Sunday, March 8, 2009

நண்பர்களே நலமா???

எல்லாருக்கும் வணக்கம்...எல்லாரும் நல்லா இருக்கீங்க னு நினைக்குறேன்...

எல்லாரும் என்னை மன்னிக்கணும்....சரியா 6 மாசத்துக்கு பிறகு பதிவு போடுறேன்...கையில கணினி இல்லாத காரணத்துனால எழுத முடியல....
இந்த 6 மாசத்துல வேலை பளுவும் அதிகம்...

இந்த 6 மாசத்துல நடந்த சில முக்கியமான விஷயங்கள இங்க பகிர்ந்துக்க போறேன்...
1)சரியா அக்டோபர் மாசம்....திடீர் னு ஆபீஸ் ஐடி ல ஒரு மெயில்....பார்த்தா நம்ம வெட்டி அண்ணே...ரொம்ப சந்தோசமா பதில் எழுதுன எனக்கு காத்திருந்தது அடுத்த இன்ப அதிர்ச்சி....வெட்டி அண்ணே என்கிட்டே போன் ல பேசினாங்க....எனக்கு ரெண்டு கையிலயும் ஆஸ்கார் கிடைச்ச சந்தோஷம்...:)))))ரொம்ப நன்றி வெட்டி அண்ணே.... :)))))

2)டிசம்பர் மாசம் ரொம்ப கடினமான மாதமாக இருந்தது....அதிகம் வீட்டுக்கு போக முடியாமல்,வார இறுதிகள் கூட ஆபீஸ் வர வேண்டியதா போச்சு...ஆனா,ஜனவரி லருந்து கொஞ்சம் பரவா இல்லே.. :)

3)ஆறு மாதங்கள்ல நிறைய படம் பார்த்தேன்...நினைவுல நின்ன சில படங்கள் னா "அபியும்,நானும்","செவென் பவுண்ட்ஸ்" மட்டும் தான்...

4)பிப்ரவரி இந்தியா வே கொண்டாட வேண்டிய மாதம்...இசைப்புயலுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்த மாதம்....எனக்கு என்னவோ நானே விருது வாங்குன மாதிரி அவ்வளவு சந்தோஷம்...அவருக்கு விருது கிடைத்த போது நான் அலுவலகத்தில் இருந்தேன்...அலுவலகத்தில் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்....இந்திய திறமைக்கு உலக அங்கீகாரம்...செம சந்தோஷம்...

சரி....மற்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்....அது வரை...டேக் கேர்....

Monday, September 8, 2008

மீ..மீ...

உன்னை பத்தி நறுக்கு ன்னு 7 விஷயம் சொல்லு பார்போம் னு சவால் விட்ருக்காங்க இல்லத்தரசி யும் ,சுகன்யா வும்...விடுவோமா....நாங்கெல்லாம் யாரு....(ஆமாமா?! அப்டின்னு சலிச்சுகுறது காதுல கேட்குது.... :)))

இனி என்னை பத்தி 7 விவரங்கள்...

1)பிறந்தது என்னவோ சென்னை னாலும் வளர்ந்தது...படிச்சது எல்லாமே திருச்சிராபள்ளி ல தான்....அப்புறம் மறுபடி கொஞ்ச நாள் சென்னை வாசம்....எல்லாம் பொட்டி தட்றதுக்கு தான்...அப்புறம் "நீ சென்னை ல பொட்டி தட்னது போதும்...மைசூர் க்கு போ னு அனுப்பி வச்சுட்டாங்க...ம்ம்ம்..."

2)படிச்சது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்....

3)கிட்டத்தட்ட மூணு வருஷமா பொட்டி தட்டிட்டு இருக்கேன் ... :)))

4)பொழுது போக்கு...அது நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறும்...சில சமயம் புத்தகங்கள் படிக்கறது...பாடல்கள் கேட்குறது(முக்கால்வாசி இதான் செய்வேன்..),பதிவு எழுதுறது,வரையுறது (பிக்காசா அளவுக்கு இல்லேனாலும் ஏதோ சுமாரா வரைவேன்...),அப்பா-அம்மா கிட்ட போன்ல மொக்கை போடுறது...(மிக பெரிய பொறுமை சாலிகள்...)

5)பிடித்தவை : அம்மா மடியில படுத்து தூங்கறது,அப்பா கிட்ட நேரம் காலம் பார்க்காம உலகத்துல உள்ள எல்லா விஷயங்களையும் பத்தியும் பேசுறது ,மழை,என் பதிவுக்கு நீங்க போடுற பின்னுட்டங்களை படிக்கறது,குழந்தையின் புன்சிரிப்பு,வலைத்தளத்துல நேரம் காலம் தெரியாம எதப்பத்தியாவது படிக்கறது,அம்மாவோட சமையல்,அப்பாவோட செல்ல கோபம்,மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்,தான்தோன்றி கோயில் சிவா பெருமான்,எப்போதாவது போனில் கேட்கும் நண்பர்களின் குறள்:) ,அக்கா குழந்தைகளின் மழலை பேச்சு,திருச்சி வீடு,வீட்டு வாசலில் இருக்கும் துளசி மாடம்,மழைக்கு பின் வரும் மண் வாசம்,சிரிப்பவர்களின் கண்களின் ஓரத்தில் வரும் சுருக்கம்,நண்பர்களின் செல்ல அதட்டல்,மோதிரங்கள்,நீளமான காதணிகள்,மருதாணி,கரடி பொம்மைகள்,என் க்யுபுல இருக்கற சின்ன பிள்ளையார் பொம்மை.....இப்படி இந்த லிஸ்ட் ரொம்ப பெருசு......!!! (ஸ்ஸ்ஸ்ஸ்...கண்ணு கட்டுது...:))))

7)நான் எப்படி னு நானே சொல்றது அவ்வளவு நல்ல இருக்காது...என்னே பொறுத்த வரைக்கும் யாருக்கும் பெருசா உதவ முடியலைன்னாலும்,தொந்தரவு கொடுக்காம இருந்தா,அதுவே போதும்....மத்தப்படி ரொம்ப சுலபமா எல்லார்கிட்டயும் பழகுவேன்...முடிஞ்சா என்ன சுற்றி இருக்குறவங்கள சிரிக்க வச்சுட்டு இருப்பேன் (அப்போ தானே நானும் சிரிச்சுட்டே இருக்க முடியும்....)

சரி,இனி யார மாட்டி விடலாம்...?!

1)சத்யா அண்ணன்

2)ரம்யா ரமணி

3)ஜி

4)சரவணா குமார்

மக்கா,எல்லாரும் சீக்கிரமா வந்து எழுதுங்கப்பா.... :))))))

Monday, September 1, 2008

தமிழினிக்கு இன்றோடு ஒரு வயது......



வலை பூவில் எழுத தொடங்கி 1 வருடம் முடிந்து விட்டது...ஆதலால்,இன்றோடு என் வலை பூவுக்கு ஒரு வயது முடிந்து விட்டது..
சென்னையில் இருந்த போது எழுத தொடங்கினேன்..சத்யா அண்ணனை தவிர பதிவர்கள் யாரும் என் வலைப்பூவை படித்ததாக நினைவில்லை...ஆனால்,என் உடன் பணியாற்றிய நண்பர்கள் சிலர் எனக்கு அருகிலேயே உட்கார்ந்து கொண்டு என் வலைப்பூவை படித்து தங்கள் கருத்துக்களை கூறியதுண்டு.. :)

தொடக்கத்தில் எதை பற்றி எழுதுவது என்று நிறைய சந்தேகங்கள் வரும்..
எழுத ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திய பதிவுகள் நிறைய...!

இப்போதெல்லாம் சரளமாக எழுத வருகிறது...சந்தேகங்களையும் கடந்து... :)

எழுதுவது மிகவும் பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதவே விளைகிறேன்...எழுதுவேன்... :))))))

பதிவுகள் எழுதுவதை ஒரு பொழுது போக்காக கருதாமல்,விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் ஒரு தளமாக கருதுகிறேன்..எழுத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதில் எனக்கு என்றுமே மாற்று கருத்து இருந்ததில்லை..

சிந்தனை செய் மனமே-பதிவுகள் தாம் நான் எழுதியதில் எனக்கு பிடித்தது... :)

(நான் எழுதியதில் உங்களுக்கு பிடித்த பதிவுகள் என்னென்ன என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்...)

இந்த தருணத்தில் நான் சிலருக்கு நன்றி கூற கடமை பட்டுருக்கிறேன்...

என் வலைப்பூவின் முதல் ரசிகர்களான என் சென்னை நண்பர்கள்,தமிழ் மணத்தில் என் பதிவுகளை சேர்க்க எனக்கு உதவிய சத்யா அண்ணன்,என் பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் என் பதிவர் நண்பர்கள்,நான் இந்த வலை பூவை ஆரம்பிக்க எனக்கு ஊக்கம் தந்த என் தோழிகள்,எப்போதும் என் பதிவுகளை முதலில் படிக்கும் என் பெற்றோர்,எனக்கு தமிழில் ஆர்வம் வர காரணமாயிருந்த என் தமிழ் ஆசிரியைகள் அனைவருக்கும் நான் நன்றி கூறி கொள்கிறேன்...

என்றும் என் எழுத்துக்களை படித்து உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்...இது போல இன்னும் பல வருடங்கள் கடந்தும் நான் எழுதுவதற்கு எனக்கு ஊக்கம் தாருங்கள்.... :)))))

Thursday, August 28, 2008

உள்ளேன் அய்யா....

பதிவு போட்டு இன்னியோட சரியா ஒரு மாசம் ஆச்சு...என்ன நீ உயிரோட தான் இருக்கியான்னு அப்பப்ப கேட்டுகிட்டு இருந்த பதிவர்கள் அனைவருக்கும் நன்றி...(ஜி,சரவணகுமார்,சுகன்யா)....

ஒரு development ப்ராஜெக்ட் ல வேலை பார்க்க வேண்டி வந்ததால எழுத முடியல...மேட்டர் என்னன்னா இன்னும் அந்த ப்ராஜெக்ட் ரெண்டு மாசமாவது போகும்... :((

இந்த ஒரு மாசத்துல நிறைய கத்துக்க முடிஞ்சுது...அதுல ஒரு சந்தோஷம்..

அதிகம் ஊருக்கு கூட போக முடியாம போனது ஒரு வருத்தம்....

ஆனா,உங்க எல்லாருடைய பதிவையும் படிச்சுகிட்டு தான் இருக்கேன்...

(முக்கியமா,வெட்டி அண்ணனோட ஆடு புலி ஆட்டம் கதைகள்... :)))

ரைட்டு...எல்லாரும் நல்ல புள்ளைங்களா பதிவுகள் போட்டுக்கிட்டு இருங்க...koodiya சீக்கிரம் நானும் ஒரு உருப்படியான பதிவோட உங்களை சந்திக்கிறேன்...

ஹ........வர்ர்ர்ர்ட்டா..... :)))

Tuesday, July 29, 2008

அவார்ட்ஸ்-2

இல்லத்தரசியிடமிருந்து இன்னொரு அவார்ட்...இந்த முறை "Blogging Friends Forever Award"....மிக்க நன்றி இல்லத்தரசி....உங்க அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன் னு தெரியல....ரொம்ப,ரொம்ப நன்றி வாணி.....


அடுத்து இன்னொரு பொறுப்பையும் என்னிடம் கொடுத்துருக்காங்க,விதிமுறைகளோட...அந்த விதிமுறைகள் என்னென்ன...அப்படின்னா..

1)நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்.

2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்...ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்...

3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்......


இப்போ என் turn....சரி,யார்யாருக்கெல்லாம் இந்த அவார்ட் னு பாருங்க...





மற்றும்

5)சரவண குமார்(கவிதைகள் எனப்படும்...)(இவர் என் பதிவுகளை புதிதாக படிக்க தொடங்கி இருக்கிறார்...)



உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....


இந்த அவார்ட் எனக்கு கொடுத்த இல்லத்தரசிக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறி கொள்கிறேன்...

Friday, July 25, 2008

சிந்தனை செய் மனமே-2 : அப்டேட்

என் தோழி அவளது வீட்டில் பேசியிருக்கிறாள்.அவளது பெற்றோரும் அவளுக்கு இந்த வரனில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்டு,மாப்பிள்ளை வீட்டில் எடுத்து சொல்லிவிட்டனராம்...

இதற்கிடையில்,அந்த தோழிக்கு வந்த வேறொரு வரனின் ஜாதகம் ஒத்து போக அந்த வரனையே அவளுக்கு பேசி முடித்து விட்டனர்...ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்,இந்த முறை வரதட்சணையை பற்றியே பேச்சே வரவில்லையாம்....என் தோழியும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்...

என் உயிர் தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......

Friday, July 18, 2008

சிந்தனை செய் மனமே -2


பர பர னு வேலை பார்த்துகிட்டு இருந்த ஒரு செவ்வாய் கிழமை காலையில் அந்த கல்லூரி தோழியிடமிருந்து போன் வந்தது...பேசி கொஞ்ச காலம் ஆகியிருந்த காரணத்தால்,க்யுபை விட்டு வெளியே சென்று மீண்டும் அவளது செல்லுக்கு போன் செய்தேன்...



"ஹே....சொல்லு ....எப்படி இருக்க...??"..இது நான்..



"நல்லா இருக்கேன்...போன எடுக்கலனதும் பிசியா இருக்க னு நெனச்சேன்....என்னடி டிஸ்டப் பண்ணிடனோ??.."...வழக்கமா அவ கேட்குற கேள்வி தான் இது...



"ஏய்..அதெல்லாம் பரவா இல்லே...சொல்லு..."...பிசியா இருக்குறதா பொதுவா யார்கிட்டயும் சொல்றதில்லே....



"ஹ்ம்ம்...ஏய் எனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்காங்க வீட்டுல..."...சொல்லும் போது கூட குரலில் சந்தோஷமே இல்லாமலிருந்தது,எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது ....



"ஏய்...காங்கிராட்ஸ்"...நம்ம கடமையை ஒழுங்கா செய்வோமே....



"அட நீ வேற டி..."..ரொம்பவே அலுத்துகிட்டா..



"......." எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில...



"எனக்கு என்ன கொறச்சல் னு நீ நினைக்குற.."....கொஞ்சம் உணர்ச்சிவச பட்டு பேசுறா னு மட்டும் தெளிவா புரிஞ்சது...



"ஏய்...என்னாச்சு..ஒரு நல்ல விஷயம் சொல்லிட்டு இப்படி என்னைய போட்டு குழப்புற...என்ன தான்னு கொஞ்சம் தெளிவா சொல்லுடி..."...செய்து கொண்டிருந்த scripting மெல்ல மெல்ல submind க்கு transfer வாங்கிக்கொண்டு போனது...இப்போது என் தோழி மட்டுமே என் நினைவில் இருந்தாள்...இவள எப்படி சமாதான படுத்தறது னு மட்டுமே மூளைக்குள் யோசனை ஓடிகொண்டிருந்தது...



"மாப்பிள்ளை வீட்டில் 200 பவுன் நகையும்,5 லகரம் ரொக்கமும் வாங்கிகிட்டு தான் என்னைய ஒத்துக்கிட்டாங்க..."...சொல்லும் போது குரலில் அத்தனை கோபம்...



"இது தான் உங்க caste ல சகஜம் ஆன விஷயமாச்சே...நீ தான் காலேஜ் டேஸ் லையே சொல்லுவியே..." ...பழசை அசைப்போட்டு அவளை சமாதான படுத்த விளைந்தேன்....



"இருந்தாலும் 5 லட்சம் ரொம்ப அதிகம் தான டி..."...இந்த கேள்விக்கு நான் என்ன சொல்லுறது..



"அதிகம் மாதிரி தான் டி தெரியுது..."..அந்நியன் பட சொக்கன் மாதிரி பதில் சொன்னேன்...


"....இதுல நான் வாழ்க்கை பூரா வேலைக்கு போய்க்கிட்டே வேற இருக்கனுமாம்..."...


அவள் சொல்ல சொல்ல எனக்கே கோபம் வந்தது...


"நிச்சயம் முடிஞ்சுருச்சா..???" கொஞ்சம் கடுப்பாக தான் கேட்டேன்...


"இல்ல ...இல்ல...நிறுத்திடவா???"...பொண்ணு செம சீரியஸா என்கிட்டே கேட்டா....



"இல்ல...இல்ல..கொஞ்சம் பொறுமையா இரு...உங்க அப்பா,அம்மா கிட்ட பேசு...அவங்க கிட்ட உன் மனசுல தோணுறத சொல்லி...புரிய வைக்க ட்ரை பண்ணு..."..நான் அவளுடைய நிலையில் இருந்தால் என்ன செய்வேனோ,அதையே அவளுக்கு அறிவுறுத்தி...உடனே ஊருக்கு போக சொன்னேன்...



அவளும் அப்படியே செய்வதாக சொல்லி...போனை வைத்தாள்....
இப்படி எத்தன பேர் என்கிட்டே பொலம்பி இருக்காங்க னு நான் சொன்னா உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்...

நான் எல்லாரையும் குறை சொல்லல....நல்லவங்களும் இருக்காங்க..ஆனா,மெஜாரிட்டி ஆளுங்க நான் சொல்ற மன நிலையோட தான் இருக்காங்க....



இதெல்லாம் கூட பரவா இல்லே...எங்க குழந்தை பெத்துகிட்டா மனைவி வேலைக்கு போக மாட்டாளோ னு பயப்படுற ஆளுகளும் இருக்காங்க னு நான் சொன்னா நீங்க நம்புவீங்களா???ஆனா இது உண்மை......எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில இப்ப இதான் நடந்துக்கிட்டு இருக்கு...



இத தட்டி கேட்க பெண்ணுடைய பெற்றோர் போனாங்கன்னா,"பொண்ண பெத்தவங்க தானே...பொறுமையா இருக்க வேண்டியதானே..."...னு சொல்ல வேண்டியது...இந்த மாதிரி பேசுறவங்கள நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புறேன்...."உங்க பையன விட அந்த பொண்ணு எந்த விதத்துல குறைச்சல்???...."...சொல்ல போனா நீங்க பையன வளர்க்க என்ன கஷ்ட பட்டிங்களோ,அது போல பத்து மடங்கு கஷ்ட பட்டவங்க ஒரு பொண்ண பெத்தவங்க.....தயவு செஞ்சு இனிமே பொண்ண பெத்தவங்க தானே னு ஏளனமா நினைக்காதிங்க...அவங்க நினைச்சா உங்க குடும்பத்தையே புரட்டி போட முடியும்...



வரதட்சணை வாங்கிகிட்டு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டா,அந்த பொண்ணு உங்களை எப்படி மதிப்பா???...ஒரு விலை கொடுத்து உங்களை வாங்கிட்ட மாதிரி தான நினைப்பா???



"நான் வாங்கல வரதட்சணை...என் அப்பா,அம்மா கேட்குறதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" னு கேட்குறாங்க....கல்யாணம் நீங்க தான செஞ்சுக்க போறீங்க??அப்படின்னா வரதட்சணை வாங்காதிங்க னும் நீங்க தான சொல்லணும்...



கரும்பு தின்ன கூலி மாதிரி,கல்யாணம் பண்ணி உங்க கூட கூட்டிட்டு வர்ற பொண்ணுக்கிட்ட வரதட்சணை ன்ற பேருல உங்களுக்கு நீங்களே ஒரு விலை போட்டு வாங்கிட்டு, தயவு செஞ்சு அந்த பொண்ணு உங்களை மதிக்கணும் னு மட்டும் எதிர்பார்க்காதிங்க....!!!


"தன்மானம் உள்ள எந்த ஆண் மகனும் வரதட்சணை வாங்க மாட்டான்" என்பது என் கருத்து....