Sunday, June 22, 2008
FAQS ஆன் தசாவதாரம்
Wednesday, June 18, 2008
குட் சாட்அவார்ட் ...

ஆபீஸ் வந்ததும் ப்ளாக் ஐ பார்த்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது....
இல்லதரசியிடமிருந்தது ஒரு அவார்ட் வந்திருந்தது...
குட் சாட்அவார்ட் ...
மிக்க நன்றி இல்லத்தரசி...
இனி நான் இந்த அவார்டை வேறு முன்று பிளாக்கர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்...
சரி,கொடுத்துடுவோம்!!!!
முதல் அவார்ட் கோஸ் டு இல்லத்தரசி....நல்ல சமையல் மேனுகளை ப்ளாகில் போட்டோவுடன் போட்டு அசத்திவருவதால் என் போன்ற பலரும் அதை பார்த்தே பசி மறக்க உதவுவதால் இந்த அவார்ட்!!!
செகண்ட் அவார்ட் கோஸ் டு சு ஹிஸ் ப்ரைன்வவேஸ்...தன் மகனை பற்றி அழகாகவும்,சுவாரஸ்யமாகவும் எழுதி வருவதால் இந்த அவார்ட்!!!
மூன்றாவது அவார்ட்....நான் ப்ளாக் தொடங்கிய நாள் முதலே என் ப்ளாக் குகளை தவறாமல் படிக்கும் அன்பு அண்ணன் வடக்குபட்டு ராமசாமிக்கு....(என்ன சத்யா ....ஓகே தான??)...
இந்தாங்க உங்க அவார்ட்...எடுத்துக்குங்க.. :))))))))))))))))
Tuesday, June 17, 2008
வீக் என்ட்
"so wats up for the weekend?"
நீங்க ஐ.டி துறையில வேலை பார்ப்பவராக இருந்தால் வெள்ளி கிழமைகளில் இந்த கேள்வியிலிருந்து நீங்க தப்பவே முடியாது...
போன வாரம் ஊருக்கு போகும்போது ரயிலில் என் உடன் பயணம் செய்த இரு பெரியவர்கள் பேசிகொண்டிருந்தது என்னை ரொம்பவே யோசிக்க வைத்தது...
நான் ஐ.டி யில் வேலை பார்ப்பவள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்...ஐ.டி யில் வேலை செய்யும் மக்கள் எல்லோரையும் சகட்டு மேனிக்கு வாரிகொண்டிருந்தார்கள்.....எனக்கே கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது....
வெள்ளி கிழமை கேளிக்கைகள் என்கிற பெயரில் நம்மில் சிலர் செய்யும் தவறால் இந்த துறையில் இருக்கும் அனைவர் மீதும் பொத்தாம் போக்காக குறை சொல்வது சரியல்ல....
உதாரணத்திற்கு,என் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள்...இந்தியாவில் பெரிதும் மதிக்க படும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம்....எங்கள் நிறுவனத்தில் சேவை மனம் கொண்டவர்களுக்காக ஒரு தனி இயக்கம் அமைக்க பட்டு நிறைய உதவிகள் செய்து வருகின்றனர்...அது மட்டுமல்லாது,பணியாளர்கள் ஆன நாங்களும் எங்களுக்குள் குழுக்கள் அமைத்து சேவை மனதுடன் செயல்பட்டு வருகிறோம் ... இது போன்ற நல்ல காரியங்களை செய்ய நாங்கள் எங்களது வார இறுதிகளை பயன்படுத்தி கொள்கிறோம்...போன வாரம் கூட ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று வந்தோம்....இந்த துறையிலும் சில நல்லெண்ணம் கொண்டவர்கள் இருக்கிறோம் என்பதை இவர்கள் அறிவார்களா??
மிகவும் சிறிய வயதிலேயே இவர்களுக்கு இவ்வளவு சம்பளம்!!ஆதலால் தான் கண்முன் தெரியாமல் ஆடுகிறார்கள் என்று கூறும் இவர்களால்,இந்த துறையில் இருப்பவர்களின் மன உளைச்சலை உணர முடியுமா என்பது ஒரு கேள்வி குறியே!!!
எங்களில் சிலர் செய்யும் தவறுக்காக எல்லாரையும் குறை கூறுவது தவறான விஷயம்....
சாப்ட்வேர் நிறுவனத்தில் இருக்கும் பலரும் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்கள் தான்...அப்படி இருக்கறப்போ வார இறுதிகளில் எல்லாம் ஊருக்கு போகவே விரும்புகிறோம்...அதுவும் என்னெல்லாம் பார்த்திங்கன்னா ஒரு நாளைக்கு 11 மணி நேரம் அலுவலகத்தில் இருக்கேன்...அப்படி இருக்குறப்போ வார இறுதி ல தான் நமக்காக கொஞ்ச நேரம் எடுத்துகிட்டு நமக்கு பிடிச்ச விஷயங்கள் செய்ய முடியும்...உதாரணத்துக்கு பிடித்த புத்தகங்கள் படிக்கிறது,பாடல்கள் கேட்குறது,கோவில்களுக்கு செல்வது மாதிரி ஏதாவது...மனசுக்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள்...
இதெல்லாம் மறந்துட்டு சும்மா அர்த்தமில்லாம எல்லாரையும் குறை கூறுவது சரியல்ல....
இனிமே, "ஐ.டி பசங்க ரொம்ப மோசம்ப்பா" னு சொல்றதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்றிங்க வார இறுதிகள்ள கொஞ்சம் யோசிச்சு பார்த்துக்குங்க.....!!
Monday, June 9, 2008
கோபம் கொள்ளாதே...
இந்த கோபம் இருக்கே...ஐயோ...மனுசன உண்டு இல்ல னு ஆக்கிடும்.. சரி,முதல்ல நாம ஏன் கொபிச்சுகுறோம் னு யோசிங்க?!கோபம் என்பது முக்கால்வாசி நேரம் நாம் எதிர்பார்த்தது,எதிர்பார்த்த விதத்தில் நடைபெறாமல் போவதால் ஏற்படுவது....ஒரு சின்ன மாறுதலுக்கு எதிர்பார்ப்பே இல்லாமல் இருந்து பாருங்களேன்..அதே போல ஒரு காரியமோ,விஷயமோ 100 சதவிகிதம் சரியாக இருக்கணும் னு நினைக்குறதும்,கோபத்தை ஏற்படுத்தும்...இது போன்றவர்களை ஆங்கிலத்தில் "Perfectionist" என்று சொல்லுவோம்...இவர்கள் எப்போதும் ஒரு பரபரப்புடன் இருப்பதை நம்மால் உணர முடியும்...இது அவர்களை மட்டுமல்லாது அவர்களை சுற்றி இருப்பவர்களையும் வெகுவாக பாதிக்கிறது..
சரி,கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகள்...
Friday, June 6, 2008
தடங்கலுக்கு வருந்துகிறேன் ...
ஆதலால் ஒரு சிறிய இடைவேளை வந்து விட்டது..
தடங்கலுக்கு வருந்துகிறேன்...
ஆனால் இனி மீண்டும் என் எண்ணங்கள் இங்கு எழுத்தாக உரு பெறும்...
பில்லா போல் சொல்ல வேண்டுமானால் "I AM BACK"..
விரைவில் பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன் ....
:)))
Saturday, March 1, 2008
சுஜாதா என்கிற சகாப்த்தம்
28 ஆம் தேதி வழக்கம் போல காலைல பேப்பர் படிச்சுட்டு இருந்தேன் ....."Prolific Writer Sujatha Passes away" னு இருந்தது...
கண்கள ஒருதடவ நல்லா தேச்சுட்டு திரும்ப படிச்சேன்.....
"Prolific Writer Sujatha Passes away" ......அட கடவுளே....இது என்ன...ஒரு அரைமணி நேரத்துக்கு எதுவுமே செய்ய முடியாம ஆயிடுச்சு....
எனக்கு எழுத்தார்வம் வந்ததுக்கும்,பத்திரிக்கைகள் படிக்க ஆரம்பிச்துக்கும் பிள்ளையார் சுழி போட்டதே ...அவருடைய எழுத்துக்கள் தாம்...
இனிமே அந்த மாதிரி ஒரு எழுத்தாளர் நமக்கு கிடைப்பாங்களா ங்கறது ரொம்ப பெரிய சந்தேகம் தான்....
சுஜாதா வ ஒரு முறை நேர்ல பார்த்துருக்கேன் ...ரொம்ப எளிமையா இருந்தாரு...வோடிங் மிஷன் கண்டு பிடித்த பெருமைக்கு உரியவர்...
இனிமே ஒவ்வொரு முறை ஆனந்த விகடன் படிக்கும் போதும்,அவரை ஒரு முறை நெனச்சு பார்த்துக்குவேன்....
சுஜாதா,நீங்கள் இல்லாத குறை தீர்க்க உங்களது படைப்புகளில் ஆறுதல் தேடுகிறேன் ....
கீழே இருப்பவை சுஜாதா இளம் தலைமுறையினருக்காக சொன்ன பத்து கட்டளைகள்
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.
6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.
சுஜாதா, உங்கள ரொம்ப miss பண்றோம்.... :((
Sunday, January 20, 2008
எப்படி இருக்கீங்க...
ஆனா இந்த வாக்கியத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கு னு நான் நேத்து தான் தெரிஞ்சுகிட்டேன் .....
பொதுவா,உடம்பு சரியில்லாம இருக்குறது ஒரு கொடுமைனா,உடல் நலம் சரியில்லாம இருக்கும்போது,தனியா இருக்குறது இருக்கு பாருங்க ........................ஐயோ,அது ரொம்ப பெரிய கொடுமை .....
போன வார முடிவு ல எனக்கு அதான் ஆச்சு......ஆபிஸ்-லயே கொஞ்ச முடியல...சரின்னு அனுமதி கேட்டுட்டு வீட்டுக்கு வந்தா வீட்டுலயும் ஒருத்தரும் இல்லே .....
சரின்னு ஊருக்கு போன் போட்டேன் ...உடம்பு சரியில்ல னு போலம்பிட்டு தூங்கிட்டேன் ....சாயுங்காலம் அம்மா கிட்டருந்து போன்......
" என்னமா.............எப்படி இருக்க ......இப்போ ......"--அப்படின்னு அவங்க கேட்டதே எனக்கு பாதி காய்ச்சல் போன மாதிரி ஆயிடுச்சு ....
இந்த வாக்கியத்துக்கு இவ்வளவு சக்தியா னு .......நானே யோசிச்சு பார்த்துக்கிட்டேன்....அந்த வாக்கியத்துக்கு பாதி சக்தினா,அத கேட்ட உறவு க்கு (அம்மா) இருக்குற சக்தி-யப்பத்தி ...நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல ....
நம்ம மேல உண்மையான அன்பு வச்சுருக்குற ஒருத்தங்க வாயிலருந்து வர்ற வார்த்தைகள் எல்லாமே நமக்கு குறள் மாதிரி தானே ......
இப்ப சொல்லுங்க ..... "எப்படி இருக்கீங்க .........."(இனிமே இந்த வார்த்தைய அதன் அர்த்தத்தையும்,ஆழத்தையும் தெரிஞ்சு பயன்படுத்த போறேன்.....)