Friday, July 18, 2008

சிந்தனை செய் மனமே -2


பர பர னு வேலை பார்த்துகிட்டு இருந்த ஒரு செவ்வாய் கிழமை காலையில் அந்த கல்லூரி தோழியிடமிருந்து போன் வந்தது...பேசி கொஞ்ச காலம் ஆகியிருந்த காரணத்தால்,க்யுபை விட்டு வெளியே சென்று மீண்டும் அவளது செல்லுக்கு போன் செய்தேன்..."ஹே....சொல்லு ....எப்படி இருக்க...??"..இது நான்.."நல்லா இருக்கேன்...போன எடுக்கலனதும் பிசியா இருக்க னு நெனச்சேன்....என்னடி டிஸ்டப் பண்ணிடனோ??.."...வழக்கமா அவ கேட்குற கேள்வி தான் இது..."ஏய்..அதெல்லாம் பரவா இல்லே...சொல்லு..."...பிசியா இருக்குறதா பொதுவா யார்கிட்டயும் சொல்றதில்லே...."ஹ்ம்ம்...ஏய் எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்காங்க வீட்டுல..."...சொல்லும் போது கூட குரலில் சந்தோஷமே இல்லாமலிருந்தது,எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது ...."ஏய்...காங்கிராட்ஸ்"...நம்ம கடமையை ஒழுங்கா செய்வோமே...."அட நீ வேற டி..."..ரொம்பவே அலுத்துகிட்டா.."......." எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில..."எனக்கு என்ன கொறச்சல் னு நீ நினைக்குற.."....கொஞ்சம் உணர்ச்சிவச பட்டு பேசுறா னு மட்டும் தெளிவா புரிஞ்சது..."ஏய்...என்னாச்சு..ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு இப்படி என்னைய போட்டு குழப்புற...என்ன தான்னு கொஞ்சம் தெளிவா சொல்லுடி..."...செய்து கொண்டிருந்த scripting மெல்ல மெல்ல submind க்கு transfer வாங்கிக்கொண்டு போனது...இப்போது என் தோழி மட்டுமே என் நினைவில் இருந்தாள்...இவள எப்படி சமாதான படுத்தறது னு மட்டுமே மூளைக்குள் யோசனை ஓடிகொண்டிருந்தது..."மாப்பிள்ளை வீட்டில் 200 பவுன் நகையும்,5 லகரம் ரொக்கமும் வாங்கிகிட்டு தான் என்னைய ஒத்துக்கிட்டாங்க..."...சொல்லும் போது குரலில் அத்தனை கோபம்..."இது தான் உங்க caste ல சகஜம் ஆன விஷயமாச்சே...நீ தான் காலேஜ் டேஸ் லையே சொல்லுவியே..." ...பழசை அசைப்போட்டு அவளை சமாதான படுத்த விளைந்தேன்...."இருந்தாலும் 5 லட்சம் ரொம்ப அதிகம் தான டி..."...இந்த கேள்விக்கு நான் என்ன சொல்லுறது.."அதிகம் மாதிரி தான் டி தெரியுது..."..அந்நியன் பட சொக்கன் மாதிரி பதில் சொன்னேன்...


"....இதுல நான் வாழ்க்கை பூரா வேலைக்கு போய்க்கிட்டே வேற இருக்கனுமாம்..."...


அவள் சொல்ல சொல்ல எனக்கே கோபம் வந்தது...


"நிச்சயம் முடிஞ்சுருச்சா..???" கொஞ்சம் கடுப்பாக தான் கேட்டேன்...


"இல்ல ...இல்ல...நிறுத்திடவா???"...பொண்ணு செம சீரியஸா என்கிட்டே கேட்டா...."இல்ல...இல்ல..கொஞ்சம் பொறுமையா இரு...உங்க அப்பா,அம்மா கிட்ட பேசு...அவங்க கிட்ட உன் மனசுல தோணுறத சொல்லி...புரிய வைக்க ட்ரை பண்ணு..."..நான் அவளுடைய நிலையில் இருந்தால் என்ன செய்வேனோ,அதையே அவளுக்கு அறிவுறுத்தி...உடனே ஊருக்கு போக சொன்னேன்...அவளும் அப்படியே செய்வதாக சொல்லி...போனை வைத்தாள்....
இப்படி எத்தன பேர் என்கிட்டே பொலம்பி இருக்காங்க னு நான் சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்...

நான் எல்லாரையும் குறை சொல்லல....நல்லவங்களும் இருக்காங்க..ஆனா,மெஜாரிட்டி ஆளுங்க நான் சொல்ற மன நிலையோட தான் இருக்காங்க....இதெல்லாம் கூட பரவா இல்லே...எங்க குழந்தை பெத்துகிட்டா மனைவி வேலைக்கு போக மாட்டாளோ னு பயப்படுற ஆளுகளும் இருக்காங்க னு நான் சொன்னா நீங்க நம்புவீங்களா???ஆனா இது உண்மை......எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில இப்ப இதான் நடந்துக்கிட்டு இருக்கு...இத தட்டி கேட்க பெண்ணுடைய பெற்றோர் போனாங்கன்னா,"பொண்ண பெத்தவங்க தானே...பொறுமையா இருக்க வேண்டியதானே..."...னு சொல்ல வேண்டியது...இந்த மாதிரி பேசுறவங்கள நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புறேன்...."உங்க பையன விட அந்த பொண்ணு எந்த விதத்துல குறைச்சல்???...."...சொல்ல போனா நீங்க பையன வளர்க்க என்ன கஷ்ட பட்டிங்களோ,அது போல பத்து மடங்கு கஷ்ட பட்டவங்க ஒரு பொண்ண பெத்தவங்க.....தயவு செஞ்சு இனிமே பொண்ண பெத்தவங்க தானே னு ஏளனமா நினைக்காதிங்க...அவங்க நினைச்சா உங்க குடும்பத்தையே புரட்டி போட முடியும்...வரதட்சணை வாங்கிகிட்டு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா,அந்த பொண்ணு உங்களை எப்படி மதிப்பா???...ஒரு விலை கொடுத்து உங்களை வாங்கிட்ட மாதிரி தான நினைப்பா???"நான் வாங்கல வரதட்சணை...என் அப்பா,அம்மா கேட்குறதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" னு கேட்குறாங்க....கல்யாணம் நீங்க தான செஞ்சுக்க போறீங்க??அப்படின்னா வரதட்சணை வாங்காதிங்க னும் நீங்க தான சொல்லணும்...கரும்பு தின்ன கூலி மாதிரி,கல்யாணம் பண்ணி உங்க கூட கூட்டிட்டு வர்ற பொண்ணுக்கிட்ட வரதட்சணை ன்ற பேருல உங்களுக்கு நீங்களே ஒரு விலை போட்டு வாங்கிட்டு, தயவு செஞ்சு அந்த பொண்ணு உங்களை மதிக்கணும் னு மட்டும் எதிர்பார்க்காதிங்க....!!!


"தன்மானம் உள்ள எந்த ஆண் மகனும் வரதட்சணை வாங்க மாட்டான்" என்பது என் கருத்து....

12 comments:

Illatharasi said...

இந்த போட்டோ இல்லாமல் திருமணம் ஏது ?
இது நம்ம நாட்டிலே மட்டுமே இருக்கும் ஒரு கொடுமை...

என்ன சொல்றதுன்னே தெரியல... :(

என்னதான் நாம புரட்சியா பேசினாலும்... ஒவ்வொரு பெண்ணும் இதை சந்தித்தே அக வேண்டிய நிலை நம்ம நாட்டில் ....

பார்த்து வருத்தப்பட முடியுமே தவிர வேறெதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பெண்கள் :(

வரதட்சனை இல்லாமல் திருமணம் செய்ய வரும் ஆண்கள் எல்லோரும் தெய்வங்களாக போற்ற பட வேண்டும் !!!!

தென்றல்sankar said...

//தன்மானம் உள்ள எந்த ஆண் மகனும் வரதட்சணை வாங்க மாட்டான்" என்பது என் கருத்து..../
yea its 100% true

Sathiya said...

//மாப்பிள்ளை வீட்டில் 200 பவுன் நகையும்,5 லகரம் ரொக்கமும் வாங்கிகிட்டு தான் என்னைய ஒத்துக்கிட்டாங்க..."//
இது நல்ல பிசினஸ்ஸா இருக்கே;)

நீங்க எவ்வளோ சீரியஸா எழுதி இருக்கீங்கன்னு புரியுது வித்யா. இதெல்லாம் இப்போ கம்மி ஆயிடுச்சின்னு நெனச்சிட்டு இருந்தேன். ரொம்ப கஷ்டம்!

//"நான் வாங்கல வரதட்சணை...என் அப்பா,அம்மா கேட்குறதுக்கு நான் என்ன செய்ய முடியும்?"//
விசு படத்துல வர மாதிரி, "நீ சும்மா இருந்தியேன்னு தான்டா கேட்டேன்"னு பிள்ளையின் அம்மாவும், "நீ கேட்டுட்டியேன்னு தாம்மா நான் சும்மா இருந்தேன்"னு பிள்ளையும் சொல்றது தான் ஞாபகத்துக்கு வருது.

உண்மைய சொல்லனும்னு தான் இந்த பிரச்சனை எல்லாம் பெரியவர்களால் தான் வருது, குறிப்பா பெண்கள். ஒரு கல்யாணத்துக்கு வர சொந்தகார பெண்கள் முதலில் பேசுவது இப்படிதான்:
"பொண்ணுக்கு எவ்வளோ போடறாங்களா?"
"நூறு சவரன்"
"அவ்வளோதானா! என் சின்ன பயனுக்கு இருநூறு சவரன் போடறேன்னு சொல்லி கேக்கறாங்க, நான் தான் இதுக்குள்ள வேணாம்னு சொல்லிட்டேன்"
இப்படி தான் ஏதாவது பேசி, இந்த வரதட்சணை என்பது ஒரு கௌரவமா போச்சு இவங்களுக்கு.

பசங்க சரியா பேசுனா பெற்றோர் கண்டிப்பா புரிஞ்சிக்குவாங்க. சொந்தகாரங்க யாராவது கேட்டா கூட, "இல்லைங்க, அதை பத்தி எல்லாம் பேசவே இல்லை. என் பயன் பேச கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டான்".

M.Saravana Kumar said...

சிந்தனை செய் மனமே -2

நியாயமான பேச்சு...

நல்ல பதிவு..

Anonymous said...

I completley agree with u..
wat else i can tell u..
I have always had the same feeling!!!
letz hope for the better!

Sathish said...

idhu eppadi tamizh'la ezhuduratu?

sari... aanmagan'a irukka tanmanam teyvaia?? mmm... tanmanam ulla aanmagan'a ean irrukkanum??

idellam demand/supply issue illengla... Por irunda varaikum aanmagangal niraya irandadunalla, pen/aan ratio'la(idhuku tamizh'la enna?) pengal adigama irundanga... adanala appo varadatchanai, sati ellam irunduchi... ippo thaan reverse aayiduche... ippome pasanga ponnu kidaikama tavikaranga (indha Gujarat, Haryana pakkam ellam patenga'na.. orisssa'la irundu ponn'na kasu kuduthu kalyanam pannikaranga).. innum konja naal porunga, namma oorulayum pongunga'luku kaasu kuduthu kalyanam pannippanga..

Kobap'padadenga... mannichirunga..

ippo nilathu vilai ellam nagaratu pakkam alavuku adhigama yeriduchi.. idhuku yean karanam? innum terku tamizhnadu'la kassu kudithalum nilathai parka aal illa..

idhu kodumai'nu ninaicha kodumai thaan, viyabaram'nu ninaicha... Petrol vilai'la irundu ellam adhan'ga... namkku nanmai illai'na... :)

irukkanga.. idellam vyabarama yosikkama irukkuravungalum irukkanga... adhu madhiri ellarum maruvangala... maranuma.. teyriala...

தமிழினி..... said...

//idhu eppadi tamizh'la ezhuduratu?//

இதுக்கு பதில் உங்க பின்னூட்டத்தில போட்ருக்கேன் பாருங்க..!

//aanmagan'a irukka tanmanam teyvaia?? //

தேவை என்பது எல்லா பெண்களுடைய கருத்து....

//idellam demand/supply issue illengla... //
//ippo nilathu vilai ellam nagaratu pakkam alavuku adhigama yeriduchi.. idhuku yean karanam? innum terku tamizhnadu'la kassu kudithalum nilathai parka aal illa..
//
வரதட்சனை வாங்குறவங்க எல்லாரும் இந்த மாதிரி தான் ஏதாவது சாக்கு சொல்றாங்க...காரணம் தேடுறத கொஞ்சம் நிறுத்துனீங்க னா நல்லா இருக்கும்.....

//
ippome pasanga ponnu kidaikama tavikaranga (indha Gujarat, Haryana pakkam ellam patenga'na.. orisssa'la irundu ponn'na kasu kuduthu kalyanam pannikaranga).. innum konja naal porunga, namma oorulayum pongunga'luku kaasu kuduthu kalyanam pannippanga..
//

அப்படின்னா ஏதாவது ஒரு வகைல நம்ம நாட்டுல வரதட்சணை இருந்துகிட்டே தான் இருக்கும் நு சொல்றீங்களா??இத என்னால ஒத்துக்க முடியாது....

//Kobap'padadenga... mannichirunga..//
கோப படுறதுக்கும்,மன்னிகறதுக்கும் இங்க ஒன்னுமில்லேங்க...நீங்க உங்க கருத்த சொல்றீங்க...நான் என் கருத்த சொல்றேன்....அப்புறம் என்னத்துக்குங்க கருத்து சுதந்திரம்...?!

//idhu kodumai'nu ninaicha kodumai thaan, viyabaram'nu ninaicha... Petrol vilai'la irundu ellam adhan'ga... namkku nanmai illai'na... :)
irukkanga.. idellam vyabarama yosikkama irukkuravungalum irukkanga... adhu madhiri ellarum maruvangala... maranuma.. teyriala...
//
மாறனும் தான்...கண்டிப்பா மாறியே ஆகணும்!!!!!

தமிழினி..... said...

//@sathya
இதெல்லாம் இப்போ கம்மி ஆயிடுச்சின்னு நெனச்சிட்டு இருந்தேன். ரொம்ப கஷ்டம்!
//

பார்க்க சதிஷின் பின்னூட்டம்...

தமிழினி..... said...

//@ வாணி,Suhee,சரவணா குமார்,தென்றல் சங்கர்...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி...

Sathish said...

//இதுக்கு பதில் உங்க பின்னூட்டத்தில போட்ருக்கேன் பாருங்க..! //

நன்றி :) ரொம்ப உதவியா இருந்துச்சி

//தேவை என்பது எல்லா பெண்களுடைய கருத்து....//

தன்மானம்..... ம்ம்ம்ம்... இது relative'ஆனா விஷயம்ங்க.... நாம சொல்லுறப்போ இருக்ககுடாது, நமக்கு புடிக்காதவங்க சொல்லுறப்போ இருக்கணும்'னு தோநும்... :)

//வரதட்சனை வாங்குறவங்க எல்லாரும் இந்த மாதிரி தான் ஏதாவது சாக்கு சொல்றாங்க...காரணம் தேடுறத கொஞ்சம் நிறுத்துனீங்க னா நல்லா இருக்கும்.....//

:) காரணம் தேடினா தானங்க, அந்த விசயதுக்கு விடை கிடைக்கும்..

//அப்படின்னா ஏதாவது ஒரு வகைல நம்ம நாட்டுல வரதட்சணை இருந்துகிட்டே தான் இருக்கும் நு சொல்றீங்களா??இத என்னால ஒத்துக்க முடியாது....//

இருக்கும்'னு நான் சொல்லலை'ங்க, இப்படி கூட இருக்கு, இருக்கலாம்'னு ஒரு...

//கோப படுறதுக்கும்,மன்னிகறதுக்கும் இங்க ஒன்னுமில்லேங்க...நீங்க உங்க கருத்த சொல்றீங்க...நான் என் கருத்த சொல்றேன்....அப்புறம் என்னத்துக்குங்க கருத்து சுதந்திரம்...?!//

கலக்கிட்டிங்க'ங்க :)

//மாறனும் தான்...கண்டிப்பா மாறியே ஆகணும்!!!!!//

ம்ம்ம்ம்... :) நம்ம நினைக்றாப்லே எல்லாரும் நடக்கணும்'னு.... :)

கல்யாணம்'ங்கறத, பண்ணற ரெண்டு பேரும் முடிவு பண்ணறப்போ... இது நின்னுரும்'னு நினைக்கிறேன்... Just நினைக்கிறேன்... :)

ஜி said...

//"தன்மானம் உள்ள எந்த ஆண் மகனும் வரதட்சணை வாங்க மாட்டான்" என்பது என் கருத்து....//

Natchu....

Hindu Marriages In India said...

நல்ல கருத்து.