறா னு மட்டும் தெளிவா புரிஞ்சது...
"ஏய்...என்னாச்சு..ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு இப்படி என்னைய போட்டு குழப்புற...என்ன தான்னு கொஞ்சம் தெளிவா சொல்லுடி..."...செய்து கொண்டிருந்த scripting மெல்ல மெல்ல submind க்கு transfer வாங்கிக்கொண்டு போனது...இப்போது என் தோழி மட்டுமே என் நினைவில் இருந்தாள்...இவள எப்படி சமாதான படுத்தறது னு மட்டுமே மூளைக்குள் யோசனை ஓடிகொண்டிருந்தது...
"மாப்பிள்ளை வீட்டில் 200 பவுன் நகையும்,5 லகரம் ரொக்கமும் வாங்கிகிட்டு தான் என்னைய ஒத்துக்கிட்டாங்க..."...சொல்லும் போது குரலில் அத்தனை கோபம்...
"இது தான் உங்க caste ல சகஜம் ஆன விஷயமாச்சே...நீ தான் காலேஜ் டேஸ் லையே சொல்லுவியே..." ...பழசை அசைப்போட்டு அவளை சமாதான படுத்த விளைந்தேன்....
"இருந்தாலும் 5 லட்சம் ரொம்ப அதிகம் தான டி..."...இந்த கேள்விக்கு நான் என்ன சொல்லுறது..
"அதிகம் மாதிரி தான் டி தெரியுது..."..அந்நியன் பட சொக்கன் மாதிரி பதில் சொன்னேன்...
"....இதுல நான் வாழ்க்கை பூரா வேலைக்கு போய்க்கிட்டே வேற இருக்கனுமாம்..."...
அவள் சொல்ல சொல்ல எனக்கே கோபம் வந்தது...
"நிச்சயம் முடிஞ்சுருச்சா..???" கொஞ்சம் கடுப்பாக தான் கேட்டேன்...
"இல்ல ...இல்ல...நிறுத்திடவா???"...பொண்ணு செம சீரியஸா என்கிட்டே கேட்டா....
"இல்ல...இல்ல..கொஞ்சம் பொறுமையா இரு...உங்க அப்பா,அம்மா கிட்ட பேசு...அவங்க கிட்ட உன் மனசுல தோணுறத சொல்லி...புரிய வைக்க ட்ரை பண்ணு..."..நான் அவளுடைய நிலையில் இருந்தால் என்ன செய்வேனோ,அதையே அவளுக்கு அறிவுறுத்தி...உடனே ஊருக்கு போக சொன்னேன்...
அவளும் அப்படியே செய்வதாக சொல்லி...போனை வைத்தாள்....
இப்படி எத்தன பேர் என்கிட்டே பொலம்பி இருக்காங்க னு நான் சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்...
நான் எல்லாரையும் குறை சொல்லல....நல்லவங்களும் இருக்காங்க..ஆனா,மெஜாரிட்டி ஆளுங்க நான் சொல்ற மன நிலையோட தான் இருக்காங்க....
இதெல்லாம் கூட பரவா இல்லே...எங்க குழந்தை பெத்துகிட்டா மனைவி வேலைக்கு போக மாட்டாளோ னு பயப்படுற ஆளுகளும் இருக்காங்க னு நான் சொன்னா நீங்க நம்புவீங்களா???ஆனா இது உண்மை......எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில இப்ப இதான் நடந்துக்கிட்டு இருக்கு...
இத தட்டி கேட்க பெண்ணுடைய பெற்றோர் போனாங்கன்னா,"பொண்ண பெத்தவங்க தானே...பொறுமையா இருக்க வேண்டியதானே..."...னு சொல்ல வேண்டியது...இந்த மாதிரி பேசுறவங்கள நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புறேன்...."உங்க பையன விட அந்த பொண்ணு எந்த விதத்துல குறைச்சல்???...."...சொல்ல போனா நீங்க பையன வளர்க்க என்ன கஷ்ட பட்டிங்களோ,அது போல பத்து மடங்கு கஷ்ட பட்டவங்க ஒரு பொண்ண பெத்தவங்க.....தயவு செஞ்சு இனிமே பொண்ண பெத்தவங்க தானே னு ஏளனமா நினைக்காதிங்க...அவங்க நினைச்சா உங்க குடும்பத்தையே புரட்டி போட முடியும்...
வரதட்சணை வாங்கிகிட்டு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா,அந்த பொண்ணு உங்களை எப்படி மதிப்பா???...ஒரு விலை கொடுத்து உங்களை வாங்கிட்ட மாதிரி தான நினைப்பா???
"நான் வாங்கல வரதட்சணை...என் அப்பா,அம்மா கேட்குறதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" னு கேட்குறாங்க....கல்யாணம் நீங்க தான செஞ்சுக்க போறீங்க??அப்படின்னா வரதட்சணை வாங்காதிங்க னும் நீங்க தான சொல்லணும்...
கரும்பு தின்ன கூலி மாதிரி,கல்யாணம் பண்ணி உங்க கூட கூட்டிட்டு வர்ற பொண்ணுக்கிட்ட வரதட்சணை ன்ற பேருல உங்களுக்கு நீங்களே ஒரு விலை போட்டு வாங்கிட்டு, தயவு செஞ்சு அந்த பொண்ணு உங்களை மதிக்கணும் னு மட்டும் எதிர்பார்க்காதிங்க....!!!
"தன்மானம் உள்ள எந்த ஆண் மகனும் வரதட்சணை வாங்க மாட்டான்" என்பது என் கருத்து....