Sunday, June 22, 2008

FAQS ஆன் தசாவதாரம்

ஒரு வழியா தசாவதாரம் பார்த்தாச்சு.........

ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து படம் பார்த்துட்டேன் னு சொன்ன எல்லார்கிட்டயும் நான் கேட்டு கொண்டிருந்த கேள்விகள் சிலவற்றிற்கு இதோ பதில்கள் :

1) படத்துல உண்மையிலேயே 10 வேடங்களா?
ஆமாம்.படத்தில் 10 வேடங்கள் தான்.ஆனால் நம்பி மற்றும் கோவிந்த் வேடங்களுக்கு மேக்கப் அவ்வளவாக தேவைப்படவில்லை...

2) படத்தின் ஹீரோயின் கள் பற்றி...?
மல்லிகா - வில்லனின் மனைவியாக வருகிறார்...அநியாயத்திற்கு கெட்டவராக இருக்கிறார்...
அசின் - வழக்கம் போல துறுதுறு வென்று அசத்துகிறார்...முகுந்தா பாடல் தவிர வேறு பாடல்கள் இல்லை...முக்கியமாக டூயட் இல்லை...தமிழ் சினிமா விதிமுறைகள் உடைக்க பட்டு விட்டன...!!!
3)படத்தின் பாடல்கள்???
ஒ சனம் பாடல் துள்ளலாகவும்,அசத்தலாகவும் இருக்கிறது...
கல்லை மட்டும் பாடல் நிறைய சிந்திக்க வைக்கின்றது...
முகுந்தா பாடல் மோர் ஆப் எ சாமி பாட்டு...ஆனால் மற்ற பாடல்களை விட எனக்கு இந்த பாடல் பிடித்தது....லிரிக்ஸ் வாலி அன்றோ!!!
உலக நாயகன் பாடல் உண்மையாகவே உலக நாயகனுக்கு ஓர் அர்ப்பணம்....

4)படத்தில் வரும் வேடங்கள் பற்றி???
படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...ஜப்பானீ வேடம் தான்...அழகான கமலை அசிங்கமாக காட்டியிருந்த பூவராகன் வேடமும் அருமை...கிருஷ்ணவேணி பாட்டி வேடமும் கமல் என்று நம்ப முடியவில்லை...பிலேட்சேர் கண்களை வைத்து கமல் என்று கண்டுகொள்ள முடிந்தது...புஷ் நடை சூப்பர்....அந்த முஸ்லீம் வாலிபனாக வரும் கமலுக்கு உயரத்தை எப்படி அதிகமாகினார்கள் என்று சொன்னால் நல்ல இருக்கும்...பலராம் வேடம் பாலைய்யாவை நினைவு படுத்தியது...ரெங்கராஜ நம்பி வேடம் கம்பிரமாக இருந்தது...அவதார் சிங் வேடத்தில் கலக்கலாக சிங் போலவே இருக்கிறார்...கோவிந்த் வேடத்திற்கு தான் அதிகமாக கஷ்ட பட்டிருக்க வேண்டும்!!..அனைத்து கேரக்டேர் களும் அருமை.....படத்தை கமலுக்காகவே ரெண்டு மூணு தடவை பார்க்கலாம்...

5)படம் புரியுதா???
ஒ...நல்லாவே புரியுதே...chaos theory,butterfly effect எல்லாம் சொல்லியிருக்கார்...ஆனாலும்..படம் புரியுது....

6)so,படம் சூப்பர் ஹிட் தானா??? :)))))))))))))
ஹிம்ம்ம்ம்ம்...கண்டிப்பா....சுப்பர்ரோ சூப்பர் ஹிட்.....சந்தேகமே வேண்டாம்....

இதனால் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துகொள்வது என்னெவென்றால்.....தயவு செஞ்சு இந்த படத்த பாத்துருங்க.....ப்ளீஸ்....
:))))))))))

4 comments:

Illatharasi said...

அப்பா... நீங்களும் பார்த்துடீங்களா.....

வலையில் வரும் விமர்சனங்களை பார்த்த பிறகு.... இரண்டாவது முறை செல்ல திட்டம் போட்டுள்ளேன்;)

Sathiya said...

//கண்டிப்பா....சுப்பர்ரோ சூப்பர் ஹிட்.....சந்தேகமே வேண்டாம்!//
ஆமாங்க படம் சூப்பர் ஹிட்! நூறு கோடி வசூல்! சும்மா பட்டைய கிளப்புது!

Anonymous said...

hey..My hubby too liked it..will see it soon!!!
eppavumae kamal movies neriya yosika vaikkum!!!

Anonymous said...

hey saw Dasavataram..M impressed..Btw..go chk my blog..I have something for u there..